நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1

This entry is part 2 of 10 in the series 17 ஏப்ரல் 2016

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ https://youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPs http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ நைல் நதி நாகரீகக் கோபுரம் ஐயாயிரம்  ஆண்டு வயது மேடகம் ஒயில் மிக்க உன்னதக் கூம்பகம் சதுரப் பீடம்மேல் எழுந்த ஓர் கோணகம்! புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்! சிற்பமும், சின்னமும் செதுக்கிய களஞ்சியம்! கற்பாறை தமை அடுக்கிக் கட்டிய அற்புதம்! பூர்வீக உலகின் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ 5000 ஆண்டுகளுக்கு […]

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை

This entry is part 4 of 10 in the series 17 ஏப்ரல் 2016

ப.கண்ணன் சேகர் முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பண்ணிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை மீட்டிட செய்வது மரபியல் பலமாகும்! மடையிலா அழகென மயக்கிடும் தாஜ்மகால் மாற்றாக வேறொன்று மனதாலும் சிறக்குமா! குடைவரை கோவிலும் கோமல்லை சிற்பமும் கொட்டிடும் அழகினை குவலயம் மறக்குமா! விடையிலா வியப்பென வளமிகு தஞ்சையில் வீற்றிடும் […]

புரியாத மனிதர்கள்….

This entry is part 5 of 10 in the series 17 ஏப்ரல் 2016

வாணமதி கொடியநோயில் கொடுரமான மரணத்தை மனமார இரசித்தேன் இறப்பென்பது உன்றெண்டு உணர்த்திய நிமிடம் உறவென்ற உயிர்கள் எட்டவே எட்டிப்போக எப்படிச்சொல்வேன் எந்தன்வலியை? நிஜமென்ற யாவும் நிஜமல்லவென்று நிமிடங்கள் நிஜமாக்கியபோது… உதிர்ந்த முடியும் ஒட்டியகண்ணமும் கறுத்ததேகமும் எலும்போடியைந்த தசையும் மருந்தின் நெடியும் இரத்தமும் சதையுமான வலியும் எங்கேயோ இருக்கும் எமனை என்னருகில் காவல்வைத்த நொடியும் கண்களில் நிழலாடுது மனதுக்குள் மகுடமாக நான்வளர்த்த உறுதி எட்டவே செய்தது எட்டியவந்த எமனையும் அறுத்த சதைகளை அஞ்சாது பார்த்து ஆடியோடிய வாழ்வை அசைக்கவைத்த […]

மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு

This entry is part 9 of 10 in the series 17 ஏப்ரல் 2016

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை அவர்களின் ஆலோசனையுடன் ஏற்பாட்டுக்குத் குழுத்தலைவராக முன்னாள் சங்கத் தலைவரும், இன்றைய அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான திரு.பெ.இராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வின் செயலாளர் திருமதி.விஜயராணி செல்லப்பா  நிகழ்வு தடையின்றி நடைபெற […]

எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்

This entry is part 1 of 10 in the series 17 ஏப்ரல் 2016

  முருகபூபதி  –  அவுஸ்திரேலியா சென்னை    மழை வெள்ளத்தின்   காரணிகளை துல்லியமாக   ஆராய்ந்த   சுற்றுச்சூழல்   ஆய்வாளர்                                                        அவுஸ்திரேலியாவுக்கு  நான்   வந்தபின்னர்,  தமது  மறைவுவரையில் எனக்கு   அடிக்கடி  கடிதங்கள்  எழுதியவர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தன்.   இலங்கையில்   நடைபெறும்  கலை,   இலக்கிய  நிகழ்வுகள் பற்றிய    தகவல்கள் அவற்றில்  இருக்கும்.   மின்னஞ்சல்,  இணையத்தள  வசதிகள்   இல்லாத  அக்காலப்பகுதியில்,  அங்கு  நடைபெறும் (சமகால)   நிகழ்வுகளை   உடனுக்குடன்  அவர் கடிதங்கள்  தெரிவிக்கும். அந்நிகழ்ச்சிகளில்   பேசுபவர்கள்  பெரும்பாலும்  எனக்கு  நன்கு  தெரிந்தவர்களாகத்தான்  இருப்பார்கள்.  ஆனால், […]

தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

This entry is part 3 of 10 in the series 17 ஏப்ரல் 2016

                    1. பரமேஸ்வரன். சிங்கப்பூரின்  வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப்  போற்றப்படுகிறார். அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு  உதவிச்  செயலாளராகப் பணியாற்றினார். 1811ல் ஜாவா தீவிலிருந்த டச்சு காலனிமீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றினார். அவரையே அந்தக் காலனிக்கு ( இன்றைய ஜாக்கர்த்தா ) ஆளுநராக நியமணம் செய்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஐரோப்பாவில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டபின் […]

குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

This entry is part 6 of 10 in the series 17 ஏப்ரல் 2016

  முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்   (ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர். – முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்) தமிழ்ச் சிறுகதை என்னும் இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது. செய்யுள் வடிவாக இருந்த தமிழ் இலக்கியம் மேலைத் தேயத்தவர் வருகையால் உரைநடை இலக்கியம் என்ற புதிய வடிவத்தையும் பெற்றுக் […]

நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

This entry is part 7 of 10 in the series 17 ஏப்ரல் 2016

    என் செல்வராஜ்      குறைந்தது நான்கு  பரிந்துரை (தொகுப்பு,  பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற  சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப் குமார் தொகுத்து  ஏப்ரல் 13 ல்  வெளியான தி தமிழ் ஸ்டோரி என்ற […]

கவிதைத் தேர்

This entry is part 8 of 10 in the series 17 ஏப்ரல் 2016

  சேயோன் யாழ்வேந்தன்   புறப்பட்டுவிட்டேன் கவிதைத் தேர் ஏறி காலச்சக்கரம் பூட்டி இலக்கணக் கடையாணி கழற்றி கற்  பனைக் குதிரை கட்டி சக்கரத்தில் ஒன்று முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் ஓட நாற்றிசையும் சுழல்கிறது என் தேர் நின்றது நின்றபடி!  

குழந்தை

This entry is part 10 of 10 in the series 17 ஏப்ரல் 2016

அதியன் ஆறுமுகம் ………………………………….. சின்னவன் காதைப் பெரியவன் திருக சின்னவன் நறுக்கென அண்ணனைக் கிள்ள வீட்டின் முற்றத்தில் நாட்டப்பட்டது மூன்றாம் உலகப் போருக்கான அடிக்கல்! நெற்றியில் வழியும் வியர்வை நீரைச் சேலை முந்தானையில் துடைத்தப்படி சமையற்கட்டிலிருந்து சமாதான புறாவாக அம்மா பறந்துவர முகத்தில் அனல் தெறிக்க இருவரும் விலகிச் சென்றனர். சற்று நேரத்திற்குப் பின்…. அதே முற்றத்தில் தம் விளையாட்டைத் தொடங்கினர் அக்குழந்தைகள் இருவரும்! ………………………………………………….. அதியன் ஆறுமுகம்.