புத்தாண்டில் இளமை

This entry is part 4 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா தீர்மானங்கள்  தாண்டாது ஒரு நாள் கூட எனத் தெரிந்தும் செய்த நாட்கள் போய் விட்டன துரோகங்களுக்காக கொதித்த நாட்கள் போய் விட்டன நம்பிய கட்சியும் தெரிந்த குட்டையில் ஊறியது தான் என்று  ‘மைக்’கில் குரலோங்கிய நாட்கள் போய் விட்டன அனுபவங்கள் கனக்கின்றன அவற்றை தூக்கி போட்டு மிதித்து மீண்டும் போராடும் மன இளமை தா தாயே பராசக்தி!

ஒருவருள்  இருவர்

This entry is part 3 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா அடிப்படை மரியாதை அதீத புரிந்துணர்வு பொறுப்புணர்வு மன முதிர்ச்சி என ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் நீ உனது பணியிடத்தில் வீடு திரும்பியதும் வெள்ளை கோட்டுடன் அவற்றையும் மாட்டிவிடுகிறாய் ஆணியில்

திருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வை

This entry is part 2 of 4 in the series 7 ஜனவரி 2024

டாக்டர் ஆர் அம்பலவாணன்  Dr. R. Ambalavanan Professor of Civil Engineering (Retd.) IIT, Madras ( 23அக்டோபர் 2023, டொரான்டோ, கானடாவில் திரு ஜெயமோகன் ‘அறம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையை அடியொற்றி எழுதியது)      சமீப காலமாக, சனாதனம் என்ற சொல் பரவலாக எல்லா மட்டங்களிலும் பேசப்படுகிறது.அரசியலில் சூடான விவாதமாகவும் மாறியுள்ளது. சனாதனம் என்றால் பழமை, மாறாத தன்மை, (இந்து மதத்தில் இணைந்த!) வாழ்வியல் என்று ஒரு பக்கமும், மக்களை வருணமாக, சாதிகளாக, […]