குரு அரவிந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி […]
புத்தகக்கடைக்கு மனைவியையும் அழைத்துச்சென்றேன் வயோதிகத்தில். கோயில்,குளமோ போகாமல் புதுமைப்பித்தனையும் கி.ரா.வையும், பிரமீளையும், ஜெயகாந்தனையும் காட்டியவுடன் மிரண்டுப்போய், மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழிக்கேட்டாள். அந்த தெய்வம் இங்கும் இருக்கின்றது வா, வாங்கிப்படிக்கலாம். இனி படியேறி, முருகனை அடையமுடியாது. முட்டிவலி, முதுகுவலி, கைக்கால் குடைச்சல். டிவி சீரியல் ஒருபக்கம், யுடியூப் மறுப்பக்கம் பார்த்தது போதும் படி இந்த புத்தகங்களையும் படி. கடற்கரை காற்று வீணாகப்போகின்றது நட்சத்திரங்கள் நடைக்கட்டி ஆடுகின்றது. குடிசையில் கோலமயில் பாடுகின்றது. வண்ணமயமான வாழ்க்கை இந்த புத்தகங்களில் விரிகின்றது. […]
ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில் சென்று, அவர்கள் தரும் சிகப்பு நிற மழைக்கோட் அணிந்து தூவானத்தில் நனைந்து ‘மெயிட் ஆப் த மிஸ்ட்’ ஐப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு உறைந்து போன நயாகராவைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனிதமனங்களும் இப்டித்தான் […]
சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் […]
பி.கே. சிவகுமார் (திருச்சி தந்தை பெரியார் அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழாய்வுத் துறையும், நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் படைப்புகள் குறித்த இருநாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கை ஜனவரி 7-8, 2025 அன்று நடத்தின. இக்கருத்தரங்கில் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு திரையிடப்பட்ட கட்டுரையின் எழுத்து வடிவம் இது.) நண்பர்களுக்கு வணக்கம்! வட்டார வழக்கில் கதை சொல்வது என்பது அந்தப் பகுதியில் புழங்கும் பேச்சு வழக்கைக் கவனித்து, பெரும்பாலும் புழங்கும் உச்சரிப்பையும் மொழியாளுகையையும் பிரதியெடுப்பதாகக் […]
படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார். 1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர். 1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய […]
குரு அரவிந்தன். வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில் கணினித் துறையின் புதிய சிந்தனை மற்றும் செயல் வளமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவியல் துறைக்கான பல கூறுகளும் அத்துறையின் சிந்தனை மற்றும் செயல் நேர்த்திக்கும் வழிவகை காட்டுகின்றது திருக்குறள். திருக்குறளை இன்றைய செயற்கை நுண்ணறிவியல் […]