பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்

This entry is part 21 of 32 in the series 24 ஜூலை 2011

     உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுபட்டு உழைப்பது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே. இதனை, ‘‘பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?’’ என்ற பாவேந்தரின் பாடல்வரிகள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது. வயிறு என்ற ஒன்று இல்லையெனில் உலகில் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றாது. பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன. உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் […]

செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை

This entry is part 20 of 32 in the series 24 ஜூலை 2011

“ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்”. தலைப்பே சற்று அதிர்வைத் தருகிறது இல்லையா? ஞாபகம் அற்றுப் போவது எவருக்கும் நிகழும் வாய்ப்பு உள்ளது. மூப்பினால் ஆகலாம். ஏதேனும் அழுத்தத்தால் ஆகலாம். பிணியினால் நேரலாம். எப்படியேனும் நாம் வாழ்ந்த வாழ்வு, சந்தித்த மனிதர்கள், நித்தம் கடந்த நிமிடங்கள் என எல்லாமே முற்றிலுமாய் அற்றுப் போகும் ஒரு நாள் வந்தே தீரும். அது எப்படி அமையும்? சர்வ சாதாரணமாகச் சொல்லியதாலேயே தலைப்புக் கவிதை கனம் கூடிப் போய். வாழ்வோடு, சமகால நிகழ்வுகளையும் […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை

This entry is part 19 of 32 in the series 24 ஜூலை 2011

1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாடம் தவிர்த்த ‘நல்லொழுக்கக் கல்வி’ போன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் நவீன இலக்கியப் படைப்பு களையும், படைப்பாளிகளையும், சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தி வந்தேன். அப்போது ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பா அவர்கள், ‘புதுக்கவிதை’ அறிமுகத்தை ஒரு வேள்வி போலச் செய்து வந்தார். புதிய சோதனை முயற்சிகளையும், புதிய படைப்பாளிகளையும் ‘எழுத்து’வில் அறிமுகப்படுத்தி வந்தார். அவரது […]

காதல் பரிசு

This entry is part 18 of 32 in the series 24 ஜூலை 2011

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் “Bombastic love , So Fantastic ” என்று சத்தம் போட்டுக்கொண்டு., “அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? ” உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த சத்தம் அவனுக்கு கேட்கவேயில்லை. “Where I’m Completely yours and you are mine ” விறுவிறு வென வந்தவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வால்யூமைக்குறைத்தாள். ” ஏன் நல்லாத்தான பாட்றா ?, கேக்கவிட்டா […]

ஜென் – ஒரு புரிதல் பகுதி 3

This entry is part 17 of 32 in the series 24 ஜூலை 2011

கணிதம் பல சமயம் நமக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. கணிதம் பற்றிய புரிதல் மெதுவாக பலவேறு வழிகளில் நம்முள் நிகழ்கிறது. சரியான அறிமுகம் துவக்கமாகவும் பின்னர் நடப்பு வாழ்க்கையில் கணிதம் தரும் பலன்கள் மென்மேலும் கணிதத்தின் அருகாமைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. நமது புரிதலின் நிலை அல்லது அளவு எத்தகையதாயிருந்தாலும் கணிதம் அன்னியமாயில்லாமல் சொந்தமாகி விடுகிறது. ஜென் பற்றிய பதிவுகள் இத்தகைய ஒரு மாற்றத்தைத் துவக்கி அதைப் பரிணாமம் என்னுமளவு நம்முள்ளே வெளிச்சமிடுகின்றன. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)

This entry is part 16 of 32 in the series 24 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ இறைவனின் தோழ னாயின் நெருப்பே உனக்கு நீர் ! விட்டில் சிறகுகளை ஆயிரக் கணக்கில் வைத்திட நீ விரும்ப வேண்டும் ! இரவு முழுவதும் ஒவ்வோர் சிறகாய் எரித்துப் பொசுக்கத் தருணம் கிடைக்கும் உனக்கு ! விட்டில் பூச்சி ஒளியில் மயங்கி விரைந்து செல்லும் விளிக்கும் தீயை நோக்கி ! நெருப்பைக் கண்டு நீ ஒளிநோக்கிச் செல்வாய் ! இறைவன் தீயின் […]

முடிவை நோக்கி…

This entry is part 15 of 32 in the series 24 ஜூலை 2011

முடிவை நோக்கி… வாழ்க்கை செல்கிறது! வாழ்வை விரும்பினாலென்ன… விரும்பாமல் சலித்தாலென்ன முடிவை நோக்கி ஆயுள் செல்கிறது…. ஆசைகளை அடைந்த போதும் நிராசைப்பட்டு சடைந்த போதும் எமது முடிவுப் புள்ளி பிறந்ததில் இருந்து எமை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது….. இலட்சியம் – வெளுத்துப் பிரகாசிக்கலாம்… கசந்து காய்ந்து போகலாம்… “வெற்றி” சுவை கூறலாம்.. மறுத்து தொலைவாகலாம். பூமி புதிர் போடலாம்.. காற்று கவி பாடலாம்.. சோகம் வதை பண்ணலாம்.. இன்பம் கதை சொல்லலாம்.. நாம் கடி மலரில் துயிலலாம்.. […]

ஒன்றின்மேல் பற்று

This entry is part 14 of 32 in the series 24 ஜூலை 2011

மூடிய கண்களுக்குள் விழித்துக்கொண்ட ஒரு யோசனை பூனையை குருடாக்கியது விட்டத்தின் மீதும் மதில் மீதும் விட்டேற்றியாக அலைந்த பூனையை திடீரென குறுக்கிட்ட ஒரு எலி பதுங்க வைத்துவிட கண்டபடிக்கும் வியூகம் அமைக்க வேண்டியதாயிற்று. எலியின் சேட்டை அதிகமானாலும் பூனைக்கு மிகவும் பிடித்திருந்தது வாலைக்கூட ஆட்டாமல் கண்களை முழுசாய் திறக்காமல் பாசாங்கு செய்ய வேண்டிதாயிற்று சிறு குடலை பெருங்குடல் தின்னும் பசியிலும் இரை விழுங்கிய மதப்புடன் சுருண்டு கிடக்கும் பாம்பாய் நடிக்க வேண்டிதாயிற்று. கும்பலாய் கூச்சலிடும் எலிக் கூட்டத்தில் […]

தியாகங்கள் புரிவதில்லை

This entry is part 13 of 32 in the series 24 ஜூலை 2011

கிளிப்பச்சை நிறத்தில் அந்த வாசனைக் குப்பி. கண் கொட்டாமல் பார்த்தால் ஒரு கிளி நெல் கொரிப்பதுபோல் இருக்கும். அத்தனை அழகு. ஒப்பனை மேசையில் அருகில் இருக்கும் உயரமான அலமாரித் தட்டில்தான் சதாசிவம் தன் சொந்த உபயோகப் பொருள்களை வைத்திருப்பார். அதில் அந்த வாசனைக் குப்பியும் ஒன்று. மகள் லதாவுக்கோ மனைவி சரோவிற்கோ அது எட்டாது. எட்டவேண்டிய அவசியமுமில்லை. சதாசிவம் வீராசாமி சாலையில்தான் வசிக்கிறார். சனி ஞாயிறுகளில் வெளியே செல்வதைத் தவிர்ப்பார். வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10

This entry is part 12 of 32 in the series 24 ஜூலை 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது குடியரசு மெய்யான தில்லை !  ஆதிக்க அரசாங்கத்துக்கும் குடியரசுக்கும் இடையே முரண்பாடு இல்லை.  எல்லாவித அரசாட்சி முறைகளும் ஆதிக்கத் தன்மை கொண்டவைகளே ! எத்தனை அளவுக்குக் குடியரசு உயர்ந்ததாய் உள்ளதோ அத்தனை அளவுக்கு ஆதிக்க வன்மையும் மிகையாய் உள்ளது.  பொதுமக்களும் அவ்விதக் குடியரசுக்குப் பின்னணியாக இருந்தால், ஸார் (Tzar) மன்னர் அதிகாரத்தை விட இன்னும் கோரமாக ஆதிக்கம் ஆட்சி […]