துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா

This entry is part 2 of 19 in the series 8 ஏப்ரல் 2018

துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா JAZEELA எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் வெள்ளிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடந்தேறியது. துபாய் தேரா – சரவணபவன் உணவக மாடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான இலக்கிய வாசகர்களும் துபாயின் முக்கியத் தமிழ் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையைக் களமாகக் கொண்டு அய்யனார் விஸ்வநாத் எழுதிய இந்த ஓரிதழ்ப்பூ நாவல், இலக்கிய வாசகர்களின் பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. நிகழ்வை திரு. […]

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

This entry is part 3 of 19 in the series 8 ஏப்ரல் 2018

நொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சிலகாலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது இன்னமும் செவ்வியல் இலக்கியமாக மட்டுமல்லாது நிகழ்கால இலக்கியமாகவும் பேசப்படுவதற்கு காரணம், கரமசோவ் சகோதரர்கள் மனித வாழ்க்கையின் முரண்பாடுகளை, நம்பிக்கைகளை, […]

ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 4 of 19 in the series 8 ஏப்ரல் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ உன்னைக் கூட்டிச் செல்லவா ? ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல ! எதையும் பற்றித் தொங்காதே ! ஆப்பிள் தோப்பிலே நீ எப்போதும் கிடக்காதே ! விழிகளை மூடிக் கொண்டு வாழ்வது எளிது ! பார்ப்ப தெல்லாம் புரியாது திரிக்கப் படுகிறது ! அடுத்தவன் உடலுக்குள் புகுந்து நடிப்பது கடினம் ! எல்லாம் நடக்குது எப்படியோ ! எனக்கொரு கவலையும் இல்லை ! இருவரும் ஆப்பிள் தோப்புக்கு […]

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)

This entry is part 5 of 19 in the series 8 ஏப்ரல் 2018

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது. விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /- (பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது […]

மாரீசன் குரல் கேட்ட வைதேகி

This entry is part 6 of 19 in the series 8 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து அகற்றி சீதைக்குத் துன்பம் தருவதற்காக இருக்குமோ என நினைக்கிறான். ஆனாலும் தம்பி எனை அறிவான்,அரக்கனின் வஞ்சனைக் குரலெனவும் தெளிவான்,தேவியைத் தேற்றுவான் என நினைந்தான். இருப்பினும் விரைந்திடல் நலமென பர்ணசாலை நோக்கித் திரும்பினான். அரக்கரின் மாயைக்கு அவதார நாயகர்களும் ஆட்படுவர் போலும். இங்கு இராமனின் அபயக் குரல் கேட்ட சீதை மரத்தினின்று வீழ்ந்த குயிலைப் […]

காலண்டரும் நானும்

This entry is part 7 of 19 in the series 8 ஏப்ரல் 2018

எஸ்.அற்புதராஜ் என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன், பூட்டுவதும் நானே. என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே திறந்துவைக்கிறேன் . கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும் தினசரித் தேதித் தாளைக் கிழிப்பதும் நானே. நேற்றைய தாளைக் கிழித்துவிட்டால் புதியநாள் தொடங்கிவிட்டதாக அர்த்தம் கொண்டுவிடும். காலண்டரும் நானும் ஒன்றாகவே நாட்களைக் கழித்து வந்திருக்கிறோம். என் பேத்திகள் கூட நீங்கள்தான் தினந்தோறும் ‘காலண்டரில் தாளைக் கிழிப்பீர்களா? என்று ஆச்சர்யமாய்க் கேட்பதுண்டு. இதிலென்ன ஆச்சர்யம்? ஆச்சர்யம்தான். கடவுளைத் தியானிப்பதை […]

·மனப்பிறழ்வு

This entry is part 8 of 19 in the series 8 ஏப்ரல் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட இலட்சியவாதியைவிட, மனிதநேயவாதியைவிட முழுமனிதரைவிட மாமனிதரைவிட இவரன்ன இன்னும் பலரைவிட ஒரு மண்ணாந்தையும் தன்னை மேலானவராகக்காட்டிக்கொள்ள மிக எளிய வழி அவர்களைப் பைத்தியமாக முத்திரை குத்திவிடல்.

கேள்வி – பதில்

This entry is part 9 of 19 in the series 8 ஏப்ரல் 2018

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” “கேளடா மானிடா, உன் கோபாவேசமெல்லாம் எனக்குக் கால்தூசு” ”வாழையடி வாழையாக வந்த நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ளமாட்டேன் என்று இப்படிப் பிடிவாதம் பிடிக்கலாமா? “தோ, தோ நாய்க்குட்டி போதும் எனக்கு. காட்டுவிலங்குகளை கண்ணிவைத்து வேட்டையாடினால் கொள்ளைக் காசு!” பேழை நிறைய பொற்காசுகளிருந்தால் மட்டும் பெரியவனாகிவிடுவாயா _ சின்னராசு?” […]

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்

This entry is part 10 of 19 in the series 8 ஏப்ரல் 2018

_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் – கிழக்கு பதிப்பக வெளியீடு (பக்கங்கள் : 256 / விலை ரூ.225 – தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம் கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே […]