கடலோரம் வாங்கிய காற்று

This entry is part 6 of 16 in the series 31 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன் அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே இதற்கு இது மாண்டது என்னாது அதன் பட்டு ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் மயில் கண் அன்ன மாண் முடிப்பாவை நுண் வலைப் பரதவர் மடமகள் கண் வலைப் படூஉம் கானலானே மூத்தகுடி சொல்லிக் கேட்டதில்லை காதல் இல்லையென்று, காதல் நடந்ததில்லையென்று, காதலைக் கண்டதில்லையென்று. நாம் நடந்த பாதையிலே நல்லதுவோ கெட்டதுவோ ஐம்புலனும் உணர்வதும் மெய்தானே. நேரம் ஒரு பொருட்டல்ல, […]

கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி

This entry is part 5 of 16 in the series 31 ஜனவரி 2021

அழகியசிங்கர்           நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை.  இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது.  ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை.  ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன்.  என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன்.           அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது.           மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த “பூஜ்ய விலாசம்” என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல […]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 16 in the series 31 ஜனவரி 2021

                                                     என்னும் சமண்மூகரும் நான்மறையோர்               ஏறும், தமிழ்நாடனும், ரகுமரபில்           பொன்னும் பெருநம்பி குலச்சிறையும்                 போய் வைகையின் வாதுகளம்புகவே.          211 [மூகர்=வறியர்; நான்மறை=நான்கு வேதங்கள்; ஏறு=காளை; ரகு=சூரியன்; மரபு=குலம்; வாது=போட்டி; களம்=இடம்] என்று சூளுரைத்த சமணர்களும், நான்கு வேதங்கள் கற்ற ஆண்சிங்கம் ஞானசம்பந்தரும், தமிழ்நாடனாகிய மதுரைப் பாண்டியனும், சூரியகுலத் திலகமான குலச்சிறையாரும் வைகை ஆற்றின் கரையில் வாதுபோர் நடக்கும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.             கனலில்புகும் ஏடுஇறை கண்ணில் மதன்                 […]

தமிழிய ஆன்மீக சிந்தனை

This entry is part 3 of 16 in the series 31 ஜனவரி 2021

****** எச்.முஜீப் ரஹ்மான் தமிழர் ஆன்மீக மரபு என்பது முழுக்க முழுக்க அறிவை அடிப்படையாகக் கொண்டது. எனவே தான் தமிழிய சிந்தனை அல்லது இயல்பு வாதம் அல்லது பூதவாதம் ஒரு மரபாக இருந்து பல்வேறு சமயங்களுக்கு பெரும் கொடை அளித்திருக்கிறது. உண்மைமை சொல்லப்போனால் தமிழருடைய ஆன்மீகம் என்பது ஞானத்துக்கு உயர்ந்த இடத்தை கொடுக்கிறது. பொதுவாக மக்கள் ஆன்மீகத்தை புரிந்து கொள்வதின் அடிப்படையில் ஞானி, அறிஞர் ,சாதாரண மக்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஞானியால் மட்டுமே அந்த அறிவை […]

தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்

This entry is part 2 of 16 in the series 31 ஜனவரி 2021

மொழி பெயர்ப்பு : மலையாள மொழி சிறுகதை மூலம்   : வைக்கம் முகமது பஷீர் ஆங்கிலம் : மினிஸ்தி நாயர் தமிழில்  :தி.இரா.மீனா                           “நீங்கள் கேள்விப்பட்டிருப்பது  எல்லாமே முட்டாள்தனமானது .நான் எந்த மரத்தையும் பூஜிக்கவில்லை;இயற்கையையும் வழிபடுவதில்லை.ஆனால் இந்த மாமரத்தோடு எனக்குத் தனியான நெருக்கமிருக்கிறது.என் மனைவி அஸ்மாவுக்கும் கூட.விதிவிலக்கான ஒரு பெருமுயற்சியின் அடையாள வில்லைதான் இந்த மரம்.அதை நான் நுட்பமாகச் சொல்கிறேன்…” நாங்கள் அந்த மாமரத்தினடியில் உட்கார்ந்தோம்.அது மாங்கனிகளால் நிறைந்திருந்தது.சுற்றிலும் பெரிய வட்டமாக வெள்ளை மணல் பரவி […]

ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!

This entry is part 1 of 16 in the series 31 ஜனவரி 2021

ஜெ.பாஸ்கரன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி – அவரது படைப்புகள் இன்றைக்கும் வாசிப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வுகள் அதே வீச்சுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பது, அவரது காலம் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் எழுத்துக்கும், சமூக சிந்தனைகளுக்கும் சான்றாகும். இறந்து போன பாட்டியின் பேத்தி ஶ்ரீமதியின் பார்வையில் சொல்லப்படுகிறது கதை – பாட்டி இறந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது – தாத்தா அழவே இல்லை – […]