சித்ர குப்தனின் டிவி விளம்பரம்

This entry is part 3 of 4 in the series 28 ஏப்ரல் 2024

தாரமங்கலம் வளவன் திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படி பேசினார்கள். ’பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்கு சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும் பாவங்கள் செய்யாதீர்கள். ’ அந்த மூன்று மனிதர்கள் பேசும் போது அவர்கள் இயல்பாக இல்லை. ஏதோ வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டே பேசுவது போல் தெரிந்தது. வளைந்து, நெளிந்து கொண்டே […]

கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

This entry is part 1 of 4 in the series 28 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன். சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை […]

உறுதி மொழி

This entry is part 4 of 4 in the series 28 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன் பூத்துச் சொரியும் பவளமல்லி; மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்; தடதடக்கும் இடியும்,மின் மினுக்கும் மின்னலும், நிகர்த்ததே மணவாழ்வு… மலர் படுக்கையல்ல… தெரிந்தோ,தெரியாமலோ; அறிந்தோ, அறியாமலோ; உன் வாழ்க்கை நான் புகுந்தேன். உன்னை வேண்டுவது ஒன்றே; என்னில் புகு; என் குறை களைய. என் தலை பாரம் சுமக்கும், சும்மாடாகி; நெடு வாழ்வின் நுகத்தடி சோடியாய்; நீ இரு! ஒரு கோடி வரப்போக இருப்பினும்; கண்ணன் கோயில் துலாமுள்ளாய்; ஏதும் எதிர்பாராகோபிகையாய் […]

திரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்

This entry is part 2 of 4 in the series 28 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத் தமிழில் : வசந்ததீபன் ________________________________________ இன்றும்_ ரொட்டி மற்றும் கவிதையின் செயற்கை வெற்றிடத்தில்நின்று சில அதிருப்தி _ அனுபவமற்ற மனிதன் பேசுகிறான் மக்கள் போராட்டத்தின் எப்போதும் முற்போக்குவாதம் , எப்போதும் ஜனநாயகம் எப்போதும் சோசலிசம் என்பது எப்போதும் கலாச்சாரத்தோடு இணைத்து ….! எவர்களிடம் _ இல்லை நாகரிகம்_நாகரீகம் இல்லாததின் புரிதல் மற்றும் இல்லை சுய மரியாதையின் மென்மையான உணர்வு எவரைச் சுற்றி வியாபிக்கிறது குரூரமும் நெறிமுறையற்ற மனிதாபிமானமும் ஆறுதல்களின் உலகம் மற்றும் […]