நாவல்  தினை       அத்தியாயம்  இருபத்துநான்கு பொ.யு 1900   

This entry is part 6 of 6 in the series 23 ஜூலை 2023

  ’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் பணி முழுக்க நிறைவேறும்.  இனி அனுப்பப் போகும் வருடம் மாதம் நாள் மணி நிமிடம் வினாடிக்கு உங்கள் கடியாரங்கள் மற்றும் கணினிகளில் காலத்தை நகல் செய்து  கொள்வது அவசியம்’.  படகின் சுவர் அதிர்ந்து தகவல் உரைத்து ஓய்ந்தது. ’என் கணக்குப்படி ஆறு தனித்தனி நாட்கள் பழுது திருத்தச் செலவாகி உள்ளன. […]

வலசையில் அழுகை

This entry is part 5 of 6 in the series 23 ஜூலை 2023

—வளவ. துரையன் நான்கு கரைகளிலும்  நாணல்கள்  படிக்கட்டுகள் இல்லையெனினும்  சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும்  காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ  எப்பெயரிட்டு அழைத்தாலும்  எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின்  மத்தியான வேளையில்  மேய்ப்பவர்களுக்கு  அதுதான் சொர்க்கம். இப்போது நீவரும் பாதையெல்லாம்  அடைபட்டுப் போனதால்  நீரும் வழி மறந்து போயிற்று. பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால்  பயனற்றுக் கிடக்கிறது. ஆண்டுதோறும் வரும்  வலசைப் பறவை  மட்டுமிங்கே ஓரமாக  உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது

வழி

This entry is part 4 of 6 in the series 23 ஜூலை 2023

வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  மறைந்து போகின்ற  பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும்  குளம்போல் குவித்துவைத்து  ஏந்தினாலும் விரலிடுக்குகளின்  வழியே கசியும் போகும்  நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட  இல்லாமல் வீணே  பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்  நல்ல ஊஞ்சலும்  நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட  பட்டாம்பூச்சி வெளிச் செல்ல  மூடப்பட்ட சன்னல்களில்  முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல  முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே  அவ்வப்போது விட்டுவிடு.  வழிகிடைக்கும்

அப்பால்

This entry is part 2 of 6 in the series 23 ஜூலை 2023

ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து  அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம் விலகுகையில் விவரிப்புக்கு‌ அப்பாற்பட்ட பீதி சூழ்ந்தது அதனிருந்தும் மீண்டாகி விட்டது உன் மேல் கோபமில்லை வருத்தமில்லை புகாரில்லை உனக்காக  முன்பு போல பிரார்த்திப்பதில்லை யாரையும் நான் சபிப்பதில்லை உனை நினைக்கையில் எனக்கு எந்த உணர்வுமில்லை  […]

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

This entry is part 1 of 6 in the series 23 ஜூலை 2023

(1872 — 1970) எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ******************* மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் […]