கன்னியப்பன் கணக்கு

This entry is part 8 of 8 in the series 4 ஏப்ரல் 2024

மீனாக்ஷி சுந்தரமூர்த்தி அந்த கிராமத்திற்குள் ஜட்கா வண்டி வருவது எப்போதாவதுதான், ஈசுவரன் கோவில் தெருவில் தடக் தடக் என்று வண்டி திரும்பியது  உழவு மாடு ஓட்டிக்கொண்டு தோளில் கலப்பை ஏந்தி வயலுக்குப் போகிறவர்களும், வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கப் போகிறவர்களும் யார் வீட்டிற்கு? என்று நிதானித்தார்கள். கிணற்றிலிருந்து நீர் சேந்திக் கொண்டிருந்தவர்கள் , அடுப்பில் காபி கொதிக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று  பெண்களும்  வாசலுக்கு வந்து பார்த்தனர்.’பட்டாளத்துக்காரர் மாதிரி இல்ல இருக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே […]

என் பெயர்

This entry is part 7 of 8 in the series 4 ஏப்ரல் 2024

அமீதாம்மாள் எனக்குள்இன்னொரு உயிர்பேசுகிறதுபேசுகிறேன்அழுகிறதுஅழுகிறேன்சிரிக்கிறதுசிரிக்கிறேன்மௌனிக்கிறதுமௌனிக்கிறேன்வெளியேஎவர் பேசுவதும்எனக்குப் புரிவதில்லைநான் பேசுவதும்எவர்க்கும் புரிவதில்லைஅந்த இன்னொருஉயிரைத் தவிர

அனுபவம்

This entry is part 6 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு.இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன.தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டதுஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோஎன்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும்.அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது.அதை அனுபவிப்போம்

வாக்குமூலம்

This entry is part 5 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

சுழலும் பூ கோளம்

This entry is part 4 of 8 in the series 4 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன் பம்பரம் சுற்றிச் சுழன்று விழும். பூ கோளம் தன் சுழற்சியில் என்றும் சுழலும். வரையருத்தது இறையன்றோ! நாள் ஒன்று கூடுவது கணக்கின் விதி நாம் அறிந்தோ; அறியமலோ கணக்கன்  விடும் புதிர். புதிரை  புரிந்தும் புரியாமலும் தான் புவி மேல் நாம் இன்னும் இருக்கிறோம்

நான் மனிதன் அல்ல

This entry is part 3 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வசந்ததீபன் ஒன்று___________ நான் மனிதன் அல்ல ஐயாமிருகமாக இருக்கிறேன்இரு கால் மிருகம்அதைப் பேச்சு வார்த்தையில்மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _இழி சமூகம் எனச் சொல்கிறான். எல்லா நாட்கள் _மாடுகளைப் போல  உழுகிறதற்குகை நிரம்ப பார்லிகூலியாகக் கொடுக்கிறான். வாய் திறந்தால்கோபமாய் பார்க்கிறான்பழமொழியை உருவாக்குகிறான்எறும்பு எப்போது இறக்கிறதோசிறகுகள் வளர்கின்றன அதற்கு என்றுஇறப்பதற்காகத்தான் முண்டம்கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்தது என்றுஹு…ஆ…ஹு… ஆ…செய்கிறான். பஞ்சாயத்து தலைவன் என்றுவட்டாரத்தின் போலீஸ்என்னுடைய உறவின சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றுபைத்தியம் என்று  _பொதுவான மற்றும் […]

வேலி

This entry is part 2 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும் கேட்காமல்விளக்குகள் எரியாதவெறிச்சோடிக் கிடந்தஎன் தெருவுக்குகொண்டு சேர்த்ததுகவலையில்லாமல்முன்னேறிய நான்தெரு முடிவில்கவனித்தேன்ஒரு காவல்துறை அதிகாரியைகொஞ்சம் பயமாக இருந்தது

நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.

This entry is part 1 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது. மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும், […]