கையெழுத்து

This entry is part 14 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

கௌசல்யா ரங்கநாதன்             —–-1-அன்புள்ள செவாமிக்கு(சிவகாமி), உன் அண்ணன் மனைவி ஜானகி எழுதிக் கொள்ளும் ஒரு மனம் திறந்த மடல்.அது என்ன அண்ணனின் மனைவி என்று எழுதுகிறேன் என்று நீ நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.. எப்போது அவர் உன்னை தன் பெற்ற மகளாகவே எண்ணி அதீத செல்லம் கொடுத்து உன்னை தன் மார்பு மீதும்,தோள்கள் மீதும்போட்டு   சீராட்டி,தாலாட்டி, பாலூட்டி, உன் மீது ஒரு கொசு அமர்ந்தாலும் பதறி, துடித்துப் போன […]

கலையாத தூக்கம் வேண்டும்

This entry is part 12 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

— க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்படியே மேலே மாட்டியிருந்த அப்பாயி படத்த பார்த்த மாதிரியே கிடந்தாரு. நான் வெளியே வந்து இன்னும் தெருவைத் தாண்டக்கூட இல்லே. அதுக்குள்ள அவர் உசிரை விட்டிருப்பாருங்கிறத நம்ப முடியல.வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்தா அவர் படுத்திருந்த மெத்தையை மடித்துக் கொண்டிருந்தார்கள். […]

ஸ்ரீமான் பூபதி

This entry is part 11 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

                                                         மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்…ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார்.  நடந்தாலும் நடக்கும்…யார் கண்டது? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்டிக் கேட்பாரில்லாமக் கிடந்தா?எதுவும் நடக்கலாமே!  என்ன…ஏது என்று யாரேனும் கண்டு கொண்டால்தானே…?.   அதான் ஒரு பெரிசு இருக்கே…எல்லாத்தையும் கண்காணிக்கிறதுக்கு…! -அப்படித்தானே கிடக்கானுங்க எல்லாரும்…? சரி…சரின்னு இருந்ததுதான் தப்பாப் […]

காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

This entry is part 9 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம கொடிதுவக்கு),முனைவர்.ர.ரமேஷ்(சந்திரா மனோகரன்),வ.ந.கிரிதரன்(பிஷ் ஷெல்லி,கவிஞர்.பைரன்),லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா),ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),பேராசிரியர்.மலர்விழி.கே(மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா(லாரா ஃபெர்ஹஸ்/அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்)),முருகபூபதி(அவுஸ்திரேலியாவில்மொழிபெயர்ப்பு முயற்சிகள்),மு.தயாளன்(மாக்சிம்.கார்க்கி),மதுரா(Nichanor parra/ Miller Williams  ),சாந்தா தத்(எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’),பெரி.சண்முகநாதன்(மஹ்மூத்.தர்வீஷ்)ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.காற்றுவெளி […]

வெகுண்ட உள்ளங்கள் – 11

This entry is part 8 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன் பதினொன்று அடுத்தநாள், மன்னியும், அண்ணரும் வீட்டுக்கு வந்தார்கள். அவளால் ‘அக்காவிடம் முறையிட முடியவில்லை. கண்கள் சிவந்திருந்தவளை ‘கிடைச்ச வாழ்வை நல்லபடியாய் அமைச்சுக் கொள்” என்று அவர் தேற்றினார். உள்ளே இருவரும் சென்ற போது அவள் தன்னையறியாமல் மன்னியின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். அவன் அண்ணனோடு கதைத்துக் கொண்டு வெளியில் இருந்தான். ‘அண்ணி’ என உள்ளே வந்த போது அவள் அழுதது அவனை குற்றவுணர்வில் தள்ளியது. “தேனீர் வைச்சுக் கொண்டு வா” என்று அவளிடம் சொல்ல […]

ஆசைப்படுவோம்

This entry is part 16 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள் புண்ணகை யாவும் புன்னகை ஆகும் நாள் வானமகள் வாழ்த்திசைக்க வான்குடைகள் ஆடும் நாள் ஏனென்ற கேள்விக்குறியின் இடுப்பு நிமிரும் நாள் அழுகின்ற கண்ணீரெல்லாம் ஆனந்தம் ஆகும் நாள் இந்த நாள் இப்படித்த்தானென்று அலைகள் படைகள் […]

முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது

This entry is part 7 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார். Space X Landing back towards, the […]

கந்தசாமி கந்தசாமிதான்…

This entry is part 10 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

07.08.2020  அழகியசிங்கர்             போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.          போன  மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார்.  “          அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் […]

தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

This entry is part 13 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

                      ப.சகதேவன் 1977-78 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்துக்கும், தம்பானூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு லாட்ஜில் ஒரு மாலை நேரத்தில்  சில தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் சிறு பத்திரிகை உலகில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த ‘கசடதபற’ இதழின் பொறுப்பாளர்களான சா.கந்தசாமியும், நா.கிருஷ்ணமூர்த்தியும் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் வருகை முன்கூட்டியே நகுலன் மூலமாக திருவனந்தபுரம் எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. கேரளப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டிருந்த நான் அதைப் பெரிதும் […]

எனது அடுத்த புதினம் இயக்கி

This entry is part 6 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள் முன்னுரை இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. மேட்டுத் திடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராயும் பொழுது, அந்தக் காலத்திலிருந்த செங்கற்சுவரைத் தவிர, உறை கிணறுகள், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள், சூது, பவளம், பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள், எலும்புக் […]