* மதிய வெயில் கோடுகளாய் குறுக்கே விழுந்திருந்த ஒரு நடைப்பாதைப் பொழுது பயணத்தின் மஞ்சளை கரு நிழல் துரத்துவதை எண்ணியிராத ஓர் எறும்பு மரணத்தின் வடிவத்தை வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில் பட்டென்று ஸ்தம்பித்தது கால் கட்டை விரலுக்குக் கீழ் ***** –இளங்கோ
* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் மடிந்து மடிந்து தொங்குகிறது மீளா துக்கம் கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில் உறுதி செய்து கேட்கிறார்கள் அவன் மரணத்தை வெண்துணி போர்த்திய உடலென வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத விழிகள் நிலைக் குத்த.. ***** –இளங்கோ