தேனீச்சையின் தவாபு

முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து தன் தவாபை…

மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடுகலை இலக்கியப்பெருமன்றம் திருவண்ணாமலைக் குழுவின் சார்பில் மாற்றுத்திரை 2011 குறும்பட,ஆவணப்பட திரையிடல் நிகழ்வும் கருத்தரங்க அமர்வுகளும்திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் 2011 ஆகஸ்டு 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற உள்ளது. இணைப்பு நிகழ்ச்சிநிரல்

புத்தன் பிணமாக கிடைத்தான்

காட்டிடையே வருவோர் போவோரின் விரல்களை எல்லாம் துண்டுதுண்டாய் வெட்டி நறுக்கி மாலையாக்கிப் போட்டுத் திரிந்த அங்குலிமாலாவின் துரத்தல் தொடர்கிறது. புத்தன் அகப்படவில்லை போதிமரத்தடியில் கிடைத்த ஞானத்தை எல்லோருக்கும் வாரிவழங்கி வெற்றிடமாய் போனேன் வருத்தப்பட்டு உரையாடிக் கொண்டிருந்த புத்தனின் கழுத்தில் சயனைடு பாட்டில்கள்…

பொம்மை ஒன்று பாடமறுத்தது

ஹெச்.ஜி.ரசூல் குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை பொம்மை ஒன்று பாடமறுத்தது பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும் பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன பூக்களைதலையில் சூட்டியும் நாசியால் முகர்ந்தும் குழந்தைகளை இடுப்பில் தூக்கியும் முத்தம் கொடுத்தும் துப்பாக்கிமுனைகளை துடைத்தும் சுடுவதாய் பாவனை செய்தும் பொம்மைகள்…

வாளின்பயணம்

1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2…

காக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையும் நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறையும் இணைந்து ஒருங்கிணைக்கும் கவிதை எழுத்து பயிலரங்கம் ஆகஸ்டு15,16 ஆகிய தேதிகளில் அக்கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. சங்ககாலகவிதை அகமும் புறமும்,பக்திமரபுஆண்டாள் காரைக்கால் அம்மையாரை முன்வைத்து,அருணகிரிநாதரும்…

பிணம் தற்கொலை செய்தது

அசைவற்று கிடந்தது பிணம் அதன்மீது அழுகைஒலிகள் தேங்கியிருந்தன வார்த்தைகளில் சொல்லமுடியாத துயரத்தின் ரேகை படர்ந்திருந்தது. எழுந்து நடந்து செல்ல முடியாதென்பது பிணத்திற்கு தெரிந்திருக்க கூடும் தன்னை எரிப்பதற்கோ அல்லது புதைகுழியில் அடக்குவதற்கோ எதுவாக இருப்பதற்கும் தயாராயிருந்தது. பிணங்களோடு வாழ்தலில் உள்ள ஆர்வம்…

இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி

இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய் தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம். சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும் கருகிய வேதனையின் வரைபடம்…

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக நகரங்களை உருவாக்குபவன் என்வீதிவழியே வந்து என்னை தட்டி எழுப்பிச் சென்றான். கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து இரவின் கதையை எழுத பிறையின் ஒளியை முத்தமிட்டு அதிசயித்து பார்க்கும் கண்கள் மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.…

மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில்…