மூன்றாம் குரங்கு

This entry is part 11 of 23 in the series 14 ஜூன் 2015

– கனவு திறவோன் அவள் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தாள் அல்லது பேசுவது போல பாவனைச் செய்து கொண்டிருந்தாள் இப்படித்தான் நான் கற்பனை செய்யும் செயலை அவள் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாய் கனவு காண்கிறேன்! ஆற்றில் துள்ளிய கெண்டை மீன்கள் நீர்நிலை தேடி அவள் முகத்தில் மிதந்தன… அவள் நெற்றியிலோ பளீர் பச்சை நிறத்தில் பொட்டு இட்டிருந்தாள் சுத்த சைவ குறியீடு போல! சாறு குடிக்க சாத்தான் கீறிய ஆப்பிள் போல பிளந்து கிடந்தன அவள் உதடுகள் […]

தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

This entry is part 12 of 23 in the series 14 ஜூன் 2015

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,), புதுக்​கோட்​டை. E.mail: Malar.sethu@gmail.com   தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது.தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தேகொண்டது.தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் […]

எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு

This entry is part 13 of 23 in the series 14 ஜூன் 2015

முருகபூபதி சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன். ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா எற்பாடு செய்திருந்த தகவல் அமர்வு நிகழ்ச்சி. எனக்கு முன்பின் அறிமுகமில்லாத அன்பர் திரு. சிவசபேசன் அவர்களின் இல்லத்தில் நான் தங்குவதற்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சபேசனின் மனைவி கலா அவர்கள் எனக்கு […]

இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்

This entry is part 14 of 23 in the series 14 ஜூன் 2015

பயணம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாதது. பிறப்பு தொட்டு தன் பயணத்தை காலத்தின் வழியே ஆரம்பிகிற மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும், ஏதாவது ஒன்றை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தின் மேன்மையும், வரலாற்றில் மனித வாழ்வின் நிலையாமையையும், உலக மக்கள் அனைவரின் பால் செலுத்தக்கூடிய தாட்சண்யமற்ற அன்பு மட்டுமே ப+மியில் நிலைத்திருக்ககூடியது என்பதை விளக்கும் வகையான பயணத்தின் தேக்கம் நமக்குக் காணக்கிடப்பது பற்பல அருவிகள், மலைகள், அணைகள், தொல்லியல்துறை இடங்கள், கடற்கரைகள் இன்னும் பல உள்ளன. அவற்றில் […]

விழிப்பு

This entry is part 15 of 23 in the series 14 ஜூன் 2015

எஸ்ஸார்சி ‘விழிப்பு’ என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் வெளியிட்டது.பானுசந்திரன் பதிப்பகம் எங்கே அந்த பதிப்பகத்தின் உரிமையாளர் யார் என்று யாரும் தேடிப்போய்விட வேண்டாம்.அப்படியாருமே எங்கும் இல்லை.பானுமதியில் முதலில் இருக்கும் பானுவையும் ராமசந்திரனில் கடைசியில் இருக்கும் சந்திரனையும் எடுத்துக்கொண்டு பானு சந்திரன் பதிப்பகம் என்று எனது பதிப்பகத்திற்குப் பெயர் வைக்க என் நண்பர் சபாதான் யோசனை சொன்னவர் .காசே செலவில்லாமல் ஒருவன் தன் மனைவியைக்கொஞ்சம் […]

நான் அவன் தான்

This entry is part 16 of 23 in the series 14 ஜூன் 2015

சத்யானந்தன் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் அங்குசங்கள் உறவுகளின் சொல்லாடல்கள் பின்னகரும் கடிகார முட்கள் ஒரு நாளின் ஆரோகண அவரோகணங்கள் அனேகமாய் அபசுரங்கள் ஒரு கேலிச்சித்திரம் வரைந்தால் நானும் இவற்றுள் ஒன்றாய்… பசுமையும் நிழலுமான ஒரு தருவே மனிதர்களின் தேடல் பறவைகளுக்கு மட்டுமே அதன் நிரந்தர அரவணைப்பு

யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

This entry is part 17 of 23 in the series 14 ஜூன் 2015

காலஃப் அல் ஹரபி இந்தியா எனும் அதிசயமான தேசத்தில் இருந்து இதை நான் எழுதுகிறேன்….ஒரு காலத்தில் அரபிக்கடலில் பயணம் செய்பவர்களின் கனவாக இருந்த , தொலைதூரத்தில் உள்ள மும்பையில் தற்போது இருக்கிறேன்…. பல திசைகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வந்து இந்த நகரத்தின் தெருக்களை நிரப்பியவண்ணம் உள்ளார்கள்..பல கண்கள் உங்களை பார்த்த‌ வண்ண‌ம் இருக்கும்…உங்க‌ளைப்பார்த்தவுடன் நீங்கள் அந்நியர் என்பதை தெரிந்துகொள்வார்கள்…. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்….. ஆடம்பரமான கட்டிடங்களும் , தகர கூரைவீடுகளும் […]

திரை விமர்சனம் – காக்கா முட்டை

This entry is part 18 of 23 in the series 14 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 திடீர் குப்பத்து பிள்ளைகளுக்கு, பீட்சா மேல் வரும் ஆசைகளும், அதனால் எழும் சிக்கல்களும் கவிதையாக! கோழி முட்டை தின்ன ஆசை. ஆனால் வசதியில்லை. அதனால், காக்கைகளின் கவனத்தை திசை திருப்பி, காக்கா முட்டைகளை களவாடித் தின்னும் சின்னப் பாண்டியும் பெரிய பாண்டியும், முன்னூறு ரூபாய் பீட்சா மேல் ஆசை கொண்டு, அதற்கு கொடுக்கும் விலைதான் இந்த படம். படம் நெடுக, நாமும் சைதாப்பேட்டை திடீர் குப்பத்தில் வசிப்பது போன்ற உணர்வைத் தந்த ஒளிப்பதிவிற்கும் […]

கல்பீடம்

This entry is part 20 of 23 in the series 14 ஜூன் 2015

மனிதனுக்கும் கடவுளுக்குமான உரையாடல் – நீ தடுக்கி விழுந்தால் இடறியது என் கால் என்று அறி என்றான் இறைவன் நான் நாளை இருந்தால் உன் அதிகாரம் இங்கே கேள்விக்குறி என்றான் மனிதன் வானளாவிய அதிகாரம் படைத்த என்னை கோவிலில் வைத்து பூட்டிவிட்டாயே என்றான் இறைவன் நான் எழுப்பிய ஆலயத்தில் யார் உன்னை குடிபுகச்சொன்னது என்றான் மனிதன் வருடத்தில் ஒருமுறை தானே என்னை வீதியுலா அழைத்துச் செல்கிறாய் என்றான் இறைவன் எங்களின் சரண கோஷத்துக்கு ஏன் மயங்குகிறாய் என்றான் […]

ஒரு நிமிடக்கதை – நிம்மி

This entry is part 21 of 23 in the series 14 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அழகான சிவப்பு ஃப்ராக் அணிந்த அந்த நான்கு வயதுப் பெண் குழந்தை எங்கள் ‘ போர்ஷன் ‘ வாசலி வந்து நின்று சிரித்துக்கொண்டு நின்றது. ” வா…உள்ள வந்து ஒக்காரு… ” என்றேன். வந்து சோஃபாவில் அமர்ந்தது. ” ஒன் பேர் என்ன ? ” ” நிம்மி..” ” நிம்மின்னா ? முழுப்பேர் சொல்லு…” ” நிர்மலா..” ” எந்தக் கிளாஸ் படிக்கிறே?…” ” ப்ரி – கே.ஜி…” ” ஒனக்கு எந்த […]