Articles Posted in the " அரசியல் சமூகம் " Category

 •     வைதீஸ்வரனின் ஆவணப்படம்….

           அழகியசிங்கர்               சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரனுடைய ஆவணப்படம் ஒன்று அவர் பிறந்த நாள் போது காட்டப்பட்டது.  குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தயாரித்த ஆவணப்படம். நிழல் பத்திரிகை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இயக்கிய படம். அறை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பாக எடுத்திருந்தார் நிழல் திருநாவுக்கரசு.ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் கொஞ்சங்கூட தொய்வில்லாமல் எடுக்கப் பட்டிருக்கிறது. இது முக்கியம்.  வைதீஸ்வரனையே மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கிறது.              இப்போது வைதீஸ்வரனுக்கு நெருக்கமாக இருக்கிற நண்பர்களையும் ஒரு நிமிடமாவது ஆவணப்படத்தில் பேச வைத்திருக்கலாம் என்பது என் […]


 • பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!

                                                                         முருகபூபதி சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.  “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் […]


 • படியில் பயணம் நொடியில் மரணம்

  படியில் பயணம் நொடியில் மரணம்

    முனைவர் என். பத்ரி              சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல்,புகை பிடித்தல்,ஆசிரியர்களை கேலி செய்தல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவதும்   காணொளிகளாக  சமூக வலைதலங்களில் வேகமாக  பரவி நம்மை மிகவும் வேதனைப்படுத்துகின்றன.          பேருந்து புறப்பட்ட உடன் ஓடி வந்து ஏறுவது, ஆபத்தை உணராமல் ஒரு காலை தரையில் தேய்த்தபடி பேருந்து  படிக்கட்டில் பயணிப்பது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு […]


 • மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

  மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு

    மதுரை சித்திரைத்திருவிழாவில் நாடோடியினப் பழங்குடிகளின்  பங்கு (சித்திரைத் திருவிழாவில் கொண்டாட்டத்தின் உருவங்கள்) பா.மாரிமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை, நிகழ்த்துக் கலைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-625021. முன்னுரை : திருவிழா என்றாலே மக்களின் கூட்டமும் கொண்டாட்டமும் நம் நினைவுக்கு வருவது இயல்பே, சுருக்கமாக மக்களின் கூட்டமான கொண்டாட்டமே திருவிழா எனக்கொள்ளலாம். சித்திரை திருவிழாவில் சக்கிமங்கலம் எனும் இடத்தைச் சேர்ந்த பழங்குடியினர் (நாடோடிகள்) பகல் வேஷம் போடும் மக்கள் அதிகம் பங்குபெற்றனர். […]


 • கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர்

    படித்தோம் சொல்கின்றோம் கனடா தமிழர் தகவல் இதழின் 30 ஆவது ஆண்டுமலர் புதிய தலைமுறையையும் உள்வாங்கியிருக்கும் இளமகிழ் சுவடு                                                     முருகபூபதி கனடாவின் மூத்த தமிழ் இதழ் என்ற பெயரையும் பெருமையையும் பெற்றிருக்கும்,  தமிழர் தகவல் 30 ஆவது ஆண்டுமலரை அண்மையில் படிக்க நேர்ந்தது. தமிழர் தகவலை கடந்த மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக வெளியிட்டுவரும், இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்  “ எஸ்தி  “ என அழைக்கப்படும் எஸ். திருச்செல்வம் அவர்களின் கடின […] • பூகோளம் முன்னிலைக்கு மீளாது  

  பூகோளம் முன்னிலைக்கு மீளாது  

          காலவெளி  கார்பன்  வாயு கலந்து   கோலம் மாறிப் போச்சு !  ஞாலத்தின் வடிவம்   கோர மாச்சு !  நீர்வளம் வற்றி   நிலம் பாலை யாச்சு !  துருவத்தில்  உருகுது பனிக் குன்று !  உயருது  கடல்நீர் மட்டம் !    பூகோளம் சூடேறி  கடல் உஷ்ணமும் ஏறுது !  காற்றின் வேகமும் மீறுது !  பேய்மழை  நாடெல்லாம் பெய்து  வீடெல்லாம் வீதியெல்லாம் மூழ்குது !  வெப்ப யுகத்தில்  காடெல்லாம் எரிந்து  கரிவாயு   பேரளவு […]


 • இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                      முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த ஆறு தசாப்த காலத்திற்கும் மேலாக  எழுத்தூழியத்தில் ஈடுபட்டு வந்திருக்கும் கே. எஸ். சிவகுமாரன் மட்டக்களப்பில் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி பிறந்தவர்.  இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகம், அறிவியல், […]


 • உணர்வுடன் இயைந்ததா பயணம்?

  உணர்வுடன் இயைந்ததா பயணம்?

  சியாமளா கோபு    அத்தியாயம் 1  பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.  இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம், காது குத்து மொட்டை சடங்கு  போன்ற சுபகாரியங்களுக்கும் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளுக்குமானதாக இருக்கும்.  அடுத்த கட்டமாக நம் ஊரில் நடக்கும் தேர் திருவிழாவிற்கானதாக இருக்கும். குறைந்தது பத்து நாட்களுக்கு வெளியே தெருவிலே ஏகக் […]