ஒரு நொடிப் பொழுதானாலும் சிலருடன் பழகும் பொழுது பல ஆண்டுகள் பழகிய உணர்வு ஏற்படுகின்றது. கடந்த ஒருமாதமாகத்தான் மடல் மூலம், தொலை பேசியின் மூலம் பழகினோம். இன்று அவர் பறந்து சென்று விட்டார். இந்த குறுகிய காலத்தில் எங்கள் நட்பு மனம்விட்டுப் பேசும் அளவில் வளர்ந்திருந்தது. அரசியல் உலகிலிருந்து ஆன்மீகம் வரை பேசினோம். இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தால் ஏன் பேசவில்லை என்று கேட்பார். அவர் எனக்கு எழுதிய மடல்களும் அதிகம். அவரை “சாமியாரே” என்று கூப்பிடும் […]