சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது

This entry is part 4 of 4 in the series 1 டிசம்பர் 2019

அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை solvanam.com என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழில் வெளியானவை கீழே: கட்டுரைகள்: சிலப்பதிகாரத்தின் காலம்  – எஸ். ராமச்சந்திரன் விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்  – நம்பி சிறுகதைகள்: 2015: சட்டமும் நியாயமும்  – அமர்நாத் வெள்ளைப் புள்ளி – ஜானதன் ப்ளூம்  (தமிழாக்கம்: மைத்ரேயன்) மழைத்திரை  – கமலதேவி ஆப்பிளும் விஷமும்  – லோகேஷ் ரகுராமன் நம்பிக்கை  – பிரபு மயிலாடுதுறை கவிதைகள்: காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்  – இரா. மதிபாலா கவிதைகள் கவிதைகள்- கு.அழகர்சாமி தவிர: குளக்கரை – குறிப்புகள்:  பானுமதி ந. ஆஷ்விட்ஸை நோக்கி  – ஒளிப்படத் தொகுப்பு அந்தக் கால சென்னை- படத் […]

10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

This entry is part 3 of 4 in the series 1 டிசம்பர் 2019

                       தலைவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றிகரமாக முடித்துத் தன் வீடு திரும்புகிறான். அதனால் மிகவும் மகிழ்ந்த தலைவி தன்னை எழில் புனைந்து அவனையே சுற்றிச் சுற்றி வருகிறாள். அதைக் கண்ட மற்றவர்கள் மகிழ்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். தலைவனின் வரவினால் ஏற்பட்ட சிறப்பாலேயே இப்பேச்சுகள் அமைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இதில் முதல் ஐந்து பாடல்கள் தலைவனின் கூற்றாகவும், அடுத்த நான்கு பாடல்கள் தோழி தலைவிக்குச் சொல்வது போலவும், அடுத்த 500-ஆம் பாடல் தோழி […]

மொழிவது சுகம் டிசம்பர் 1 2019

This entry is part 2 of 4 in the series 1 டிசம்பர் 2019

               அ. திறனாய்வு பரிசில் பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது.  உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம். பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020 வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு‘ எனும் […]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 1 of 4 in the series 1 டிசம்பர் 2019

வனாந்தரம் வனம் பெருவரம்; வனம் கனவுமயம். பெருவிலங்குகளெல்லாம் அருகில் வந்து நலம் விசாரிப்பதா யொரு நினைவு இருந்துகொண்டேயிருக்கும். வனமொழியில் கவிதையெழுத வாய்க்குமா என்றொரு ஏக்கம் தாக்குமெப்போதும். வனச்சுனை நீரருந்தும் தாகம் தீர்க்கும் வனமோகம். வனப்புலம் தினக்கணக்குக்கப்பால்; வனராஜன் வீதியுலா பொழியருவியில் மேல்நோக்கிச் செல்லும். வன பலம் வழியறியாத்த இருளடர்வு. வனமௌனம் புள்ளினங்களின் வாய்சொல்லும். அவரவர் வனம் அவரவருக்கான வனம் அறிந்த வனம் அறியாத வனம் வனமான வனம் வனமாகா வனம்…. வனம் அச்சமூட்டும்; வனம் அசரவைக்கும். வனப் […]