மீள்தலின் பாடல்

  ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல் தொய்வுகளேதுமின்றி எழுதிவந்த விரல்கள் வெளியெங்கும் புன்னகையை விதைக்கும் இதழ்களோடும் விழிகளோடும் சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன இரவு பகல் காலநிலையென மாறும் காலக்கணக்குகளறியாது ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன் ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது  …

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

A.P.G சரத்சந்திர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா…

சூறாவளியின் பாடல்

    பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது   இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது   சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும் சுற்றித்திரிய நேரிடும்போது இரைச்சல்கள்…

பின்னற்தூக்கு

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப்…

கொக்குகள் பூக்கும் மரம்

    தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்   வெள்ளைப் பூக்களென…
சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள்…

தெளிதல்

    ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள் மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன வாழ்வைப்…

நவீன தோட்டிகள்

    'இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்' கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது.  …

நள்ளிரவின்பாடல்

  நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை…

ஒரு காதல் குறிப்பு

  பௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா?…