போய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்

This entry is part 1 of 12 in the series 29 ஜனவரி 2017

தமிழ் ஊட்டம் – அழகர்சாமி சக்திவேல் (Thanks to Nick Dutty – UK Pink News) அமெரிக்க ஜனாதிபதி திரு பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகை வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து இருக்கலாம். அதன் முடிவில், இந்த உலகம் முழுதும் வாழும் ஓரினச்சேர்க்கையாளர் நல்வாழ்விற்காய், கடந்த எட்டு வருடங்களில், ஒபாமா எடுத்துக்கொண்ட எண்ணற்ற பெருமுயற்சிகளையும் இனி இந்த உலகம் மறந்து போகலாம். ஆனால் அப்படி எளிதில் எவரும் மறந்து போய் விடாமல் இருக்கும் நோக்கத்துடன் எழுதப்படுவதே […]

புலவிப் பத்து

This entry is part 2 of 12 in the series 29 ஜனவரி 2017

வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி ‘புலவிப் பத்து” என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களில் தலைவிய சொல்வதாக ஆறு பாடல்களும் தோழி சொல்வதாக நான்கு பாடல்களும் அமைந்துள்ளன. புலவிப் பத்து—1 ’தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து […]

புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

This entry is part 3 of 12 in the series 29 ஜனவரி 2017

இரா. ஜெயானந்தன். பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த அனுபவங்களின் வாயிலாக, தஸ்ஸிமா நஸ்ரின் நாவலாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் வெளி வந்தவுடன், அவரை கொல்வதற்கு அவரது நாட்டிலேயே ஒரு கும்பல் அவரை […]

நமன் கொண்ட நாணமும் அச்சமும்

This entry is part 4 of 12 in the series 29 ஜனவரி 2017

(வரதராசன். அ .கி) ”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . “ காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே” என்று தானே அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். இப்படி உலகில் வாழ் மக்கள் அனைவரும் எவனைக் குறித்து அஞ்சுகிறோமோ அந்த நமனுக்கும் அச்சம் வந்துவிட்டதாம். யமனுக்கும் வந்ததோ யமபயம் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்விதம், யமன் அஞ்சுவது எதைக் குறித்து என்பதைக் கம்பன் […]

தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.

This entry is part 5 of 12 in the series 29 ஜனவரி 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 155. பல்லவர் தமிழர் அல்லர். திருவள்ளுவர் துரித பேருந்தின் மூலமாக எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை சென்றோம். ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக அது சென்றது. காஞ்சிபுரம் வந்தபோது எனக்கு கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நினைவுக்கு வந்தது . அக்காலத்தில் இந்தப் பகுதிகள் பல்லவ நாடு என்று அழைக்கப்பட்டது. அதன் தலைநகரமாக காஞ்சி திகழ்ந்துள்ளது. துறைமுகப் பட்டினம் மகாபலிபுரம். காஞ்சியை சுற்றிலும் மகேந்திர பல்லவர் கட்டியிருந்த மதில் அரண்கள் உள்ளனவா […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 6 of 12 in the series 29 ஜனவரி 2017

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ 22. வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு கடந்த கவலை, எதிர்கால அச்சம் இன்று நீங்கும் மறுநாள் ஏன்? நான் வாழ்வேன் நானாக நாளை, கடந்து போன பல்லாயிர வருடத் தொடர்போடு. 22. Ah, my Beloved, fill the Cup that clears To-day of past Regrets and […]

பிசுபிசுப்பு

This entry is part 7 of 12 in the series 29 ஜனவரி 2017

அருணா சுப்ரமணியன் நகரப்பேருந்தின் நரகப்பயணத்தில் நரன்களிடையே நசுங்கி நீந்தி கரை சேரும் கணத்தில் எட்டிப்பிடித்த கைப்பிடியில் எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ள.. எத்தனை முறை கழுவினாலும் நுண்கிருமிகளை கொல்லும் வழலையால் கூட விரட்ட முடியவில்லை – அந்த வழவழப்பின் அருவருப்பை….

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

This entry is part 8 of 12 in the series 29 ஜனவரி 2017

பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981) நாவலை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அல்பெர் கமுய் (இதுதான் சரியான உச்சரிப்பு என்கிறார் கிருஷ்ணா) எனக்குத் தெரிய வந்தார். சுந்தர ராமசாமி சுட்டுகிற பெயர் என்பதனாலேயே மனதில் கிடந்த அந்தப் பெயர், பின்னாட்களில் “அந்நியனை” […]

கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.

This entry is part 9 of 12 in the series 29 ஜனவரி 2017

சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் ‘சக்கரவாளக்கோட்டம்’ என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக ‘றியாஸ் குரானா’வின் ‘சில நினைவின் காலடி’ என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ் இன் முதல் கவிதை இது என்றுதான் சொல்ல வேண்டும். மேற்சொன்னவர்கள் இரட்டையர். கீழுள்ளவர் தனித்த படைப்பாளி. இருவரின் ஒற்றுமை நவீனத்துவத்தைத் தாண்டிய கவிதைகள் எழுதுவது/எழுதியமை. (பின்நவீனத்துவமாகவும் இருக்கலாம்.) “இரண்டாகப் பிளந்த” விடயத்தை கவிதைக்குள் இவர்கள் […]

பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி

This entry is part 10 of 12 in the series 29 ஜனவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி திருக்கோளூர் சென்ற நாயகி ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமா னுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும். எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதில் நாயக நாயகி (தலைவன், தலைவி) பாவமும் ஒன்று. இந்த உறவே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்பர். இந்த முறையில் பரம் […]