சூரியன் புறக்கோளான வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூனில் வைரக் கல் மழை பெய்து கொண்டிருக்கிறது.

This entry is part 1 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா https://youtu.be/o1ySpPttPdE https://youtu.be/nBGQWTEjA-o https://youtu.be/8xnMcaPjgeg https://youtu.be/BHglNUGc8Xw +++++++++++++++++ Uranus & Neptune எமது ஆய்வகச் சோதனைகள் அண்ட வெளிக்கோளின் [Exoplanets] உள்ளமைப்பை அறிய உன்னத உட்காட்சிகள் அளித்தன.  நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள அண்டவெளி  அசுரப் பனிக்கோள்களின் [Cosmic Ice Giants] நிறையையும், ஆரத்தையும் எம்மால் அளக்க முடிந்தது. இவ்விரு பரிமாணங்களின் உறவுப்பாடு, கோளின் இரசாயன அமைப்பைக் காட்டுவதோடு, அவை மெலிந்த மூலகமா, அல்லது கன மூலகமா [Light […]

கம்பனின்[ல்] மயில்கள் -3

This entry is part 3 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

எஸ் ஜயலட்சுமி வசிஷ்டர் வருகை மன்னன் கிடக்கும் அலங்கோல நிலை கண்டு கோசலை, “மன்னன் தகைமை காண வாராய் மகனே! என்று கதறி அழுது புலம்புகிறாள். மங்களகரமான காலை நேரத்தில் இப்படி ஒரு அழுகுரலைக் கேட்டதும் வந்திருந்த மன்னர்கள் பதற்றமடைய வசிஷ்டர் கைகேயி அரண்மனைக்கு ஓடோடி வருகிறார். கோசலை கதறி அழுவதையும் கைகேயி சற்றும் சலனமில்லாமல் இருப்பதையும் கண்டு இந்த நிலைமைக்கு அவளே காரணம் என்று புரிந்து கொள்கிறார். கைகேயி தயக்கமில்லாமல் நடந்தவற்றை விவரிக்கிறாள். சிறிது மயக்கம் […]

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

This entry is part 4 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன். தொடர்பு கொள்ளவேண்டிய எண்: மலேசியா . … 017 7424200. Email: drgjohnsonn@gmail.com நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

கவிதை

This entry is part 5 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

முல்லைஅமுதன் காயம்படாமல் பார்த்துக்கொள் உன் விரல்களை.. தேவைப்படலாம். யாரையாவது விழிக்க.. உன் பிள்ளையை அழைக்க.. கட்டளையிட. அடிபணியா வாழ்விது என… புள்ளடியிடவென உன் விரல்களை வாடகைக்குக் கேட்கலாம் மறுத்தால் விரல்களையே தறிக்கலாம். காலம் ஒருநாள் கட்டளையிடலாம் விசைகளை அழுத்த… விரல்களை காயம்படாமல் பார்த்துக்கொள்.

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

This entry is part 6 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய […]

சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

This entry is part 7 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

கு.கோபாலகிருஷ்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்,                                              தஞ்சாவூர். முன்னுரை சுகிர்தராணி கவிதைகளில் இயற்கைக் கூறுகள் என்னும் பொருண்மையில் இயற்கையும், இலக்கியமும், இயற்கைப் பொருள் விளக்கம், சான்றுகளை விளக்கி, சுகிர்தராணி கவிதையும், இயற்கை நோக்கும் மழை, நீர், காற்று, இரவு, பகல், கடல், மலை, இன்ன பிற இயற்கை கூறுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. இயற்கையும், இலக்கியமும் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைப் பெற்றிருக்கும் புதிய வடிவத்தைப் புதுக்கவிதை என்கிறோம்.  வடிவம், உத்திகள் வேறுபட்டு நின்ற […]

காதலனின் காதல் வரிகள்

This entry is part 8 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா  +++++++++ உன் கண்ணுக்குள் நோக்கும் ஒவ்வொரு தருணமும் காண்கிறேன், அங்கோர் சொர்க்க புரி உள்ளதை ! அங்கு நான் பார்த்தால் காதலனின் காதல் தென்படும் ! அவரும் காண்பர் ஒருநாள் காதல் துவக்க காலத்தை ! உன்னித யத்தில் ஆழமாய்ப் பதிந்து உள்ளது என் இருப்பு ! காண்பேன் உன் இதயத்தில் காதலனின் காதலை ! முன்பதை நான் ஒருமுறைக் கூறினும், பன்முறைக் […]

சுதந்திரம்

This entry is part 9 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ   கிட்டத்தட்ட ஒரு பிள்ளையைப் போல்தான் வளர்த்திருந்தேன் அந்தக் கிளியை அந்தக் கிளிக்கு ஒரு கூண்டிருந்தது ஆனால் பூட்டில்லை ஏன் கதவுகளே இல்லை. பரணிக்கு மேல் பீரோவிற்கு மேல் அல்லது எவர் தலையிலாது ஏறி நின்று கொள்ளும் கொடுத்த எதையாவது தின்று கொள்ளும் நாற்சுவர் மதில் ஓரங்களில் பறந்து மோதி விழுந்து கொண்டிருந்த கிளியை மனசாட்சி உறுத்தவே ஒரு புளியந்தோப்பில் பறக்க விட்டேன் இரண்டு நாட்களில் இன்னொரு கிளியுடன் இல்லம் திரும்பியிருக்கிறது எல்லா அறைகளும் […]

தொடுவானம் 184. உரிமைக் குரல்

This entry is part 2 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

            சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச்  சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை  புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும். இதன் மூலமாக   ஒழுக்கமும் நாட்டு பற்றும்  இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு உள்ளதென்று நம்பப்படுகிறது. நான் உயர்நிலைக்  கல்வியை முடித்ததும் தமிழகம் சென்றுவிட்டேன். அதனால் தேசியச்  சேவையில் சேராமலிருந்தேன். தற்போது சிங்கப்பூர் வந்துள்ளதால் அதில் கட்டாயமாகச் […]