ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று. .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை […]
1)இது சாதாரண பாய்முடையும் இஸ்லாமிய நம்பிக்கையுள்ள முஸ்லிம் சகோதரியின் தீவிரவாதமல்ல. ரோட்டோர கடைகளில் தனது உழைப்பை செலவளிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சகோதரனின் தீவிரவாதமுமல்ல. இது தலிபான் தீவிரவாதத்தின் ஒரு காட்சி. 2)ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து 130கிமீ தொலைவிலுள்ள இரண்டாயிரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 175 மற்றும் 120 அடி உயரமுள்ள புத்த சிலைகளை தலிபான்கள் ராக்கெட் ஏவுகணைகளை டைனமேட் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தகர்த்து அழித்தனர். காபூலில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் புத்தச் சிலைகளையும் அழித்தொழித்தனர்.தலிபானின் […]
முகம்மது அக்பர் நோட்டேஜை “சிறுபான்மையினர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது மத நம்பிக்கையும், ஆன்மீகமும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களது வழிபாட்டு உரிமையில் எந்த வித இடையூறும் இருக்காது. அவர்களது கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும். பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அளவில், அவர்களது ஜாதி, மதம் ஆகிய எந்த விதமான வகையிலும் பாரபட்சம் காட்டப்படாது” என்று குவாயிதே ஆஸம் முகம்மது அலி ஜினா நியு தில்லியில் ஜூலை 14, 1947இல் […]
எமி ஹயகாவா பௌத்த கோவில்களையும் அதன் ஆவணங்களையும் கொரிய கிறிஸ்துவர்கள் அழிப்பதும் தீ வைத்து கொளுத்துவதும் அதிகரித்து வருகிறது. நாம்டேமுன் வாசல் என்ற இடத்தில் நடந்த பேரழிவுக்கு பிறகு கலாச்சார சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாக்க பல சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டாலும், கொரியாவின் பௌத்த கோவில்களையும் அதன் கலாச்சார சொத்துக்களையும் தீவைத்து அழிப்பதும், நாசம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. 2012 அக்டோபர் 4ஆம் தேதி ஹ்வாம்ஸா கோவிலின் காக்வாங்ஜெஒன் (Gakhwangjeon Hall of Hwaomsa Temple in Gurye […]
சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர். சிதம்பரம். (இந்தக் கதைக்கு விதையாக இருந்த ஒரு ஜோக்கை எனக்கு எழுதி அதைப் படித்துச் சொல்லி என்னைச் சிரிக்க வைத்து இப்படிச் சிந்திக்க வைத்தவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.) கொரியர் போஸ்டில் வந்து இறங்கிய இன்விடேஷன் அரை மணி நேரமாகியும் இன்னும் என் கையை விட்டு இறங்காமல் பசையாய் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது.. எனது பாசமுள்ள தோழி வசந்தியிடமிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த திருமண அழைப்பு அது. அதிலும் மறக்காமல் […]
http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html [Asteroid 2012 DA14 is about half the width of a football field (150 feet, or 45 meters), and will fly within 17,200 miles (27,700 kilometers) of our planet on Friday, Feb. 15, 2013, zooming closer to the planet than the ring of satellites in geosynchronous orbit.] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா […]
சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப் போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே! அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே இருக்கிறது! எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன். மகர நெடுங்குழைக் காதர் அவரைப் பார்த்துக்கொள்வார். நான் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தபோதே என்னுடைய தீவிர வாசகர்களீல் ஒருவராக இருந்தவரை இழந்துவிட்டேன். பிறந்துவிட்ட […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சூரியன் உதிக்கப் போவதற்கு அடையாளமாக கிழக்குத் திசையெல்லாம் செந்நிறக் கம்பளத்தை விரித்தாற்போல் இருந்தது. விஸ்வம் தன் வீட்டிற்கு முன்னால் இருந்த பூச்செடிகளுக்கு இடையே உட்கார்ந்திருந்தான். பக்கத்திலேயே ட்ரான்ஸிஸ்டரிலிருந்து பத்திப் பாடல் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. கேட்டிற்கு அருகில் ரிக்ஷா நின்ற ஓசை கேட்டுக் கண்களைத் திறந்தான் விஸ்வம். பாவனாவும், பாஸ்கர் ராமமூர்த்தியும் சாமான்களுடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தோஷத்தால் விஸ்வத்தின் கண்கள் பனித்தன. மாப்பிள்ளை […]
சு. மணிவண்ணன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. முன்னுரை ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகூட்டுதல் என்பது பொருள். இருக்கின்ற அழகை மிகைப்படுத்திக் காட்டுதல், இருக்கின்ற அழகை வெளிக்கொணருதல், அழகு இல்லாத பொருளையும் அழகாக மாற்றுதல் ஒப்பனையின் பயன்களாகும். இத்தகைய ஒப்பனைக் கலை தமிழிலக்கியங்களில் பழங்காலந்தொட்டு இடம் பெற்றுள்ளது. ஒப்பனைக்கலை பெருங்கதையில் அமைந்துள்ள பாங்கினை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். பெருங்கதை பெருங்கதை என்பது கொங்குவேளிரால் இயற்றப்பெற்ற காப்பியம் ஆகும். இக்காப்பியம் சொற்சுவை, […]
கோவிந்த் கருப் ரொம்ப ரசனையான பெயர். எங்கோ சில போஸ்டர்களில் பார்த்ததாக ஞாபகம். அதற்குப் பின் திண்ணை.காம் தளத்தில் அவரது எழுத்துக்கள் & பின்னோட்டம் படித்திருக்கிறேன்.. தமிழக அரசியலின் முக்கிய மையப்புள்ளிகளின் வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் ஒரு சாட்சியாக இருந்தவர். ஆனால், பொய்சாட்சியாக மாறி பொன் பொருள் ஈட்டாமல், உள்ளதை சொல்லி வாழ்ந்தவர். கலைஞரின் அரசியலில் கோபங்கள் இருந்தாலும், கலைஞரின் அன்னையை ”தனது வணக்கத்துக்குறிய மகா பெண்மணி” என்று மனதார சொல்லியிருக்கிறார். படித்திருந்தால், கலைஞர் மனதை நிச்சயம் […]