குழந்தைகளும் கவிஞர்களும்

This entry is part 8 of 8 in the series 21 ஜூலை 2019

லதா ராமகிருஷ்ணன் உங்களால்  பிரியப்பட்டு  பணியாற்றமுடியவில்லை பிடிக்காமல்தான் வேலைசெய்ய முடிகிறதென்றால் உங்கள் வேலையை விட்டுவிடுவதே மேல்.  கலீல் கிப்ரான் (*தமிழில் : லதா ராமகிருஷ்ணன்) கண்ணீர் சிந்தாத விவேகத்திலிருந்து என்னை அப்பால் தள்ளி வை. மனம்விட்டுச் சிரிக்காத தத்துவத்திலிருந்தும் குழந்தைகளின் எதிரில் தலைதாழத் தெரியாத மகிமையிலிருந்தும். (*தமிழில் – லதா ராமகிருஷ்ணன்) Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் கலீல் கிப்ரானுடைய  கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இங்கே […]

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா

This entry is part 7 of 8 in the series 21 ஜூலை 2019

அன்புடையீர்  வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழாவின் அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டுப் பரவலாக்கம் செய்திட அன்புடன் வேண்டுகிறே்ன.

செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்

This entry is part 6 of 8 in the series 21 ஜூலை 2019

                                முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி , சிங்கப்பூர் முன்னுரை: வாழ்வில் அனைவரும் அமைதியை விரும்புதல் இயற்கை. அமைதி என்னும் சொல் அகத்தோடும் புறத்தோடும் மிக நெருங்கிய தொடர்புடையது.   இன்றைய பரபரப்பான  வாழ்க்கைச்சூழல் மன அமைதியின்மையை அதிகரித்திருந்தாலும்  அதே வேளையில் அதன்  மகத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆயின்  மிகப் பழங்காலத்தில் நம் மூதாதையர் வாழ்க்கையில்   மனஅமைதியின்மை  என்னும் சொல்லுக்கே இடமிருந்திருக்குமா என்று ஐயுறத் தோன்றுகிறது.    புறவுலகில் நிகழும் போர் போன்ற நிகழ்வுகளால் வாழ்வில் அமைதி  […]

குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’

This entry is part 5 of 8 in the series 21 ஜூலை 2019

வணக்கம். எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’ என்ற கல்கி இதழில் வெளிவந்த சிறுகதையைக் கலைஞர் தொலைக்காட்சிக்காகக் குறுந்திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.  இந்தக்கதை இதுவரை ஆறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுளள்ளது. உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கின்றோம்.  https://www.youtube.com/watch?v=AUKlR7IB7As&feature=youtu.be&fbclid=IwAR2U4oWi_uSDEcPr8vd7wHGHgXg_eInymdMobXRHPxYMmHm6UfxSXl5ahB8

அற்புதம்

This entry is part 4 of 8 in the series 21 ஜூலை 2019

கு. அழகர்சாமி தேவாலயம் பூட்டிக் கிடக்கிறது. குரங்குகள் அதன் ஓடுகளைப் பிரித்துப் போட்டிருக்கின்றன. தேவனின் அற்புதங்கள் தேடி யாரும் அங்கு வருவதில்லை. அருகில் பிரார்த்தித்திருக்கும் பூக்கும் காலமும் பூக்காத காலமும் தெரிந்த மாமரம். எங்கு செல்கின்றன அதன் வேர்கள்? அதன் ஆன்மாவின் ஆழம் தேடியா? அல்லது தேவனின் ஆதித் தடம் தேடியா? அன்றேனோ குரங்குகளின் அட்டகாசம் ஏதுமில்லையென்று அளக்கிறாள் ஒருத்தி. அதை அற்புதமாய் தினந்தோறும் அவள் விரும்புகிறாளென்று தெரிகிறது. மாமரத்தின் கிளைகள் பிரிந்திருக்கும் ஓடுகளில் தாழ்ந்து தேவனைத் […]

அரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்

This entry is part 3 of 8 in the series 21 ஜூலை 2019

நிலவில் மனிதன் முதல் தடம் வைப்பு [1969 ஜூலை 20] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html https://www.nasa.gov/centers/goddard/news/series/moon/first_lunar_program.html https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage .http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village https://en.wikipedia.org/wiki/Apollo_program http://spaceq.ca/canadian-engineers-helped-guide-americas-mercury-gemini-and-apollo-programs/?u https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChmQRcbvdJsMGVmhcNvqVwDWW https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage https://www.history.com/topics/space-exploration/moon-landing-1969 https://solarsystem.nasa.gov/news/856/nasa-is-aboard-first-private-moon-landing-attempt/ https://www.bbc.com/news/science-environment-48907836 National Geographic  Celebrating the 50 th Anniversary of Apollo 11 The Moon Our Lunar Companion [July 2019] ++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துஐம்பது ஆண்டுகள் கடந்துநாசா மீண்டும்நிலவுக்குப் பயணம்செவ்வாய்க் கோளில் […]

கதவு

This entry is part 2 of 8 in the series 21 ஜூலை 2019

மஞ்சுளா         ஒரு கணத்தில்  வாழ்வின் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டேன்  காற்று சுதந்திரமாக  சிரித்து விலகியது  அதன் ஒலிகள்  கேட்கப்படுமுன்  கதவுகள் மூடப்பட்டன  சிறகுகளை வைத்து  சித்திரம் பழகினேன்  அதன் கைகளிலோ  ரத்தச் சிதறல்கள்  காற்று தீண்டாததால்  கால் கொலுசுகள்  புழுங்கிக் கொண்டிருந்தன  மனோ வேகமோ  வெப்ப அலைகளில்  அதிர்ந்து கொண்டிருந்தது  செறிந்த அதிர்வுகளால்  காற்று செல்லமாய் தட்டியது என் கதவை  கதவுகள் இல்லாத யுகமோ  தன்னை தயார் செய்து கொண்டே விரைகிறது நம்மை நோக்கி     […]

ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது

This entry is part 1 of 8 in the series 21 ஜூலை 2019

நண்பர்களே!கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு முதல், தலா ஐம்பது ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டிருகிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது 2019 :கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை, “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கான குறும் பட்டியலை அறிவித்திருந்தது.ஒவ்வொரு ஆண்டும் […]