பம்பரம்

This entry is part 5 of 43 in the series 29 மே 2011

மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச்  சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது சுழலும் பூமிப்பம்பரம்.

சொர்க்கவாசி

This entry is part 4 of 43 in the series 29 மே 2011

கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை விருட்சங்களை. வீரியம் அடக்கின செடிகளுக்கு வெடித்தபின் வாய்க்கிறது எட்ட நினைத்த உயரம் அளந்து வைத்த அளவு. ரோஜாக்கள் மரமாவதில்லை மாட்சிமை விருது பெறுவதில்லை எனினும் கிடைக்கிறது விருதளிப்பவரின் இதயத்தில் இடம் புத்தக அடுக்குகளூடே ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும் ஒரு புதைகல்லறையும் கிடைக்கப்பெற்றவர் […]

பலூன்

This entry is part 3 of 43 in the series 29 மே 2011

அழுகைக்கு ஆர்தலாய் வாங்கப்படுகிறது சிறுமிக்கான ஒரு பலூன்…. நாள் எல்லாம் விளையாடிய களைப்பில் ஓய்வெடுக்கின்றனர் கட்டியில் சிறுமியும் ஜன்னலில் பலூனும்…. மின்விசிறி காற்றில் கசிந்து கொண்டிருந்தது பலூன்காரனின் வாய்காற்று….

மோனநிலை..:-

This entry is part 2 of 43 in the series 29 மே 2011

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை..

கோமாளி ராஜாக்கள்

This entry is part 1 of 43 in the series 29 மே 2011

ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக் கவனிக்க ஏலாமல் யார் யாரின் அந்தப்புரத்துள்ளோ அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் ராஜாக்கள். சிரச்சேதம் செய்யப்படலாம்.. சேதமுற்றே திரிவோர்க்கு சிரச்சேதம் பெரிதா என்ன.. ராஜாக்கள் கூஜாக்களாய் பின் கோமாளிகளாய்..

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

This entry is part 21 of 43 in the series 29 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”   கலில் கிப்ரான். (Mister Gabber)     +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++       இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)

This entry is part 32 of 42 in the series 22 மே 2011

  ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : “நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?” நீ சொல்வாய் : “நான் அறிவேன். அதனில் நான் மட்டு மில்லை. மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன் பற்றி யுள்ளன என்னை ?” நான் உரைத்தேன் : உனது பிரதி பலிப்புகள் அவை எல்லாம் ! ஒருவரை ஒருவர் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)

This entry is part 31 of 42 in the series 22 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் நண்பன் ஒருவனிடம் பேச உட்காரும் போது திருவாளர் பிதற்றுவாய் அழைக்கப் படாமலே மூன்றாவது நபராய் எம்மோடு ஒடிக் கொள்வார்.  நான் ஒதுக்கினாலும் எப்படியாவது நெருங்கிக் கொண்டு தன் பிதற்றலை எதிரொலித்து எனக்குச் சின மூட்டுவார். அது என் வயிற்றைக் கலக்கிக் கெட்டுப் போன புலாலாகத் தொல்லை கொடுக்கும்.” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++இசை ஆத்மாவின் நாதம்+++++++++++ என்னிதயம் கவர்ந்த வனிதை அருகே அமர்ந்து […]

கை விடப்பட்ட திசைகள்..

This entry is part 30 of 42 in the series 22 மே 2011

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும் இளமையென கை  விடப்பட்ட சந்தர்ப்பங்கள்.. ***** –இளங்கோ

இவைகள் !

This entry is part 29 of 42 in the series 22 மே 2011

ஒரு பறவையின் நீலச் சிறகு … இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை … அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் … தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் … கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு ….. பூட்டிய வீட்டின் முன் விட்டெறிந்த கடிதம் … மற்றும் என் வருகைக்காக காத்து பதுங்கி முகம் புதைத்திருக்கும் கருப்பு நிற நாய்… இவைகள் ., இவைகள் மட்டும்தான் இன்று எனக்கு சொந்தமானவை ….! […]