அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ், 26 ஜனவரி., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் நூல் அறிமுகம் ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும் – ரமேஷ் கல்யாண் ராவண நிழல் – புதினம் – இரா. சைலஜா சக்தி மனிதர்களின் கதை: நிழல் நிஜம் – அன்பாதவன் அரசியல் முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும் – தமிழாக்கம் […]
பாவண்ணன் மகத்தான கனவு நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத் தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின. உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன். அந்தச் சிறுகதைத்தொகுதியை எழுதியவர் […]
எங்கோ தலைசாய்த்து பார்க்கின்றது சிட்டுக்குருவி. துணையை தேடுகின்ற காலத்தில் வேதனையை முழுங்கிவிடுகின்றது. ஒற்றைக்குருவியாய் சுள்ளிகள் பொறுக்கி கூடும் கட்ட உடல் வேதனை. மனம் இன்னும் துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில் கொஞ்சி குலாவி மகிழ்ந்து உயிரோடு உயிர் கலந்து சில்லிட்டுப்பறந்தன ஜோடிக்குருவிகள். சிட்டுக்குருவியின் ஏக்கத்தில் என் அக்கா தடவிய ஜன்னல் கம்பிகள் தேய்ந்தே போயின பல வருடங்கள் துணைக்காக காத்திருப்பு வாழ்வின் பெரும் சோகம். ஜாதகக்கட்டில் பல்லாங்குழி விளையாடினார் புரோகிதர் சிகாமணி. சர்ப்ப தோஷம் செவ்வாய் […]