விந்தையிலும் விந்தை

This entry is part 1 of 4 in the series 11 பிப்ரவரி 2024

சசிகலா விஸ்வநாதன் அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் ஆவல்.துள்ளிக் துதிக்கையில் இன்பம்.ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.விசையோடு ஓடி விளையாடவும்;இசைந்து பலதும் பேசிடவும்;நேசத்துடன் கேலி பேசிடவும்;பாசத்துடன் கட்டி அணைக்கவும்;மடி மீது கண்மூடி உறங்கிடவும்;மென்மையாய் தலை கோதிடவும்;*மகனே* !நீ என்றும் என் சேலை மடிப்பில் சிறு மதலையாய்;என் மனதில் சிறு பிள்ளையாய்;என் கனவில்  கள்ளம் கபடற்ற பாலகனாய்இருக்க;என் கண்ணெதிரில் மட்டும்;முற்றிலும் வேறு ஒருவனாய்;நினைவில் முதிர்ச்சியடைந்தஆண்மகனாய்வளர்ந்த பெரியவனாய் நிற்கும் விந்தைதான்என்னே! என்னே! அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் […]

வாக்குமூலம்

This entry is part 2 of 4 in the series 11 பிப்ரவரி 2024

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

சிரிப்பு

This entry is part 3 of 4 in the series 11 பிப்ரவரி 2024

வளவ. துரையன் என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்.அவர் சிரித்துநான் பார்த்தது இல்லை.தொலைக்காட்சி நகைச்சுவைகள்அவருக்குத் துளிக்கூடச்சிரிப்பை வரவழைக்காது.என் அப்பா மிகவும்சத்தம் போட்டுச் சிரிப்பார்.என் அண்ணனோஎப்பொழுதும் புன்சிரிப்புதான்.அக்காவோஆடிக்கொண்டே சிரிப்பாள்.தாங்க இயலாமல்ஒருமுறை கேட்டதற்குஅம்மாசொன்னார்“நான்தான் சிரிப்பாசிரிக்கறேனே போதாதா?”

எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும்

This entry is part 4 of 4 in the series 11 பிப்ரவரி 2024

பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா தமிழில் : வசந்ததீபன் (1) எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும் ____________________________________________ புத்தகங்கள் பயமுறுத்த தொடங்கியிருக்கின்றன இப்போது நான்கரை ஆண்டுகளின் வயதில் தான் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் அதற்கு பிறகு கடவுளே…… தெரியவில்லை எத்தனை யுகமும் நித்தியமும் கழிந்து அச்சடிக்கப்பட்டது எழுத்துக்களும்… எழுத்துக்களும் தான் கண்களுக்கு முன்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டு ஆயிரம் _ ஆயிரம் பக்கங்கள் மற்றும் எத்தனை படிக்கப்பட்டு இருக்கிறது என்ன அதைவிட அதிகமாக […]