அப்பா

This entry is part 5 of 38 in the series 20 நவம்பர் 2011

திரும்பிப் பார்க்கிறேன். என் ஐந்து வயது முதல் இதோ இதைச் சொல்லும் இந்த நாள்வரை. எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கிறேன். ஐந்து வயது. கலரான பாட்டிலில் எது இருந்தாலும் அதைக் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அடுக்களையின் மூலையில் இருந்த அந்த பச்சை நிற பாட்டிலை எடுத்து இரண்டு முடக்கு குடித்துவிட்டேன். ‘என்னாங்க’ என்று அலறிக்கொண்டு அம்மா ஓடிவந்தார். மேல் சட்டை இல்லாமல் அப்பாவும் ஓடி வந்தார். நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் குடித்தது மண்ணெண்ணெய். அப்பா ஒரு துண்டைப் […]

முள் எடுக்கும் முள்

This entry is part 13 of 38 in the series 20 நவம்பர் 2011

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான். சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன […]

ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்

This entry is part 2 of 38 in the series 20 நவம்பர் 2011

சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத் தாவிப் பறக்கும். இவற்றை விரட்டுவதும் கஷ்டம். கால் கைகளில் உட்கார்ந்தால் கூடப் பரவாயில்லை. முதுகில்போய் உட்கார்ந்து கடிக்கும். அடிக்கும்போது விட்டலாச்சார்யா படம்போல மாயமாய் எங்கோ போய்விடும். எப்போதாவது தவறி சரியாக அடித்துவிட்டால், சாவதற்குமுன் சுள்ளென்று […]

வட கிழக்குப் பருவம்

This entry is part 20 of 41 in the series 13 நவம்பர் 2011

     ரமணி   நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது.  உடனே ஒரு  ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம் இன்னொரு இயக்கத்தைச் சந்தித்தது. ஆனால், மழையில் ரெய்ன்கோட்டை உபயோகிக்க வாய்ப்பு வரவில்லை இன்னும்.  இருந்தாலும் திபாவளிக்குப் புது ட்ரெஸ் போட்டுக்கொள்வது மாதிரி  மஞ்சள் குங்குமம் எல்லாம் தடவி டி.வி யில் நாதஸ்வரம் ஒலிக்கப் போட்டுக்கொண்டு கழற்றிவைத்துவிட்டோம்  . இந்த ஸீஸனுக்கான மழை ,கோடை மழைபோல இருக்காது. இது ட்ராவிட் ஆட்டமென்றால்,  […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15

This entry is part 27 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது போராட்டம் இப்போது நம்மோடுள்ள பிசாசுகளைத் துரத்துவது அல்ல.  பாட்ஜர் விஸ்கி தரும் பணத்தை வாங்காமல் தவிர்ப்பதே !  அடுத்து நீங்கள் வெடிமருந்து விற்பனைப் பணத்தை இருகை நீட்டி வாங்க வழி வைத்தீர் !  இது எனக்கு அறவே பிடிக்க வில்லை !  நமது சல்வேசன் சாவடியை விஸ்கி மதுவுக்கும், வெடி மருந்துக்கும் அடிமைக் கூடமாய் ஆக்கி விட்டீர்.” ஜார்ஜ் […]

முன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்

This entry is part 26 of 41 in the series 13 நவம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ”நேராச்சி… நான் கிளம்பணும்” என்றார் கியுரேட். என் பக்கமாய்த் திரும்பினார். ”நாம ஒண்ணா நடந்துறலாமா. எனக்கு எதுவும் வாசிக்கத் தர்றிங்களா திரிஃபீல்ட்?” திரிஃபீல்ட் அறைமூலை மேசைமேல் குவிந்துகிடந்த புதிய புத்தகங்களின் குவியலைக் காட்டினார். ”பாத்து எடுத்துக்கலாம்.” ”என்ன அற்புதம், இத்தனை புத்தகமா?” என அவற்றை ஆசையாய்ப் பார்த்தார் கல்லோவே. ”ச். எல்லாம் குப்பை. திறனாய்வுக்குன்னு அனுப்பிருக்காங்க.” ”இதை வெச்சிக்கிட்டு நீங்க என்ன செய்விங்க?” ”எல்லாத்தையும் தெர்கன்பரி எடுத்திட்டுப்போயி எடைக்குப் போட்டால் நாலு காசு […]

பஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்

This entry is part 34 of 41 in the series 13 நவம்பர் 2011

சிங்கமும் தச்சனும்   ஒரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித் திரிந்தபடி மாமிசபக்ஷணிகளான ஒரு நரியும் ஒரு காக்கையும் இருந்தன. ஒருநாள் காட்டில் சிங்கம் தனியே திரிந்து கொண்டிருக்கும்போது அந்தத் தச்சனைக் கண்டு விட்டது. தச்சனும் அந்த பயங்கரமான சிங்கத்தைப் பார்த்துவிட்டான். ‘இனி செத்தோம்’ என்று […]

காக்காப்பொண்ணு

This entry is part 11 of 41 in the series 13 நவம்பர் 2011

  காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட. நேற்று மாலைக் கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, தங்கையுடன் மாமா ஊருக்கு. அக்காவைக்கட்டிக்கொடுத்தஇடம்.மாமாவுக்குபனியன்கம்பெனியியில் வேலை. அங்கு போய் அப்படியே பிழைப்பை ஓட்டிக் கொள்ளலாம் என திட்டம்.ஆனால் முத்துவிடம்கூடஒருவார்த்தைசொல்லவில்லை. இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில்தான் வேலை.முத்து நிமிந்தாள்.காளியம்மா சித்தாள்.” அக்காவவிட தம்பிக்கு சம்பளம் ஜாஸ்தி” சாப்பாடு நேரத்தில் காளியம்மா ஆதங்கமாய் கேலி செய்தாள். முத்துவுக்கும் காளியம்மாவிற்கும் இரண்டு வருடங்கள் வித்தியாசமிருக்கும்.ஓங்கு தாங்காகஇருப்பாள்.கருப்பிலும்கலப்பில்லை.புதுநிறத்திலும் சேர்த்தியில்லை. ஒழுங்கற்றது […]

முன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்

This entry is part 50 of 53 in the series 6 நவம்பர் 2011

தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன் சட்டென சீதோஷ்ணநிலை உருமாறி விட்டது. திடீரென குளிராய் இருந்தது. சடசடவென கனமான மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் பொதுவாக சைகிளில் சற்றித் திரிகிற பயணம் தடைப்பட்டுப் போனது. எனினும் எனக்கு அதில் வருத்தம் ஒன்றுமில்லை. அந்த ஜார்ஜ் கெம்ப்போடு அவளை ஒண்ணாப் பார்த்துத் தொலைத்தபிறகு, இப்ப திருமதி திரிஃபீல்ட் முகத்தை எப்பிடி நேருக்கு நேர் சந்திப்பது, என்னால் முடியுமா அது? அந்தக் காட்சி என்னைக் கலவரப்படுத்தியது, ஆனால் அதிர்ச்சிப் படுத்தவில்லை தான். ஒரு பெரியாம்பளை […]

பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்

This entry is part 49 of 53 in the series 6 நவம்பர் 2011

ஏமாந்துபோன ஒட்டகம்   ஒரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ பயணம் புறப்பட்டான். போகிற வழியில், விகடன் என்கிற ஒட்டகம் பாரம் தாங்க முடியாமல் துன்பப்பட்டு, உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தது. அதன்மேலிருந்த துணி மூட்டையை வியாபாரி கீழிறக்கிவைத்தான். மூட்டையிலிருக்கும் துணிகளைப் பாகம் பாகமாகப் பிரித்து மற்ற ஒட்டகங்கள் மீது சமபாரமாக ஏற்றினான். ‘இந்தக் காடு பயங்கரமாயிருக்கிறது, இங்கே தங்க முடியாது’ என்று முடிவு […]