’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

This entry is part 18 of 18 in the series 12 பெப்ருவரி 2017

கே.எஸ்.சுதாகர்   நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.   ’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.   அதே […]

மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு

This entry is part 17 of 18 in the series 12 பெப்ருவரி 2017

Date: 25/2/2017 Time: 5.30 PM Venue: ICSA Centre, Opposite Connemara Library, Egmore, Chennai – 8. அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் விருதிற்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என். கல்யாண ராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.   செய்மதிதொடர்பாடல் பொறியாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ISROவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி விட்டுத் தற்சமயம் சென்னையில் வசிக்கும் என். கல்யாண ராமன், “இலக்கியம், நாம் வாழும் […]

மாவீரன் கிட்டு – விமர்சனம்

This entry is part 1 of 18 in the series 12 பெப்ருவரி 2017

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம். 12-ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று கலெக்டருக்குப் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தப்படுகிறான். உடனே ஆதிக்க சாதிகளுக்கு பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாய் அவன் மீது வீனான கொலைப்பழியை சுமத்திவிடுகிறார்கள்.  அதிலிருந்து மீண்டும் அவன் வந்தானா என்பது கதை. அதாவது ஒரு கூட்டத்திற்கு கிடைக்கும் படிப்பை,  தொடர […]

பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்

This entry is part 3 of 18 in the series 12 பெப்ருவரி 2017

                                                                                    முருகபூபதி – அவுஸ்திரேலியா                        கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த  இலக்கிய  ஆளுமையின் பிறந்ததினம்  கடந்த 06-01-2017. வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி,  அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த […]

செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.

This entry is part 4 of 18 in the series 12 பெப்ருவரி 2017

  செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West […]

நாற்காலிக்காரர்கள்

This entry is part 2 of 18 in the series 12 பெப்ருவரி 2017

இந்திய திருநாடே, தமிழகத்து அரசியல் கோமாளிகளையும், ஏமாளி மக்களையும் பார்த்து சிரிக்கின்றனர். பொறுமையின் உருவம், பன்னீர், அம்மாவின் சமாதியில் தியானம் செய்துகொண்டு, பொங்கி எழுந்தார். உண்மைகளை போட்டுடைத்தார். போயஸ் தோட்டத்து உண்மைகளை, நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். இதுவரை, அந்த கூட்டத்துட ன் அங்கமாக இருந்தவர், அவரது பதவிக்கு பங்கம் வந்த போது, பொங்கி எழுந்துள்ளார். இது தர்மமா ? நியாமமா? என்று, நம்மை பார்த்துக் கேட்கின்றார். நாம் தான் ,ஆமாம் சாமிகளாச்சே ! ஆமாம், ஆமாம் சாமி என்று […]

14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்

This entry is part 5 of 18 in the series 12 பெப்ருவரி 2017

புத்தகவெளியீடுகள் —————— 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின்  நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில்                                      ”  Sumangali “ * களவாடப்பட்ட குழந்தைப்பருவம்               மற்றும் 0 சுப்ரபாரதிமணியனின் நூல்கள் * நெசவு ( தொகுப்பு நூல் ),    முறிவு (நாவல் ) * குழந்தைகளுக்கான நூல்கள் “ The art of stry telling “,   “ The  baniyan tree “ –    Thought  provoking stories      for children […]

பூக்கும் மனிதநேயம்

This entry is part 6 of 18 in the series 12 பெப்ருவரி 2017

மீனாட்சி சுந்தரமூர்த்தி பூக்கள் சிரிக்கும் கூடையிலே, மத்தாப்பூ மலரும் முகத்தினிலே. கூடை சுமக்கும் இடுப்பு பூக்களைக் கூவி விற்கும் அழைப்பு. நெற்றியிலே திருநாமம் நெஞ்சில் திருமாலின் நாமம்,சபரியோ இவள் வாய்சிவக்கும் வெற்றிலை. கைகுலுங்கும் கண்ணாடி வளையல் மூதாட்டி. விடியலில் இவள் வந்தால் மணியேழு. மாலைக்கிவள் வரவு ஆறு.  கொல்லையில் சந்தன முல்லை, ரோஜா, குண்டுமல்லி வீடுதோறும் உண்டு. ஆனாலும் நாங்கள் காத்திருப்போம் இவளின் விடியல் அந்தி வரவுக்காக. ஒருநாளும் சரியாய் முழம்போட மாட்டாள், ஒருமுழம் எப்போதும் ஒன்றரைதான். […]

மாமா வருவாரா?

This entry is part 7 of 18 in the series 12 பெப்ருவரி 2017

என் செல்வராஜ்       அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.  பேருந்து வசதி என்பது அரிதான காலம்.   மாமா ஊர் உடையார் பாளையம் அருகில் பெரிய கிராமம். என்  ஊரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால்      இருக்கும் பெரிய ஊரான பாளையங்கோட்டையிலிருந்து தான் பேருந்து வசதி. ஊருக்குள் மூன்று ஆர்ட்டீசியன்  நீரூற்றுகள். எப்போதும் தண்ணீர் தானாகவே   கொட்டிக்  கொண்டிருக்கும். போர்வெல்  போட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிறது.  வயல்வெளியில்  தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் முப்போகம் நெல் […]

எங்கிருந்தோ வந்தான்

This entry is part 8 of 18 in the series 12 பெப்ருவரி 2017

எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. 40 வயது தாண்டிடவர்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயாம். சில பிறந்த குழந்தைகளுக்குக் கூட இருப்பது புதுத் தகவல். சரி. இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூட அத்துபடி. அது போக எங்களுக்காகவே இருக்கும் ஊட்ராம் பார்க் சிறப்பு மருத்துவமனையில் […]