படித்தோம் சொல்கின்றோம்: சாத்திரியின் தரிசனங்களாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள்

This entry is part 6 of 12 in the series 9 ஏப்ரல் 2017

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?                                                           முருகபூபதி – அவுஸ்திரேலியா   ” எனக்கு தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…” இந்த வரிகளுடன் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7

This entry is part 2 of 12 in the series 9 ஏப்ரல் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   அன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், சுமதியும் அவள் அப்பா ஜெயராமனும் வீட்டில் இருக்கிறார்கள். வழக்கம் போல், ஜானகி அடுக்களையில் சமையல் வேலையில் முனைந்திருக்கிறாள். ஜெயராமன் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது சுவர்க் கடிகாரத்தில் எட்டு மணி யாகிறது. சுமதி ஒரு நாற்காலியில் அமர்ந்து வார இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறாள். வாசல் புறம் காலடியோசை கேட்கிறது. தலையை உயர்த்தித் திரும்பும் சுமதி நுழைவாயிலில் ஒரு கைப்பெட்டியுடன் நிற்கும் நெடிதுயர்ந்த மனிதரைப் பார்த்ததும் எழுந்து அங்கு செல்லுகிறாள். […]

வாங்க பேசலாம்!

This entry is part 3 of 12 in the series 9 ஏப்ரல் 2017

மணிமாலா மதியழகன் “பாலியில் இந்த ஹோட்டலில் தங்கலாமா” என்று கணினியை சுட்டிக்காட்டியபடி பிள்ளைகளைக் கேட்டேன். பிள்ளைகள் உடனே வந்து அந்த விடுதியின் வசதிகளைப் பற்றி ஆராய்ந்தனர். அஷ்டகோணலாக அவர்களது முகம் போன போக்கை வைத்து என் மனைவி “ஏன் பிடிக்கலையா?” என்று கேட்டாள். உடனே “ஆமாம்” என்று பிள்ளைகள் இருவரது குரலும் ஒன்றிணைந்து வெளிப்பட்டன. “ஏன் நல்லாத்தானே இருக்குது?” நான் வினவினேன். “அங்கு Wi-Fi யே இல்லை” என்பது இருவரது குற்றச்சாட்டாக இருந்தது. “நாம் விடுமுறையைக் கழிக்கப் […]

நாலு பேர்..

This entry is part 4 of 12 in the series 9 ஏப்ரல் 2017

அருணா சுப்ரமணியன் நாலு விதமா  பேசுவார்கள் என்றனர்… நால்வரிடமே கேட்டேன்.. என்ன தவறு என்று? அப்படித்  தான்  என்றார் ஒருவர்.. இதெல்லாம் எதற்கு  என்றார்  இன்னொருவர்.. தவறில்லை  ஆனாலும் வேண்டாம்  என்றார் மூன்றாமவர்.. என்ன கேள்வி  கேட்கிறாய்? என்றார் நாலாமவர் .. ஒருவருக்குமே  தெரிந்திருக்கவில்லை  என் கேள்விக்கான  பதிலையும் .. என்னையும்…  

தூங்கா மனம்

This entry is part 11 of 12 in the series 9 ஏப்ரல் 2017

  சோம.அழகு எல்லோர்க்கும் எல்லா இரவுகளும் (நிம்மதியாகத்) தூங்கக் கிடைப்பதில்லை. அவ்வாறே தூக்கம் தொலைத்த ஓர் இரவு…….   இரவு 12:30 மணி இருக்கும். எவ்வளவுதான் புரண்டு படுத்தாலும் நித்திரா தேவி வரவேமாட்டேன் என சாதித்தாள். இந்த இரவிற்கு அப்படி  என்னதான் சக்தியோ? மனதின் காயங்கள், வலிகள், நிறைவேறாமல் போன ஆசைகள், நிராசையாகவே இருக்கப்போகும் ஆசைகள், ஏக்கங்கள், அவமானங்கள், தவறான முடிவுகள் என அனைத்தும் வரிசைகட்டி வந்து, சற்றே எட்டி நின்று சிறிது நேரத்தில் மனமாற்றம் செய்துகொண்டு […]

தொடுவானம் 164. அறுவை மருத்துவப் பயிற்சி.

This entry is part 5 of 12 in the series 9 ஏப்ரல் 2017

          அறுவை மருத்துவப் பயிற்சியை மூன்று மாதங்கள் டாக்டர் எல். பி. எம். ஜோசப் தலைமையில் இயங்கிய அறுவை மருத்துவம் பிரிவு மூன்றில் பெற்றேன். அப்போது அவர் மருத்துவமனையின் இயக்குநராகவும் செயல்பட்டார். அதனால் அவர் மீது இயற்கையாகவே ஓர் அச்சம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் இந்த மூன்று மாதங்களும் பயனுள்ள வகையில் சிறப்பாகவே இருந்தது.           மருத்துவப் பயிற்சி போலவே இதிலும் வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் பணியாற்றினோம்.அதில் முன்பே பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் பிரச்னைகள் அதிகம் இல்லை. ஆனால் […]

ஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்

This entry is part 7 of 12 in the series 9 ஏப்ரல் 2017

  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார்.   ”வீறுபொய்கை பூதத்தார் இருபால் ஞான விளக்கேந்த மயிலையர்கோன் வியந்து காண மாறன்மறைத் தமிழ்மதுர கவிநின் றேத்த வாழ்குல சேகரன்பாணன் கலியன் போற்ற ஆறுசமயத் திருந்தோன் அருகில் வாழ்த்த அணிபுதுவை வேதியன்பல் லாண்டு பாடத் தேறுதொண்டர் அடிப்பொடிதார் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 8 of 12 in the series 9 ஏப்ரல் 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++   [46] எவரோ துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை ஏன் தெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது ? வெகுமதி அது, பயன்படுத்துவோம் இல்லையா ? சாபமெனின் பிறகெதற்கு, யார் தீர்மா னித்தது ? [46] Why, be this Juice the growth of God, who dare Blaspheme the twisted […]

விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.

This entry is part 9 of 12 in the series 9 ஏப்ரல் 2017

Posted on April 8, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/g9pCLcZEJIw https://youtu.be/dqABeYr-KBw http://exoplanet.eu/ http://www.ibtimes.com/gj-1132b-first-astronomers-detect-atmosphere-around-nearby-low-mass-super-earth-2522270 ++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் ! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் […]

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2017 – (குறும்படங்களுக்கு மட்டும்)

This entry is part 10 of 12 in the series 9 ஏப்ரல் 2017

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை:   ரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் […]