“கீதா.. இன்னிக்கு ராதாவுக்குப் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறதா?” “எனக்கு ஞாபகம் இருக்கவில்லை.. ஆனால் தெரியும்..” “என்ன சொல்லறே.. புரியலையே!” “எனக்கு அவள் பிறந்த நாள் இன்று என்பது ஞாபகம் இல்லை. ஆனால் இன்று என்பதை பேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்டேன். இப்போ புரியதா?” “அப்படியா? அவளுக்கு என்ன பரிசு தரலாம்?” “நான் பரிசும் கொடுத்துட்டேன்..” “கொடுத்துட்டியா? என்னை விட்டுட்டியே?” “பைசா செலவில்லாமே.. பரிசை அனுப்பிட்டேன். நீயும் பரிசு கொடுக்கலாம்..” “என்னது செலவில்லாமையா? அப்படி என்ன பரிசு?” […]
சென்ற வாரம் கிறிஸ்துவம் ஐரோப்பாவில் கோலோச்சிக்கொண்டிருந்த மத்திம காலத்தில் புனிதர்கள் என்று அறியப்பட்டவர்களின் டெம்போரல் லோப் வலிப்பு எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கியது, அது எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது, அவர்களை மற்ற கிறிஸ்துவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதை பார்த்தோம். இந்த புனிதர்கள் தங்களுக்கு இயேசு காட்சியளித்தார் என்பதையும், மேரி காட்சியளித்தார் என்பதையும் உலகுக்கு சொன்னதும் அது எவ்வாறு கிறிஸ்துவத்தை வலுப்படுத்தியது என்பதையும் அறிந்தோம். ஒரு சமூகத்தின் உள்ளே இருக்கும் பாதிப்புகள், சூழ்நிலைகள் இப்படிப்பட்ட டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள்களையும் […]
“சேகர்.. உங்க அப்பா இப்போ எப்படி இருக்காரு?” “நாளைக்கு அவசரமா அறுவை சிகிச்சை செய்யணுமாம்.. அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது.. அதுக்குத்தான் அலையறேன்..” “என்ன இரத்தம் தேவை?” “ஓ-பாசிடிவ்..” “அப்படியா.. இரு.. இன்னும் ஐந்தே நிமிஷத்திலே உனக்கு கிடைக்கச் செய்யறேன்” “ஐந்து நிமிஷத்திலையா.. நான் நேத்துலேந்து அலையறேன்..” “சோசியல் பிலட்-ன்னு பேஸ்புக்ல ஒரு பயன்பாடு இருக்கு. அதில் நமக்குத் தேவையான இரத்த வகையைச் சேர்ந்தவரை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம்..” “அப்ப உடனடியா செய்து, இரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்தா.. […]
புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1 (பிப்ரவரி 2, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருது கின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய […]
ஐரோப்பாவில் கிறிஸ்துவம் கேள்விக்கு அப்பாற்ப்பட்டதாக இருந்த காலத்தில் இது போன்ற டெம்போரல் லோப் வலிப்பு நோய் பெற்றவர்கள் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஆராய்வது இன்னும் சில சுவாரஸ்யமான சிந்தனைகளை நமக்கு தரும். கிறிஸ்துவ இறையியலாளர்களாக இப்படிப்பட்டவர்கள் பலர் அடையாளப்படுத்தப்பட்டாலும் இவற்றில் சில முக்கியமானவர்களை இங்கே அணுகலாம். — செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. […]
(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு போன வல்லரசு அரக்கர் பின் சென்று பாரத அன்னைக்குப் பேரழிவுப் போரா யுதத்தை ஆரமாய் அணிவிக்க லாமா […]
சமீப காலத்தில், ஜோஸப் ஸ்மித் ஜூனியர் உருவாக்கிய மார்மனிஸம் மதத்தை விட பெரிய மதத்தை உருவாக்கியவர் என்று ஒருவரை குறிப்பிடலாம் என்றால், பஹாவுல்லா என்று அழைக்கப்படும் மிர்ஸா ஹூசைன் அலி நூரி என்ற ஈரானியரை குறிப்பிடலாம் மிர்ஸா ஹூஸைன் அலி நூரி நவம்பர் 12 ஆம் மாதம் 1817இல் , பெர்ஷியா (ஈரானின்) தலைநகரான டெஹ்ரானில் கதிஜா கானும் என்ற அம்மையாருக்கும், மிர்ஸா புஸுர்க் என்பவருக்கும் பிறந்தார். இவரது வரலாற்றை கூறுமுன்னர், பாப் bab என்று தன்னை […]
Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்” தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன! அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் […]
இந்த பகுதியில், எவ்வாறு டெம்போரல் லோப் வலிப்பு நோய், ஒரு புதிய மதத்தை உருவாக்கியது என்பதை பார்க்கலாம். அதே நேரத்தில் எவ்வாறு ஒரு புதிய மதம், அதற்கு முன்னால் வந்த மதங்களின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதன் தூய வடிவாகவும் தன்னை தகவமைத்துகொள்கிறது என்பதையும் காணலாம். தற்போதைய அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களில் முதலாவதாக வந்துகொண்டிருப்பவர் மிட் ராம்னி என்ற மோர்மன் பிரிவைச் சேர்ந்தவர். மோர்மன் பிரிவு என்பது என்ன? மோர்மன் […]