தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் அங்கே இருப்பது சித்தார்த்துக்கு இடைஞ்சலாக இருந்தது. கண்களை மூடி படுத்திருந்தானே தவிர தூக்கம் வரவில்லை. ஒருக்களித்துப் படுத்தான். அவளுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொள்வது மரியாதைக் குறைவாக இருக்குமோ என்று தோன்றியது. மல்லாந்துப் படுத்தான். அதுவும் வசதியாக இருக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து கொண்டான். “நர்ஸ்!” அழைத்தான். “என்ன வேண்டும்?” மைதிலி அருகில் வந்தாள். […]
மகேஷ் குமார் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே ஒரு அரசியல் சேவகர் முழக்கமிட்டுகொண்டிருந்தார். பெரும்பாலான தேசியவாதிகளைப் போல, அவரும் தன்னுடைய குரல் பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகெங்கும் கேட்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். சோகமான உண்மை என்னவென்றால், இந்த போராட்டங்களுக்கெல்லாம் எந்த வித பயனும் […]
சோமா நண்பர்களுக்கு வணக்கம். அலைபேசி அறிமுகமான பின்பு உறவினர்களுக்கு காகிதக்கடிதம் எழுதுவது நின்று போனது. சமூக வலைதளங்கள் விரித்த வலையில் மின்னஞ்சல்கள் எழுதுவது வீண் என்று தோன்றி எழுதுவதை மறந்துவிட்டேன். இன்று நான் இந்தக் கடிதம் எழுதுவது ஒரு அனிச்சையான செயல். அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் பிச்சைக்காரனின் தட்டில் விழும் சில்லரைகளைத் திருடுவதில் இந்த மோடி அரசாங்கம் காட்டும் அக்கறையை எண்ணி இந்தக் கடிதம் பிறந்திருக்கிறது. “மோடி” மந்திரத்தில் பாரதம் சேமம் பெறாதா? என […]
தோட்டக்காரர் கூட்டித் தள்ளும் சருகுகளூடே வாடிய பூக்கள் கணிசமுண்டு தோட்டத்துக் கனிச் சுவையில் காய் அதிருந்த பூ நினைவை நெருடா மாறாப் புன்னகை எப்போதும் எதையோ மறைக்கும் என்பதை விழிகள் உணரா புன்னகை விரிப்பைத் தாண்டி விழிகள் அடையா மலரின் மர்மம் ஏக்கம் மனக்குமிழ்களாய் கொப்பளிக்கும் மலர் எது? வண்ணமில்லாததா இல்லை வாசமில்லாததா? இரும்புத் தட்டில் எடைக்கல்லின் இணையாவதா? ரசாயனப் புன்னகை பிளாஸ்டிக் பைக்குள் விரிக்கும் பூங்கொத்தா? இதழ்கள் சிறகுகள் என்றே விரித்து விரித்து முயன்று முயன்று […]
நீச்சல்காரன் நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலை குறித்துத் தற்போது அதிகம் விவாதிக்கிறோம். இணையச் சமநிலை என்பது பாரபட்சமற்று அனைத்து இணையத்தளங்களும் ஒரே மாதிரியான கட்டணமும், வேகமும், அனுமதியும் வேண்டும் என்பதாகும். இது சில நாடுகளில் சட்டவடிவமாகவும் உள்ளது. ஆனால் தற்போது விவாதிக்கப்பட்டுவரும் இணையச் சமநிலை என்பது இலவச பயனுருக்கள் மற்றும் இலவச இணையத்தளங்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுகிறது. அதாவது பணமிருப்பவர்கள் தங்கள் இணையத்தளத்தை முன்னிறுத்தி மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகக் காட்டப்படுகிறது. […]
[தொடர்ச்சி] [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் பார்க்கிறான் இப்போ தென்னை; மூழ்க்குவான் என் நெஞ்சை கொந்தளிக்கும் வாழ்க்கை தன்னில் இறைவன் ! உமது உலகத்தொடு எனக்கு ஈடுபா டில்லை; ஓர் எளிய பாடல் ஒப்பாரி போல், கவிழ்த்திடும் ! நேசச் சீரிசைவு முறைவிலே பந்த மற்ற புனிதர்கள் எட்டி நடந்து புறக்கணிப்ப தில்லையா என்னை ? நானொரு மனைவியாய்த் தேர்வு பெறத் தகுதி […]
” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம் இது என்று சுட்டிக் காட்டியவர் கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் கொடுக்க […]
இமயத் தொட்டிலில் ஆட்டமடா ! இயற்கை அன்னை சீற்றமடா ! பூமாதேவி சற்று தோள சைத்தாள் ! பொத்தென வீழும் மாளிகைகள் பொடி ஆயின குடி வீடுகள் ! செத்து மாண்டவர் எத்தனை பேர் ? இமைப் பொழுதில் எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ? கட்டிய இல்லம், சேமித்த செல்வம் பெட்டி, படுக்கை, உடுப்பு, உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு ! அந்தோ ! வசந்த கால வாடைக் காற்றில், அழும் சேய்க ளோடு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா இமயத் தொட்டிலில் ஆட்டமடா இயற்கை அன்னையின் காட்டமடா ! எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா ! ஏராள வீடுகள் மட்ட மாயினடா ! எங்கெங்கு வாழினும் இன்னலடா! ஏழு பிறப்பிலும் தொல்லையடா! அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா! மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா! குடற்தட்டில் கோர ஆட்டமடா! சூழ்வெளி மட்டும் பாழாக வில்லை யடா! ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் களடா! தோலுக்குள் எலும்பு முறிவு களாடா கால் பந்து தையல் போல் கடற் தட்டு முறிவுகளில் பாலமிட்டு காலக் குமரி எல்லை போட்ட வண்ணப் பீடங்கள் ஞாலத்தில் கண்டப் பெயர்ச்சியைக் காட்டுமடா ! ++++++++++++++ நேபாள் பூகம்ப விளைவுகள் http://www.cnn.com/videos/world/2015/04/25/smerconish-vo-nepal-earthquake-mt-everest-avalanche.cnn https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6EdsBabSZ4g […]
பனுவல் வரலாற்றுப் பயணம் 1 – மகாபலிபுரம் பனுவல் வரலாற்றுப் பயணம் 2 – காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகள் இவற்றை தொடர்ந்து கீழ்வரும் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகள் 1. திருநாதர் குன்று : சமண முனிவர் சல்லேகணம் (உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த இடம்) 2. மண்டகப்பட்டு : பல்லவன் – முதலாம் மகேந்திரவர்மணின் குடைவரை கோயில் 3. எசாலம் : முதலாம் இரஜேந்திர சோழனின் ராஜ குரு சர்வ சிவ ப்ண்டிதர் கட்டிய கோவில் 4. […]