ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு

This entry is part 1 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  https://youtu.be/ZwEADPlHdEE  https://youtu.be/29byorgwMGY https://youtu.be/hZHcf9NyYWw ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் ஈர்ப்பு வலையில் சிக்கிய போது வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! சூரிய குடும்பக் கோள்களின் ஆதித் தோற்ற வளர்ச்சி அறியவும், உயிரின மூலத்தை உளவவும் ஏவிய […]

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3

This entry is part 2 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

ஸிந்துஜா 3   இரண்டாம் வகுப்புக்குப்  போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை  ஒத்துக்  கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ளும் விதமாக என்னை ஸ்கூலுக்கு ” […]

கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

This entry is part 14 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

                                    —கோ. மன்றவாணன்     கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான். 1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருஇந்தளூரில் பிறந்தார், வளர்ந்தார் என்பதிலோ எந்தப் பெருமையும் அவருக்கு இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு தேதியில் ஏதோ ஓர் ஊரில் பிறக்கத்தான் செய்கிறார்கள். அதனால் எல்லாம் அவர்களுக்குப் பெருமை இல்லை. ஒரு […]

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

This entry is part 3 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

(ஏப்ரல் 26, 1986) சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராமர் சந்ததி மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேற்றி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! சமாதி யானது மரணித்த மனிதரோடு ! மாய்ந்தனர் […]

அப்பா, பிள்ளைக்கு….

This entry is part 4 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

– சேயோன் யாழ்வேந்தன் அவசரமாய்ச் சென்றாலும் அச்சாரம் கன்னத்தில் ஒற்றாமல் நீ சென்றதில்லை நீங்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்காமல் நீ உண்டதில்லை தொலை தூரத்தில் இருந்தபோதும் அலைபேசியில் அழைக்காமல் ஒருவேளையும் உண்டதில்லை உன் உணவு நேரத்தை தள்ளிப் போடவேண்டாமென்பதால், பல தடவைகள் நாங்கள் பொய் சொன்னதுண்டு பெற்ற பிள்ளையிடம் பொய் சொல்ல வேண்டாமென்று பல விரதங்களை உன் அம்மா கைவிட்டதும் உண்டு இரவு பகல் நமக்கு எதிராக மாறிப்போக, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் நீ சென்றபோதும் நாங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் […]

சூடு சொரணை இருக்கா?

This entry is part 6 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

குமரன் இப்பதிவுக்கு வேறு தலைப்பு வைக்கலாம் என்று தான் விருப்பம். ஆனால் அதன் விளைவு என்னாகும் என்று யோசித்ததால், ஒரு புண்ணாக்கும் ஆகாது என்று புரிந்ததால், இப்படி வைத்து விட்டேன். ஏனென்றால், விறுவிறுப்பான விஷயங்கள்தான் தலைப்புச் செய்திகளாய் வருகின்றன. இன்னும் உடைத்துச் சொல்வதானால், நம்மை, சற்றே வக்கிரமான செய்திகள் தான் வசீகரிக்கின்றன. அல்லது வக்கிரப்படுத்தப்படும் செய்திகள் வசீகரிக்கின்றன. எனவே தான் ஒரு “விறுவிறுப்பு”க்காக இப்படி தலைப்பு வைத்திருக்கிறேன். மனம் விரும்பிய தலைப்பை இறுதியில் தருகிறேன். வாரம் முழுதும் […]

ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்

This entry is part 17 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

  கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை. ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார் அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது. வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், […]

திடீர் போராட்டம் ஏன் – திமுக தலைவர் ஒருவரோடு உரையாடல்

This entry is part 13 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

ஆனந்த கணேஷ் வை ஆகஸ்டு 8ம் தேதி, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை “சனாதன கல்விக் கொள்கை” என அழைத்து, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் திமுகவினர். திமுகவினர் இதை எதிர்ப்பதற்கான காரணம், மத்திய அரசுப் பள்ளிகளில் செம்மொழி (ஸம்ஸ்கிருதத்தினை) விருப்பப்பாடமாக வைக்க அரசு செய்த முடிவே. இதுவரை ஜெர்மன், ஃப்ரெஞ்ச் போன்ற திமுக தலைவர்களின் தாய்மொழி வைக்கப்பட்டு இருந்தன. அதனால் இதை திமுக தலைவர்கள் எதிர்க்கவே இல்லை. இப்போது, திராவிடர் இயக்கத் தலைவர்களுக்குப் […]

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

This entry is part 5 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]

காப்பியக் காட்சிகள் – ​14. சிந்தாமணியில் க​லைகள்

This entry is part 7 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

, தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com மனிதனின் உள்ளத்தைத் தன் வயமாக்கி இன்பம் தந்ததோடு மட்டுமல்லாது தான் உணர்ந்து மகிழ்ந்ததை பிறரும் உணர்ந்து மகிழ அவ்வாறே வெளிப்படுத்தும் ஆற்றலே கலை எனப்படும், இக்கலைகள் ஓவியம், சிற்பம், காவியம் எனப் பலவகைகளில் வெளிப்படும். இவ்வாறு வெளிப்படும் கலைகளை 64 வகையாகப் பிரித்தனர். புத்தர் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரம் எனும் நூலிலும், சமண நூல்களிலும், இந்து சமய நூல்களிலும் அறுபத்து நான்கு கலைகள் […]