நாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்

This entry is part 9 of 10 in the series 29 டிசம்பர் 2019

Posted on December 29, 2019 விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு [டிசம்பர் 3, 2019] ++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++https://youtu.be/3lWUmGKfoXs தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடித்த ஐ.ஐ.டி. மாணவர் சண்முக சுப்ரமணியன்+++++++++++++++++++++https://www.indiatoday.in/science/story/isro-chandrayaan2-vikram-moon-lander-crash-site-debris-nasa-lro-1625230-2019-12-04+++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும்  !சந்திரனில் சின்னத்தை இறக்கியதுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது […]

குடியுரிமைச் சட்டம்

This entry is part 8 of 10 in the series 29 டிசம்பர் 2019

திண்ணை ஆசிரியருக்குவணக்கம்.குடியுரிமைச் சட்டம் பற்றிய விவாதங்கள் திண்ணையில் வந்துகொன்டிருக்கின்றன.அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கீழ்க்காணும் தமிழ், ஆங்கில இதழ்களைத் திண்ணை வாசகர்கள் படிப்பது நன்று:           துக்ளக்                       –                                 1.1.2020             தலையங்கம்  […]

சொல் உரித்து …….

This entry is part 7 of 10 in the series 29 டிசம்பர் 2019

சொல் உரித்து  பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை  பற்றிய உட்கிடக்கையை  உட்புகுந்து அறிந்து கொள்ள  நினைத்தேன். கடவுள் என்ற  சொல் தடுக்கி விழுந்தவன்  எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு வழியாய்  ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன். வாழ்க்கையின்  அசுர அலைகள் அலைக்கழிக்க  நான் சக்கையாகிப்போனேன். பக்தி மூலம்  உன் சதைப்பற்றுகளை  பிய்த்து எறிந்து  அந்த மரணக்கழுகுகளுக்கு  தீனி ஊட்டு. உனக்கு ஒரு விடுதலைத்தீ  பற்றிக்கொண்டது தெரிந்து விடும் என்றது அடிக்குரல். அதற்காக‌ புராணங்களைக்கேட்ட போதும்  அதே கழுகுகள் தலைக்கு மேலே  […]

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”

This entry is part 6 of 10 in the series 29 டிசம்பர் 2019

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட – தமிழ்  கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) […]

புத்தாண்டு பிறக்குது

This entry is part 5 of 10 in the series 29 டிசம்பர் 2019

சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டு பிறக்குது ! நமக்கு புத்தாண்டு பிறக்குது ! கடந்த ஆண்டு மறையுது, நடந்த தடம் மாறப் போகுது ! வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு திக்கு மறையப் போகுது. கணனி யுகம் பின்னி உலகு பொரி  உருண்டை ஆச்சுது. வாணிப உலகு கூடி இயங்கி நாணய மதிப்பு  உயருது விலை மதிப்பு ஏறப் போகுது. ஐக்கிய நாட்டு மன்றம் அமைதி கண்காணித்து வருகுது. பூகோளச் சூடேற்றம் புவியோரை ஒன்று படுத்திப் போரணியில் நிறுத்தி விட்டது. வித்தைகள் இணைந்து உழைக்கணும் ! விஞ்ஞானம் மக்கள் நலம் பெருக்கணும் ! வேலைகள் பெருகணும் ! ஊதியம் உயரணும். சித்தர்கள் மண்ணில் பிறக்கணும் ! […]

சங்கிலி

This entry is part 4 of 10 in the series 29 டிசம்பர் 2019

அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌ வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை வளைத்து நக்கிக்கொண்டிருந்தன. அன்று அந்த விநாடிப்பிஞ்சில் கண்ணின் பார்வையில் அவள்ஒரு அரை சதவீதத்தைக்கூட‌ என் மீது வீசவில்லையே. அந்த மின்னல் கயிறு அன்றோடு அறுந்தே போனது. அப்புறம் நான் சமஸ்கிருதத்தில் மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில் நசுங்கிய கரப்பான் பூச்சியாய் அச்சிடப்பட்டு விட்டேன். ஆம்.அது என் திருமணம். இந்த கேடு […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ்

This entry is part 3 of 10 in the series 29 டிசம்பர் 2019

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 213 ஆம் இதழ் இன்று (29 டிசம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் வாசகர்கள் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம்: கதைகள் 2019- ஒரேயொரு டாலர்  – அமர்நாத் கா-மென் – ரேச்செல் ஹெங்  – மைத்ரேயன் தேனாண்டாள் – லோகேஷ் ரகுராமன் கட்டுரைகள்: விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி காந்தள் மெல்விரல் – குமரன் கிருஷ்ணன் மகிமை – தன்ராஜ் மணி ஏனோ ராதா, இந்தப் பொறாமை? – பானுமதி ந. சட்டம் யார் கையில்?  – ரவி நடராஜன் நவ திருப்பதிகள்  – லதா குப்பா கவிதைகள்: விஜயா சிங் கவிதைகள்- மொழி பெயர்ப்பு  – கோரா லாவண்யா- கவிதைகள்  கா. சிவா – கவிதைகள் கவிதைகள் – ஸ்வேதா புகழேந்தி, விபீஷணன், இரா. இரமணன் தவிர: மகரந்தம்- குறிப்புகள் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு […]

அம்மா

This entry is part 2 of 10 in the series 29 டிசம்பர் 2019

மனுநீதிச் சோழனாய் அந்த மக்கட் தலைவன் அவர் வீட்டில் மனுக் கொடுக்க மக்கள் கூட்டம் ஒப்புதல் பெற ஆவணங்களுடன் அதிகாரிகள் இதோ மின்னல் ஒன்று மண்ணுக்கு வந்ததுபோல் அந்தத் தலைவன் வருகிறான் அந்த வருகையால் குடில் கோயிலாகிறது வீட்டுக்குள்ளிருந்து அம்மாவின் குரல் ‘எவ்வளவு பேரு காத்துக்கிட்ருக்காங்க எங்கடா போனே’                                 அமீதாம்மாள்

முதல் வண்ணத்துப்பூச்சி

This entry is part 1 of 10 in the series 29 டிசம்பர் 2019

கு. அழகர்சாமி நிலத்தில் கிளை நட்டேன். நீரூற்றினேன் நல் உரமிட்டேன். நாளும் மண்ணிலா- கண்ணில் வளர்த்தேன். செடி செழித்து பூப் பூத்தது அது அதன் முதற் பூ- முறுவலுடன் முதலில தலையில் சூடி அதன் முதல் ஆசை- எப்படி நான் அதை இரக்கமின்றி பறிப்பது? எப்படி நான் முதல் வண்ணத்துப்பூச்சியாகி முதற் பூவை முதன் முதலாய் முத்தமிடுவது? கு. அழகர்சாமி