எனக்குள்

This entry is part 1 of 2 in the series 21 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா சோகங்களை  பகிர்ந்து கொள்ள இனி யாரும் இல்லை தான்  வெற்றிகளை  கை தட்டிக் கொண்டாட என்னோடு இனி யாரும் இல்லை தான்   மரங்களின் குளியலை இலைகளின் ஆட்டத்தை உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும் வேர்களின் மெல்லதிர்வை காற்றின் கவிதையை என்னுடன் சேர்ந்து ரசிக்க இனி யாருமில்லை தான் கண்ணீரில் பார்வை மங்கியிருப்பது உண்மை தான் ஆனாலும்  உயிர்த்திருக்கிறேன் நான் எனது ரசனையின் கதகதப்பில்