உதய சூரியன் சொத்துக்கள் பல குவித்த நல்ல மனிதர் இறந்தார் மனைவிக்கு புத்திசுவாதினம் மகள்கள் இருப்பிடம் தெரியவில்லை இழவு வீட்டையே வெறித்து நோக்கும் தெருவாசிகள் !!! —————- ———————————– —————— ஒன்றோடு ஒன்றான கால்கள் சில மணித்துளிகளில் தளர்ந்தன, நகரவில்லை இந்த சாதாரண கனவுகளை நான் ரசிப்பது இல்லை பிறிதொரு நாளில் என் கால்கள் தளர்தன வலிக்கு நிவாரணமில்லை இன்று அந்த சாதாரண கனவை அன்றைய பொழுதில் ரசிக்க விழைகிறேன் ரசித்த பின் காலம் முடியட்டும் […]
யசோதராவின் சயன அறை வாயிலில் நிழலாடியது. “இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது” என்றாள் பணிப்பெண். ” அந்தத் தூதுவனை வரச் சொல் ” என்றாள் யசோதரா. தூதுவன் அறையின் வாயிலில் கிடையாக விழுந்து வணங்கினான். “இளவரசி யசோதரா, இளவரசர் சித்தார்த்தர், மன்னர் சுத்தோத்தனர் வாழ்க. கபிலவாஸ்துவில் என்றும் மங்களம் தழைக்கட்டும்” “வருக தூதுவரே. உங்கள் பயணம் இனிதாயிருந்ததா?” “ஆம் இளவரசி. தாங்களும் ராகுலனும் நலம் தானே?” “நலமே. […]
கள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டிருந்தாயிற்று கனகாலம். சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப் பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து குரல்வளை நெரிக்கப்படுகிறது. இந்த சுதந்திரம்கூட இல்லாமல், எல்லாம் எதற்கென்று தோன்றுகிறது. நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனை பூச்சொரிதல்…கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும் பிஸ்கட் போலச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா, அல்லது துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று […]
மதியழகனின் ’வியூகம் கொள்ளும் காய்கள்’ சுமக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் இளம்பருவத்து நினைவுகள் சுழலச்சுழல, அவற்றை அசைபோடுவதையே இத்தொகுப்பின் மையப்போக்காக எடுத்துக்கொள்ளலாம். அகலாத இந்த நினைவுகள் பலவகையானவை. சாதியை முன்னிட்டு எழும் நினைவுகள். காதலை முன்னிட்டு எழும் நினைவுகள். களிப்பான காட்சிகளை முன்னிட்டு எழும் நினைவுகள். மனிதர்களை முன்னிட்டு எழும் நினைவுகள். பாதிக்கும் மேற்பட்டவை இப்படிப்பட்டவை. ஒரு கவிஞனாக, தான் பயன்படுத்தும் சொல்லின்மீது கவனமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருக்கிறார் மிக இயற்கையான வீச்சோடு சொற்களைப் பயன்படுத்தினாலும் எல்லாத் […]
நிலாவண்ணன் அது அழகும் எழிலும் ஒருங்கே கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் போன்ற ஒரு கிராமம். அக்கம் பக்கத்தில் சில கிராமங்கள் இருந்தாலும் இந்த கிராமத்திற்குத் தனி மகத்துவமும் பெருமையும் இருந்தன. அதிக உயரம் இல்லாத மலைகளும் சிறு குன்றுகளும் கிராமத்தைச் சூழ்ந்திருந்தன. அந்த மலைகளில் பச்சைக் காடுகள் சூழ்ந்திருந்தது. அந்தக் காடுகள் வற்றாத மழை வளத்தை அந்த கிராமத்திற்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தது. மலையில் உருவாகிய அருவிகள் ஒன்றாகி பலவாகி சம தரைக்கு வரும்போது சிறு நதியாகி […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை வாழ்வில் எம்மை அசௌகரியத்துக்குள்ளாக்குகின்ற எத்தனையோ சம்பவங்கள் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவசரமாக வேலைக்குச் செல்லும் போது வீதியில் ஏற்படும் வாகன நெறிசல், அமைதியாக தியானம் பண்ணும் போது மட்டும் ஆங்காங்கே ஊறிச் செல்கின்ற கட்டெறும்பு, அழகழகாய் கட்டிக்கொண்டிருக்கும் மணல் கோட்டையை ஒரே நொடியில் அழித்துவிடும் கடலலை என எம்மை அசௌகரியப்படுத்தும் ஏகப்பட் சமாச்சாரங்கள் எம்மோடும் எம்மைச் சூழவும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வகை சின்ன சின்ன அசௌகரியங்கள் எமக்கு […]
சித்ரா சிவகுமார் ஹாங்காங் டப்பா. மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பா. அதுவும் ஸ்டான்லி என்கிற பள்ளி செல்லும் சிறுவனின் டப்பா. இது தான் கதையின் கரு. ஒன்றரை மணி நேரம் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை, இந்த மதிய உணவு டப்பா காரணமாக நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லுவதே “ஸ்டான்லி கா டப்பா” – ஸ்டான்லியின் டப்பா என்ற ஹிந்தி திரைப்படம். கடந்த வாரம் வரை எப்போதும் விஜய் தொலைக்காட்சியையே நாங்கள் இங்கு ஹாங்காங்கில் பார்த்து வந்தோம். […]
மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன […]
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். […]
Moon’s Dynamo Core சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பொங்கிவரும் பெரு நிலவைத் தங்க நிலவாய்ப் புலவர் புனைந்தார் உள்ளடுப்பு அணைந்து போய் முகத்தில் பள்ளம், பருக்கள், கருமை நிழல் ! முழு நிலவுக்கு வெள்ளை அடித்து வேசம் போடுவது பரிதி ! நிலவின் பிறப்ப றியோம் ! அச்சின்றி சுற்றுவது நிலவு ! அங்கிங் கெனாதபடி எங்கும் வங்குப் பெருங்குழிகள் ! சுற்றியும் சுழலாத பம்பரம் ! ஒருமுகம் காட்டும் புவிக்கு […]