கடல்புத்திரன் மூன்று அன்று இருளும் தறுவாய்யில், வாலையம்மன் கோவில் வாசிகசாலை குழுக் அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. குழுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம் பயத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சார்பில் வாசிகசாலைக் குழு இயக்கக் காம்புகளுக்குப் போய் மன்னிப்பு கேட்பது என்று தீர்மானித்தார்கள். ஆனால், இரண்டு இயக்கங்களையும் உடனே அணுகப் பயந்தார்கள். ஒன்றிடமிருந்து ஆயுதங்களைப் பறித்திருக்கிறார்கள். ஒன்றைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். அவமரியாதையின் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ் இன்று (ஜூன் 7, 2020) அன்று வெளியிடப்பட்டது. இதழை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: கதைகள்: உத்தமன் கோவில் – பாவண்ணன் அக்னி – சுஷில் குமார் வடிவாய் நின் வலமார்பினில் – தன்ராஜ் மணி மருவக் காதல் கொண்டேன் – கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருமை – கா. சிவா சுடோகுயி – வேணுகோபால் தயாநிதி விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க் (தமிழாக்கம்: க.ரகுநாதன்) கவிதைகள்: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் — ச. அனுக்ரஹா கட்டுரைகள்: சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி – ரூத் ஃப்ராங்க்லின் (தமிழாக்கம்: மைத்ரேயன்) டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம் – ராஜி ரகுநாதன் “நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல் – ராஜி ரகுநாதன் ‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து -தன்ராஜ் மணி இளம்பருவத்தோள் – லதா குப்பா விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம் – ரவி நடராஜன் கைச்சிட்டா – 4 (புத்தக அறிமுகங்கள்) – பதிப்புக் குழு அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள் – பானுமதி ந. தவிர: நிறமும் நடிப்பும்: ஒளிப்படத் தொகுப்பு உணர்வும் அறிவும்: காணொளி இதழைப் படித்த பின் உங்கள் மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்தப் பதிவுகளின் கீழே அவற்றைப் பதிக்க வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக அனுப்பி வைக்க முகவரி: solvanam.editor@gmail.com உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும் அதே முகவரிதான். படைப்புகளை என்ன வடிவில் அனுப்ப வேண்டுமென்று இதழின் முகப்புப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறோம், தவறாமல் கவனிக்கவும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும், பதிப்புக் குழுவினர் 7 ஜூன் 2020
விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி யுற்றுச் சீறிக் கொண்டிருந்த தென்னகக் கோமான்கள், ஆறாத நூறாண்டுப் புண்ணை ஆற்றிக் கொள்ள அடக்கப் பட்ட முதலைகள் இப்போது துப்பாக்கியில் சுட்டுப் பழிவாங்க எழுந்து விட்டார், வெள்ளை யனுக்காக நேரிடைப் போரின்றி ! இந்த ஊமைப் போருக்கு அந்த மில்லை எந்தக் காலத்திலும் ! இப்போது ஒளிந்து கொண்டு […]
வலைய வாளார மீதுதுயில விடாததான் மான மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே. [111] [வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை] வளைந்து சுருண்டிருக்கும் அரவுப் படுக்கையில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் வைஷ்ணவியாகவும், பிறைச்சந்திரனைச் சூடிய சடாமுடி உடைய சிவபெருமானின் இடை மடியில் இனிதாக உறங்கும் திகழ்கிறார் காளிதேவி. ===================================================================================== போர்பன தீம்புகையோ புராதனர் […]
என் மௌனத்தின் எல்லா திசைகளையும் உன் அலகு கொத்திப்பார்க்கிறது எதிலும் ஒட்டாமல் உன் மனம் விலகி விலகி ஓடுகிறது எது குறித்துமான உன் கேள்விகள் கோணல் மாணலாய் நிற்கின்றன வாசிப்பின் பக்கவிளைவாக உன் தீர்ப்புகள் பிறர் மனங்களைத் தீப்பிடிக்க வைக்கின்றன உன் பேச்சின் வெளிச்சத்தில் நீ இருளைத் தவணை முறையில் தந்து கொண்டிருக்கிறாய் நியாயங்களை அனுமதிக்காமல் உதறித் தள்ளுகிறாய் நீ ஏற்றத் துடிக்கும் தீபத்தில் இன்னும் எண்ணெய் வார்க்கப்படவில்லை எனவே உன் தலைக்குப் பின்னால் நிற்பதாக […]
எஸ்.ஜெயஸ்ரீ பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி. பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி. பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி. அது மட்டும் புது மொழியிலும் மாறாதது; அதுவேதான். பெண்ணின் மன வேதனை, அதில் அவள் நெஞ்சுக்குள் கனன்றிக் குமுறும் கனல் அது தன் கொழுந்து விட்டெறியும் தீ நாக்குகள் அடங்கும் வரை ஓயாது. அவளுடைய இந்தக் குமுறல் அவளுக்கு மனதாலும், உடலாலும் தீங்கிழைப்பவர்களை ஜென்ம ஜென்மமாகத் […]
எஸ். ஜயலக்ஷ்மி சுந்தரத் தோளுடையவனான அழகர் பெருமான் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலலையில் இந்திர கோபப் பூச்சி கள் திருமலையைக் கூடக் காணமுடியாதபடி மேலெழுந்து எங்கும் பரவியிருக்கின்றன. தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டி அழகருடைய புன் சிரிப்பை நினப்பூட்டுகின்றன. படா என்னும் கொடிகள் பூத்து நின்று எம்மிடமிருந்து நீ தப்பிக்க முடி யாது என்று மலர அது கண்ட ஆண்டாள் நாச்சியார்,“என்னுயிர்த் தோழீ! என்னால் பொறுக்க முடியவில்லை. எம்பெருமானுடைய தோள்மாலை நம்மைப் படுத்திய […]