இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு நீர்வெள்ளம் இருப்பதைக் காட்டியுள்ளது

This entry is part 6 of 6 in the series 30 ஜூலை 2017

FEATURED Posted on July 29, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project +++++++++++++++ நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில் நீர்ப்பனித் தேக்கம் பேரளவு இருப்பதாய் நாசா நிபுணர் தெரிவிக்கிறார் ! குடிநீரை விண்கப்பலில் கொண்டு செல்வது கோடி கோடிச்  செலவு ! மறைமுக நீர்ப்பனிப் பாறை பல யுகங்களாய் உறைந்து கிடக்கும் பரிதி ஒளிக்கதிர் படாமல் ! எரிசக்தி உண்டாக்கும் அரிய வாயு ஹைடிரஜன் சோதனை மோதலில் […]

பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் இந்தியா என் இல்லம் -1

This entry is part 1 of 6 in the series 30 ஜூலை 2017

  ஆங்கில மூலம் : ஜான் லென்னன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     [ பீட்டில்ஸ் பாடகர் குழு 1968 இல் இந்தியாவுக்கு வருகை தந்து ரிஷிகேஷத்தில் மகரிஷி மகேஷ் யோகியிடம் ஞானத் தியான முறைகளைக் கற்றபின் ஜான் லென்னன் எழுதிய இந்திய கீதமிது ]     ஈர்த்துக்கொள் என்னை உன் நெஞ்சிக்குள்! பூர்வ மர்மங்களை புலப்படுத் தெனக்கு! விடை தேடுகிறேன் நானோர் வினாவுக்கு! எங்கோ உள்ள தென்னுள் ளத்தின் ஆழத்தில்! […]

லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்

This entry is part 2 of 6 in the series 30 ஜூலை 2017

நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 சென்னையில் நடைபெறும் விழாவில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இந்த விருதை வழங்குகிறார். லெனின் விருது 10000 ரொக்கப் பரிசும், கேடயமும், பாராட்டுப்பத்திரமும் உள்ளடக்கியது. லெனின் விருதின் மிக முக்கிய அங்கம், விருது பெறுபவரின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும். இறுதியாக சென்னையில் திரையிடப்பட்டு […]

தொடுவானம் 180. இருமணம் கலந்தால் திருமணம்

This entry is part 3 of 6 in the series 30 ஜூலை 2017

            சனிக்கிழமை காலை நாங்கள் மூவரும் குயீன்ஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் துரித பேருந்து ஏறினோம். அங்கிருந்து ஆயர் ஈத்தாம் சென்றோம். பின்பு செகாமாட் செல்லும் பேருந்தில் ஏறி லாபீசில் இறங்கினோம். பேருந்து ஈஸ்ட் ஆசியா கார்டனில் நின்றதால் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றோம்.           அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்துவைத்தேன். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர்.அந்தப் பெண்ணும் வந்து வணக்கம் சொன்னாள்.   […]

கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)

This entry is part 4 of 6 in the series 30 ஜூலை 2017

புதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம். கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது  கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். ஏற்கனவே இவரின் கவிதைகளோடு பரிச்சயம் உண்டு. இவரின் பேரன்பின் மிச்சம் என்கிற கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறேன். இப்போது இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதே அரங்கில் நடந்த […]

கவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)

This entry is part 5 of 6 in the series 30 ஜூலை 2017

ஒரு கவிஞன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, நிகழ்வதில் எது தன்னைப் பாதிக்கிறதோ அதனை எழுதுகிறான். எழுதித் தீர்க்கிறான்; எழுதித் தீர்கிறான்.எழுதிய பிறகு அவனுக்கு அவனளவில் ஆசுவாசம் கொள்கிறான். தீர்வு கிடைப்பதற்காகவே எழுதப்படுபவையல்லவே யாவும். தன்னளவில் சிதைவுறும் கணத்தில் இருந்து மெல்ல சுவாசம் பெற அவன் வார்த்தைகளாகிறான். பா. இரவிக்குமார் மொழியின் மீதும் இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தீராத பற்று மிக்கவர் என்பதை நான் அறிவேன். தொடக்க காலத்தில் அவருக்கு அப்படியானதொரு பயிற்சிப் பட்டறை வாய்த்திருக்கிறது. […]