உலகின் பிறபகுதிகளைப்போலவே பிரான்சுநாட்டிலும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையிற் சங்கங்கள் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. தமிழர், மலையாளி, தெலுங்கர், பஞ்சாபியர், குஜராத்தியரென குழுச்சமுதாயமாக இயங்குவதும், அவரவர் வட்டார குறியீடுகளை நினைவூட்டும் வகையில் பண்டிகைகள், மொழி வகுப்புகள், பரதநாட்டியம், மோகினி ஆட்டமென்று நற்காரியங்களில் அக்கறைகாட்டுவதும் இச்சங்கங்களின் பொதுகோட்பாடுகள். எனினும் இந்திய துணைக்கண்டத்தைச்சேர்ந்த பிற மக்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட போலிவுட்டையும், தீபாவளியையும் மறப்பதில்லை. பொதுவாக நமது மக்களுக்கென சில பிரத்தியேகக் குணங்களுண்டு, அவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சிலரேனும் இப்படி […]
இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே…எனக்கும் பிடிக்கும்… ‘அழகன் அழகி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது. ‘அழகன் யார்..? அழகி யார்..?’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், […]
இடப்பெயர்ச்சி கண்கள் கூசுவதிலிருந்து தப்பித்தேன் குளிர்க்கண்ணாடிகள் மூலம் வன்முறைகள் நிரம்பிய உலகில் இரக்கம் பறவையின் இறகுகளாய் உடலை மென்மையாய் வருடியது கரங்களை நனைத்த தண்ணீர் குருதியைவிட அடர்த்தியாய் இருந்தது பீழை தான் வாழ்வு சுமக்கும் பாரத்தை கைத்தாங்கலாக இறக்கி வைப்பார் யாருமில்லை வியர்வை நெடி விலகி ஓடத் தோன்றும் நெருங்கி வருபவர்களையும் தலையை அனுசரணையாய் கோதுபவர்களையும் அவயங்களை காமத்தின் வடிகாலாக கருதுபவர்கள் ஸ்படிக நீரில் சகதியைத் தேடுவர் கருவறையின் புனிதத்தை கெடுத்தவர் உறவுக்கு அவப்பெயர் கொடுத்தவர் சத்யநெறி […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதன் ஒருவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தும் பண்பினன். அவ்வாறு வாழ்கின்றபோது ஒருவருடைய செயல்பாடுகளைக் குறித்து மற்றவர்கள் குறையோ நிறையோ கூறுவது வழக்கம். ஒருவர் நல்லனவற்றைச் செய்கின்றபோது பாராட்டும், மற்றவருக்கு ஒவ்வாதனவற்றையோ அல்லது ஏற்றுக் கொள்ள இயலாதனவற்றையோ செய்கின்றபோது தூற்றுவர். இதனை விமர்சனம் என்று கூறலாம். இவ்வாறு பிறரால் கூறப்படும் விமர்சனத்தை சங்கச் சான்றோர் அலர் என்று குறிப்பிட்டனர். அலர் என்ற சொல் சங்கம் மருவிய காலம், […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு இன்னும் புது மணப் பெண்ணுக்குரிய வெட்கம் போகவில்லை. பாஸ்கர் ராமமூர்த்தி அவளை அன்பாகத்தான் நடத்தி வந்தான். அன்று ஏனோ கணவன் பரபரப்புடன் இருந்ததை கவனித்தாள். காலையிலேயே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அவன் போனது நிர்மலாவின் வீட்டிற்கு. மாமனாரின் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த பிறகு அவன் இவ்வளவு நாளாய் காத்திருந்தது நல்ல நாளுக்காக. தன் மனைவியின் மூலமாய் வந்துக் குவியப் போகும் லட்சக்கணக்கான சொத்துக்காக […]
தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து செல்பவர்களே அதிகம். தமிழுக்குத்தாலாட்டு இந்திக்கு ,,,, என்னவென்றால் வே அது இது என்று கையில் கிடைத்த கரிக்கட்டியால் ரயில்வே சுவரில் எழுதிவிட்டு அப்போதைக்கு கண்ணில் பட்ட இந்தி எழுத்துப் பெயர்ப்பலகைகளையெல்லாம் எல்லாம் ஔசியில் கிடைத்த தார் பூசி கன்னா பின்னா என குழப்பியும் கீறியும் விட்டு என்னைப்பார் என் அழகைப்பார் என்கிறபடி ஒரு காலத்தில் நாம் […]
என்ன தயக்கம் மாதவி?…ஃபோன் எடுத்துப் பேசுங்கள்…..எனிதிங் பர்சனல்..? நான் வேணா..வெளிய இருக்கட்டுமா..?..என்று சீட்டிலிருந்து எழுதிருக்க முயன்றான் ரமேஷ். நோ…நோ…ப்ளீஸ் ..பி சீட்ட்ட் …..பைரவி தான் மும்பையிலிருந்து பண்ணியிருக்காள், சொல்லியபடி..”ஹலோ ” எனும் போது இணைப்பு கட் ஆனது. சுழல் நாற்காலியில் சுழன்று உட்கார்ந்து கொண்ட ரமேஷ் …எவ்வளவு அழகு…….ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும்…மாதவியைப் பார்த்த ரமேஷின் கண்களில் குறும்பு தாண்டவமாடியது எதுக்கு..திடீர்னு..ஆண்டவுனுக் கு நன்றி ..? என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் மாதவி. “அத்தனை அழகையும் உனக்கே கொடுத்ததற்கு” சரிதானே..? […]
ஜோதிர்லதா கிரிஜா திண்ணையில் ஜெயஸ்ரீ ஷங்கரின் கடிதத்தை இன்று படித்தேன். (கடந்த ஒரு வாரமாய்த் திண்ணை படிக்கக் கிடைக்கவில்லை.) ரொம்பவும் குமுறாமல் அடக்கி வாசித்திருக்கும் அவரது பண்பு போற்றுதற்குரியது. எனக்கும் இது போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு விந்தையான – நம்பவே முடியாத – அனுபவம் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன்னால், ஒரு பிரபல வார இதழ் குட்டிக்கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்று ஓர் அறிவிப்பை விடுத்தது. “இங்கிலீஷ் […]
(1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]
எப்போதும் சாங் இ, உலகில் மானிடர்களைச் சந்திக்க, சீனாவின் பிரபலமான தய்ஷான் மலைச்சாரலுக்கு வருவாள். அப்படி வரும் போது ஒரு நாள் அங்கே ஒரு வயதான மூதாட்டி, ஒரு சிறு பாறையில் தடுக்கி, மூச்சி முட்டி, கீழே விழுவதைக் கண்டாள். உதவி செய்ய அருகே செல்லும் முன்னரே, அதிர்ஷ்டவசமாக, மூதாட்டி விரைவிலேயே ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றார். சாங் இ அவரிடம், “மூதாட்டியே.. ஒன்றுமில்லையே.. ஏன் இத்தனை அவசரம்..?” என்று கேட்டாள். மூதாட்டிக்கு தன்னுடைய தண்ணீர் குடுவையைக் […]