கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?

This entry is part 5 of 5 in the series 23 ஜூன் 2024

சுலோச்சனா அருண் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த […]

யோகா: ஆரோக்கியத்தின் ஆணிவேர்

This entry is part 4 of 5 in the series 23 ஜூன் 2024

Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு […]

ரவி அல்லது – கவிதைகள்.

This entry is part 3 of 5 in the series 23 ஜூன் 2024

நிழலாடும் நுரைமங்கள். தேநீரின்உறிஞ்சு சுகத்திற்கிடையில்மீளும்இந்நினைவினைவானொலியில்ஒலித்தபாடல் தான்மீளருவாக்கியதுஆற்றில்குளிக்க வந்தஇவ்வேளையில்.அநேக கற்பிதங்களில்ஆட்பட்டுக்கிடந்தஅன்றைய நாளில் பார்வைகளைத்தவிரபெரிதாகபரிமாறியதில்லைகாதலில்கசிந்துருகினாலும்.கையொடியகாலையில்கடலை கொல்லைக்கு தண்ணீர் இறைத்ததுகண நேரம் தரிசனம்கண்டுவிடத்தான்என்பதைமுதல் வகுப்பில்வாங்கும்பிரம்படியின்போதானவேதனை தாழாதுதுடித்தழும் உன்முக வாடல்நிழலாடுகிறதுநீ சென்ற பாதையைபார்த்தவாறுஇப்பொழுதும். வறுமையின் கோலமெனவருந்தினார்கள்எனக்கெனவெனஅறியாத அநேகர்கள்ஆறு நாளும்அதே பாவாடை தாவாணியில்வருவதைவாஞ்சையுடன்நினைத்து.சிதிலமடைந்த படித்துறையில்முத்தமிடும் பெயர்களின்முதலெழுத்து அணுக்கம்தவிரவேறெதுவும் நடக்கவில்லைகாதலில்கண்ணியம் கொண்டதனால்.தனித்தோடி தலைமறைவாகவாழ்ந்துசுயாதீன காதலெனசுடரொளி காட்டி இருக்கலாம்தான்படி தாண்டாதவாழ்க்கையை பழகித் தொலைக்காமல்இருந்தாலெனமருகுகிறதுமனம்தாமிரபரணியில்தலைமுழுகவரும்பொழுதெல்லாம்தவிப்பாககரையேற முடியாமல்மூழ்கி. மீட்டலின் பொருட்டான கரிசனம். மறு கன்னத்தைதிருப்பிக்காட்டாதபொழுதுபரிவுகளை பேசுவதுபயனற்றதுபுரிதல் நிகழ்வதற்கு முன்னால்.கவனம் பெறுவதற்காககாட்டப்படும்கன்னமெனகடிந்தாலும் சிவந்து கொண்டேஇருக்கிறதுசெய்வதறியாதுஅன்றாடம்மேலதிக நம்பிக்கைகள் கொண்டு.நீங்கள்சிந்தை கலங்கியவனெனசொன்னாலும்புரியுமொருகணத்திற்கானகாத்திருப்பெனஅறியும் பொழுதுவழியும்கண்ணீர் துடைக்காமல்வெகு […]

உருளும் மலை

This entry is part 2 of 5 in the series 23 ஜூன் 2024

சசிகலா – விஸ்வநாதன் அந்தி சாயும் நேரம் தேநீர் கோப்பை கையில் எதிரே  நாற்புறமும் வரிசை கட்டி நிற்கும் பச்சையும் நீலமும் ஊதாவும் பழுப்பிலும் மலைத் தொடர் மடிப்பு; விரிந்த நீல வானில் வெண் பனிக்கட்டிகள்  வெண் மஞ்சு மஞ்சம். மெல்ல மெல்ல கதிரவன் கீழே இறங்க; மென் காற்று அலை; மேனி சிலிர்த்தது. சாரல் மழையில்; வானில் வில் ஒன்று தோன்றி மறைவதற்குள்; துணை வானவில். கண்மூடி திறப்பதற்குள்; கண் முன்னே ஒரு அற்புதம்! காணுதல் […]

அன்பு* ( * – நிபந்தனைகளுக்குட்பட்டது ! )

This entry is part 1 of 5 in the series 23 ஜூன் 2024

சோம. அழகு எச்சரிக்கை : கடுமையான ஒவ்வாமை மனநிலையில்தான் எழுதத் துவங்கினேன். In my defense, எல்லோருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தப் புள்ளியில் கொஞ்ச நேரமேனும் சஞ்சரித்திருப்போம். ‘அன்பு* (* – நிபந்தனைகளுக்குட்பட்டது)’ என்று வகைப்படுத்தினால் எளிதாய் இருக்குமோ? ஏனோ அதுதான் சிறந்ததாகத்தான் படுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் யாராக இருந்தாலும் “உன் வெளியில் நான் உன் அனுமதியின்றி நுழைய மாட்டேன். என் வெளியில் நீயும் அத்து மீறாதே! ஆனால் உனக்கு உதவி தேவைப்படும் […]