ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள்…
காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது.…

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

    மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம்   நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை   உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப்…

எதிரி காஷ்மீர் சிறுகதை

  - ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்   நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.…

நான் இசைக்கும் ஒற்றைப்பாடல்

    சந்திப்பதற்கான ப்ரியம் பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து ஆரம்பிக்கிறது உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம் தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி   ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது நீ பரிசளித்த அக் கிளி சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை…

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

  நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப்…

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு…

செங்குருவி

    மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் செங்குருவிக்குப் பிடித்தமானது   அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம் சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில் குளத்தில்…

வெற்றி மனப்பான்மை

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு…

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல்…