விதண்டா வாதம்

This entry is part 4 of 4 in the series 25 பிப்ரவரி 2024

சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான்   விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில்  பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை  நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன  நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல்  ஏன்? நான் […]

உற்றவன்

This entry is part 3 of 4 in the series 25 பிப்ரவரி 2024

ஆர் வத்ஸலா எனக்குள்ளது ஒரு துன்பம் என உன்னிடம் நான் சொல்லிக் கொண்டேன் உனக்கு துன்பமே இல்லை என நான் கருதுவதாக அர்த்தம் செய்துக் கொண்டு கோபித்தாய் நீ உன்னிடம் என் துன்பத்தைச் சொல்லி ஆற்றிக் கொள்ள எண்ணியது மட்டுமல்ல உன்னை எனக்கு உற்றவனாகக் கருதியதே தவறு என புரிந்து விட்டது

தமராகித் தற்றுறந்தார் வாழி!    

This entry is part 2 of 4 in the series 25 பிப்ரவரி 2024

                                       சோம. அழகு       வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]

ஹிந்தி குறுங்கவிதைகள்

This entry is part 1 of 4 in the series 25 பிப்ரவரி 2024

தமிழில் : வசந்ததீபன் ________________________________ (1) நீ இந்திரன் கெளதம் ராம் எந்த உருவத்தில் இருந்தாலும் எப்போது புரிந்து இருக்கிறாய் என்னை கெட்ட பார்வை சாபம் இரட்சிப்பு இதுவாக இருந்து கொண்டு என் நியதி தவறாக தங்கிப் போனேன்  நான் தான்  ஒவ்வொரு முறை நீ கடவுள்களின் ராஜா தர்ம பாதுகாவலர் மீட்பர்  மஹான்களுக்கு ஆனாய் மற்றும் நான்  ஒவ்வொரு முறை அப்பாவி அகல்யா.  ஹிந்தியில் : ரஞ்சனா ஜெய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் (2)  நான் […]