விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?

This entry is part 24 of 24 in the series 9 ஜூன் 2013

உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை ஆரம்பித்தது யார்? என்று தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கொலைக் குற்றங்களைப் பட்டியலிட்டு, இதெல்லாம் முஸ்லிம்கள் செய்தது […]

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

This entry is part 14 of 24 in the series 9 ஜூன் 2013

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை […]

செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது

This entry is part 23 of 24 in the series 9 ஜூன் 2013

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது. டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி] […]

நீங்காத நினைவுகள் – 6

This entry is part 10 of 24 in the series 9 ஜூன் 2013

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன. 1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10

This entry is part 22 of 24 in the series 9 ஜூன் 2013

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com    ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) 10.​அ​மெரிக்கா ​போற்றிய ஏ​​ழை அட​டே வாங்க… என்னங்க……. …எப்படி இருக்குறீங்க…நல்லா இருக்கிறீங்களா?…என்னங்க ​பேசமாட்​டேங்குறீங்க…என்னது முதல்ல அவரு யாருன்னு ​சொல்லணுமா?…அட..இதுக்குத்தானா இந்தமாதிரி ​பேசாம உம்னு… இருக்குறீங்க… அப்படி​யெல்லாம் இருக்காதீங்க..எப்பவும் இயல்பா இருங்க…எதுலயும் நிதானம் ​வேணுங்க….​கொஞ்சம் ​பொறு​மையா இருங்க…என்னங்க ஏந்திருச்சுட்டீங்க..​போகாதீங்க..இருங்க..ஒங்க ​​பொறு​மையச் ​சோதிக்கலங்க.. ​வெற்றி கி​டைக்கணும்னா ​பொறு​மையா […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13

This entry is part 21 of 24 in the series 9 ஜூன் 2013

தன் அப்பா சொன்னபடி அவருடைய நண்பரைப் பார்த்துவிட்டு வந்திருந்த சங்கரன் திங்கள் கிழமையிலிருந்து அவன் வரலாம் என்று சொன்னதன் பேரில், இரவு எட்டரை மணிக்குப் பகுதி நேர ஊழியம் செய்ய அந்தக் கம்பெனிக்குப் போனான். நல்ல வேளையாக அவன் எட்டு மணிக்கு வேலை முடித்த அலுவலகத்துக்கு மிக அருகில் அது இருந்ததால், குறித்த நேரத்துக்கும் முன்னதாகவே அவனால் அங்கு செல்ல முடிந்தது. .  .  .  தயாவைப் பேருந்தில் ஏற்றிவிட்டு, அவன் தான் வேலை செய்யும் இடத்தை […]

அக்னிப்பிரவேசம்-37

This entry is part 20 of 24 in the series 9 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நிர்மலாவின் மரணம் சாஹிதியிடம் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் அது வெளியில் தெரியக் கூடியது இல்லை. தன் தாய் எப்படி இறந்தாள் என்று பாவனா சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமைதியாக கேட்டுக் கொண்டாள். அவளுடைய சலனமற்றத் தன்மையைப் பார்த்துப் பாவனாவுக்கு பயம் ஏற்பட்டது. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அவன்தான் கொன்றிருக்கிறான்” என்றாள். பாவனா பதில் பேசவில்லை. “அவனைக் கொன்று விடுகிறேன்” என்றாள் சாஹித்தி திரும்பவும். பாவனா […]

வேர் மறந்த தளிர்கள் – 6,7

This entry is part 19 of 24 in the series 9 ஜூன் 2013

6 கடவுள்கள்             சில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது!               எம்பிமணியம், காளி, மலையாளத்துக்கிரு‌ஷ்ணம்,  தாசன்மற்றும் கோட்டைக்கறுப்பன் ஆகியயோர்  வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியிலும் பன்றி வேட்டைக்குப் பத்து நாய்களோடு  செல்லும் அவர்கள் சிறிய, பெரிய அளவிலானப் பன்றியோடுதான் வீடு திரும்புவார்கள்.வெறும் கையுடன் ஒரு நாளும் வீடு திரும்பியதில்லை!             பன்றியோடு […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !

This entry is part 18 of 24 in the series 9 ஜூன் 2013

     (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      மூர்க்கனாய் நட்புடன் பழகுபவன் யாராய் இருக்கலாம் ? நாகரீக மலர்ச்சிக்குக் காத்திருப் போனா ? அல்லது அதற்கப்பால்   செல்வோனா ? அல்லது நாகரீ கத்தைக் கைக்கொள்ள முனை வோனா ? வெட்ட வெளியிலே வளர்க்கப் பட்ட தென் மேற்கு மாநிலத் தானா ? அன்றிக் கனடா வாசியா ? மிஸ்ஸிப்பி நில வாசியா […]

NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்

This entry is part 17 of 24 in the series 9 ஜூன் 2013

  “ காமனோ மற்றும் மக்குயூ ஆகிய இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே, பள்ளத்தாக்கின் வழியே ஒரு நதி ஓடியது. ஹோனியா என்பது நதியின் பெயர். ஹீனியா எனில்  நோய்க்கு மருந்து அல்லது உயிரை மீட்டல் என்பது பொருள், கடும் வறட்சி, தட்ப வெப்ப மாறுதல்களினிடையேயும் அது வற்றியதே இல்லை . இரு குன்றுகளையும் இணைத்தது ஹோனியா நதிதான். மனிதர்கள், கால்நடைகள், காட்டு விலங்குகள், மரங்கள் என் அனைத்துமே இந்த வாழ்க்கை நதியால் இணைந்திருக்கின்றன”  கூ வா தியாங்கோ […]