நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.

This entry is part 3 of 17 in the series 11 டிசம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html +++++++++++++++++++++++ சனிக்கோளின் வளையங்கள் ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் ! முகில் அயான் வாயுக்கள் எழும் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! நீரெழுச்சி வேகம் […]

சோ – மானுடத்தின் பன்முகம்

This entry is part 13 of 17 in the series 11 டிசம்பர் 2016

குமரன் வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை “அதிர்ஷ்டம்” என்று அழைப்பதுண்டு. “துக்ளக்” வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித “ஜனரஞ்சக” விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே நிரம்பிய அப்பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் போரடிக்கும். படிக்கத் தோன்றாது. ஆனால், அந்த எண்ணம் விலகிய வகை, ஆச்சரியமானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் எனக்கு கிரிகெட் கிறுக்கு தலைக்கேறியிருந்தது. அதனால், கிரிகெட் சார்ந்த எந்த செய்தி எந்த […]

காலநிலையும் அரசியலும்

This entry is part 1 of 17 in the series 11 டிசம்பர் 2016

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் “எனக்குண்டு ஓருலகம் உனக்குண்டு ஓருலகம் நமக்கில்லை ஓருலகம்” —-குஞ்நுண்ணி கவிதைகள். இயற்கையின் பெரும்பகுதி ஒன்று மனிதனின் இடையறாத தூண்டல் விளைவுகளால் நிர்மூலமாகும் போது ஒட்டுமொத்த பூலோகத்தின் இருப்பே கேள்விக்குறியாகிறது. மிகவிரைவாக அதிகரித்துவரும் துருவப் பகுதிகளின் பனிப்பாறை உருகுதலானது இயக்கப் புள்ளிகளைப் (Tipping Points) பேரழிவுக்கே இட்டுச்செல்வதுடன், இது துருவப் பகுதிகளில் இருந்து தொலைவிலுள்ள இந்து சமுத்திரம் வரை பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும் என்று ஐரோப்பிய-அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனை Artic Resilience Report […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

This entry is part 2 of 17 in the series 11 டிசம்பர் 2016

பி.ஆர்.ஹரன்   மத்திய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்து பணிபுரிந்து வரும் திருமதி மேனகா காந்தி அவர்கள் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பிராணிகள் நல ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கோவில்கள், சர்க்கஸ்கள் மற்றும் தனியார் வசம் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பிரச்சனைகளை அவர் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறார். இந்திய விலங்குகள் நலவாரியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல், தானும் “விலங்குகளுக்கான மக்கள்” (PFA – […]

ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 17 in the series 11 டிசம்பர் 2016

  2.யாவரும் கேளி(ளீ)ர்     நாராசம்   எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே….       ஆயாசம்   பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்; பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள் பீடமேறிகள் பலவகை என்றேன் பிடிசாபம் என்று பகைத்துச் சென்றார்கள்.     வாசம்   அன்னார் பேசும் அபத்தங்களையும் முன்மொழிந்து வழிமொழிந்தால் மட்டுமே என்னை அங்கீகரிப்பது என்றிருப்பவரிடமிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் நேரம் பட்டமரத்திலிருந்தும் […]

சரியும் தராசுகள்

This entry is part 4 of 17 in the series 11 டிசம்பர் 2016

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.     ரசனை பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை ஏந்திவந்தார் நீந்தத் தெரிந்தவனை மூழ்கடிப்பதே குறியாய் வண்டை வண்டையாய் தொண்டைத்தண்ணீர் வற்ற ஏசிமுடிக்க. கூசாத மனசாட்சி வாய்த்த நீசர்கள் கூலிக்குப் போட்டுத்தள்ளுகிறவர்களைக் காட்டிலும் மோசமானவர்கள்.     வாசிப்பு அடிக்க அடிக்க அம்மியும் நகரும் […]

இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி

This entry is part 6 of 17 in the series 11 டிசம்பர் 2016

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மோகன் வந்து சாந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். சாந்தாவுக்கு வாசல் கேட் அருகிலேயே ஷோபா எதிரே வந்தாள். “சாந்தா! நன்றாக இருக்கிறாயா?” என்று கையைப் பற்றிக்கொண்டாள். “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே ஷோபாவை தலை முதல் கால்வரையிலும் பார்த்தாள் சாந்தா. ஷோபா மிகவும் மாறி விட்டிருந்தாள். உடல் பெருத்து, மேனியின் நிறம் குறைந்திருந்தது. கண்களுக்குக் கீழே […]

பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)

This entry is part 7 of 17 in the series 11 டிசம்பர் 2016

1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 48 நாடுகள் அழியும்? 3.பூமியை தாக்க நிலவில் வேற்றுக்கிரகவாசிகள் 4.இருண்ட கிரகத்தால் பூமிக்கு ஆபத்து? ———————————————————————————————————————– 1.பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிக பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த காஸ்மிக் கதிர் கண்காணிப்பு ஆய்வு மையத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் தகவலின்படி, சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் […]

கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்

This entry is part 8 of 17 in the series 11 டிசம்பர் 2016

J.P..தக்சணாமூர்த்தி DEEE,. BE., dhakshna@hotmail.com கடன் அட்டை, ஏடிம் அட்டை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது […]

அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்

This entry is part 9 of 17 in the series 11 டிசம்பர் 2016

  பொன் குலேந்திரன் –கனடா   நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் […]