ஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில குளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது விரட்டியடிப்பீர்களா? இலங்கையிலென்றால்…
தேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் பல கட்சிகளும் இணைந்து, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய இலங்கையின் மீதான பொருளாதார தடை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன…
அன்னை தெரேசா நூற்றாண்டு விழா கடந்த 28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு "மகளிர் விழா" பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கோனேஸ் நகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன்…
தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ்…
பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.
கவிஞர் சிற்பி பவள விழா குழு கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நீ ஓர் அமைதியான உலகைக் காணப் போவதில்லை, மனித இனத்தின் மனத்திலிருந்து தேசப் பற்றை விடுவிக்கும் வரை." ஜார்ஜ் பெர்னாட் ஷா (On…
இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் . சுயங்கள்…
லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள் அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில்…