அப்போதுதான் வந்தமர்ந்த புதுப்பறவையை பார்த்தேன். இணைக் காண சோகம் பாடும் தேடலில் கண்டேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சி பறவையின் முகத்தில் அமர்ந்து சென்றது. அது கொடுத்த மகரந்த யாழின் பாடலில் பல்லாங்குழி வாசித்தது புதிய பறவை. தேடி நிதம் சோறு தின்னும் எறும்பின் உரசலில் ஒய்யாரமாக ஆடியது பறவை. கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும் ஒரு பிடி அமாவாசை பருக்கைப்போட்டது. கண்ணீரோடு தின்ற புதிய பறவை தன் பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது. வந்தமர்ந்த காகம் […]