நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தாறு

This entry is part 8 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

    ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.   கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன.  நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி  அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன.  இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள்   அந்த அகண்ட […]

துயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்

This entry is part 7 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

குரு அரவிந்தன் கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார். நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது […]

இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போதைய பயணக் குறிப்பிடம்

This entry is part 6 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

சி. ஜெயபாரதன், கனடா Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection 2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய  இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ?  என்ன நிகழ்கிறது ?  விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் […]

ஹிரோஷிமா, நாகசாக்கி அழிவு நாட்கள் நினைவு தினம்

This entry is part 5 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள் Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, […]

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

This entry is part 1 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? ++++++++++++++ அணு ஆயுதத் தடுப்பு முயற்சிகளில் அகில நாட்டுச் சூழமைவில் எவ்விதப் பலவீனமும் அனுமதிக்கப் பட வில்லை.   அந்தத் தடுப்புக் காலம்  இன்னும் […]

முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்

This entry is part 3 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

அன்பு நண்பர்களே அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை. தமிழில் முதல் தடவையாக முதியோர் இல்லம் சேர்ந்த மூத்தோர் ஒருவரின் (அவரே தான்) முதியோர் இல்லக் குறிப்புகளை அவர் எழுதுவது சிறப்பாக உள்ளது.  வானப்பிரஸ்தம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்த கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள். டாக்டர் ஜெயபாரதனுக்கு இன்னுமொரு நூறாண்டு கிளரொளி இளமையோடு சூழட்டும். அன்புடன் இரா.முருகன்

 நட்பு 2 

This entry is part 4 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும்  தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை  மேலதிகமாக  அந்த ‘நீ’  யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து  அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும் அதை பற்றி வம்பு பேசி மகிழும் சிலரும் பொறுக்காமல் என்னிடம் ரகசியமாக கேட்டே விடும் சிலருமாக எனது நட்புலகம் சிறுத்துக் கொண்டிருக்கிறது  தினம் தினம்

நட்பு 1

This entry is part 2 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா உறவின் மேல் கொட்டிய பாசம் பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது துணையின் மேல் பொழிந்த காதல் பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது ஆரவாரமில்லாமல் தோன்றின நட்புக்கள் அவற்றில் கணக்குகளில்லை நான் கொடுத்தது நினைவிலில்லை  இருப்பது நினைக்கும்போதேல்லாம் நிறைந்து போகும் நெஞ்சம்தான்