குரு அரவிந்தன் இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தமிழக நண்பரும், கவிஞருமான மு.முருகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அகணி பதிப்பகத்தின உரிமையாளரான அவரது பதிப்பகத்தின் நூல்களும் அங்கே தனியாக ஒரு காட்சியறையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த காட்சியறையில் எனது 7 சிறுகதைத் தொகுப்புகளும், 7 புதினங்களும் அவரால் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதைவிட 22 தமிழக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய […]
ஜெயானந்தன் அந்த நவீன பாத்திரக்கடையில் நுழைந்து, தேடித்தேடி பாத்திரங்களை ஆராயும் படிகளை தாண்டிவிட்டேன். எல்லா நவீன பாத்திரங்களும் அதனதன் தன்மைகளை கூற. ஏனோ எனக்கு என் பழையப்பாத்திரங்களே போதும்போல்தான் தோன்றியது. புதுசோ, பழசோ கையில் உள்ளதுதானே வயிற்றை நிரம்பும். ஜெகதாம்மாளுக்கு இது தெரியாதா, எனக்கு தெரியாது. அவளுக்கு நவீன சட்டி வேண்டும் எனக்கோ பழைய, மண்பாண்டம் போதும். எப்படியும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தோண்டப்போகும் அகழ்வராய்ச்சியில் கிடைக்கப்போவது சட்டியும், பானையும் தானே. தேடித்தேடி அலையும் உடலும் […]
ஜெயானந்தன் ஒரு போதி மரத்தின் கீழ் நான்கு சந்நியாசிகள் . ஒருவர் தியானம். அடுத்தவர் தூக்கம். மூன்றாமவர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டருந்தார் . நான்கமவர் மரத்திற்கு தண்ணீர் விட்டார். வரும்போகும் சம்சாரிகள் தியான சந்நியாசி காலில் மட்டும் விழுந்து எழுந்துச்சென்றனர். மற்ற மூன்று சந்நியாசிகளும் அவரவர் பணிகளை அவரவர் செய்துக்கொண்டிருந்தனர். -ஜெயானந்தன்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள். இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும் நான்கு எழுத்தாளர்கள். அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, […]
ரவி அல்லது தேக்க முடியாதென தெரிந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எப்பொழுதும். மொண்டு குடித்த நீங்கள் அவரவர் விரும்பிய பானத்தையொத்திருப்பதாக சொல்கிறீர்கள் எப்பொழுதும். பூரிப்பில் லயித்து அப்படியே அதுவாகவே இருக்கின்றேன் துலக்கிய அன்பின் பிரவாகமாகமெடுத்தோட யாவையும் நேசித்து எப்பொழுதும். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
ரவி அல்லது வரப்பைத் தலையணையாக்கி வானத்தை உள் நோக்கிக் கிடக்கும் பொழுது வருடுகின்ற கொப்பின் இலைகள் பறக்க வைக்கிறது பாரிய சுகத்தில். தேங்கி இருந்த பனிச் சொட்டொன்று சிரமப்பட்டு பயணித்து சிரசுக்குள் புகுந்து சிந்தை கலைத்து சிறையில் தள்ளியது பூமிக்கு அழைத்து. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com
முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பெரியார் கலைக்கல்லூரி, கடலூர் – 1. தமிழில் இலக்கியங்கள் காலந்தோறும் ஒவ்வொருவகையில் உருவாகிக் கொண்டே வருகின்றன. இதனை காலஅடிப்படையில் சங்கஇலக்கியங்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை இலக்கியங்கள், கதை இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் என உருவாகி வருகின்றன. அதனதன் தன்மைகளுக்கும் அமைப்புகளுக்கும் பாடுபொருளுக்கும் ஏற்ப இவற்றைப் பிரித்தறிய முடிகிறது. இலக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வியலையும் அவ்வாழ்வியல் மேம்படுவதற்கானப் பாதைகளையும் எடுத்தியம்பும் […]