வேண்டா விடுதலை

This entry is part 2 of 12 in the series 12 மார்ச் 2017

     பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)     கட்டடக்  காடுகளின்   காட்சிப்  பெருவெளியில்   அடர்ந்த  காடெங்கே   அடர்மர  நிழலெங்கே   எதோ   ஆங்காங்கே   இருக்கின்ற மரங்களில்தான்   குயிலிருந்து கூவவேண்டும்   குஞ்சுகளைப் பேணவேண்டும்     எங்கள் குடியிருப்பில்   ஏழெட்டு மரங்களுண்டு   ஏழெட்டு மரமெனினும்   எல்லாம்  அடர்மரங்கள்   வெயிலே நுழையாது   விரித்த உயிர்க்குடைகள்   அங்கேதான் பறவைகளின்   அன்றாடக் கச்சேரி     […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 3

This entry is part 3 of 12 in the series 12 மார்ச் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   3.       காப்பி குடித்துக்கொண்டிருக்கும் கிஷன் தாஸ் காலடியோசை கேட்டுத் தலை உயர்த்திப் பார்க்கிறார். பிரகாஷ் குறும்புச் சிரிப்புடன் கூடத்தில் நுழைந்துகொண்டிருக்கிறான். கிஷன் தாஸ் காப்பிக்கோப்பையை வைத்துவிட்டுத் தம்மையும் அறியாமல் வியப்பில் விழிகள் விரிய எழுந்து நிற்கிறார். “ஹேய்! என்ன இது? நாளைக்கு வரப்போவதாய்த் தொலைபேசியில் சொன்னாயே? இன்றைக்கே வந்து நிற்கிறாய்!  உன் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? நீ அதைப் பற்றித் தொலைபேசியில் சொல்லியிருந்திருக்கலாமே? நான் விமான நிலையத்துக்கு […]

ஆச்சி – தாத்தா

This entry is part 8 of 12 in the series 12 மார்ச் 2017

சோம.அழகு    இச்சொற்கள் நம்முள் ஏற்படுத்தும் இன்பமும் குதூகலமும் அலாதியானவை. இவர்களால் பாசத்தையும் உணர்வுகளையும் ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டதால்தான்  இன்று பெரும்பாலான மனித மனங்கள் முழுமையாக வறண்டு விடவில்லை. இந்த அவசர உலகத்தில் நமது வாழ்வின் எச்சூழ்நிலையிலும் எத்தருணத்திலும் நமது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தி, தொல்லியல் ஆராய்ச்சிக்கு ஏதுவாய் நம்முள் புதைந்து கிடக்கும் குழந்தைமையை மீட்டெடுக்க வல்ல அற்புதர்கள் ஆச்சியும் தாத்தவும். நமது உணர்வுப்பூர்வமான வாழ்க்கையைத் தொடங்கி வைத்து அதற்கு சாட்சியாய் நிற்பதும் அவர்களே ! இக்கட்டுரையை […]

அரிய செய்திகளின் சுரங்கம் [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

This entry is part 4 of 12 in the series 12 மார்ச் 2017

  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் […]

நாற்காலி மனிதர்

This entry is part 5 of 12 in the series 12 மார்ச் 2017

. நாற்காலியில் உட்கார்ந்தபடியே அன்புக்கு பாடை கட்டியிருந்தார்கள். பத்து வருசமா எங்கும் போகாமல் நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தார். வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது . அதன் பின் ஒரு மாதம்  நாற்காலியில் அவரை உட்கார வைத்து அவர் மகன் சிவன் சிகிச்சை  செய்தான். மருமகள் சிவமணி எதுவும் கண்டுகொள்ள மாட்டாள். வேலைக்குப் போகும் முன் சிவன் அவரின் உடம்பைத் துடைத்து சோறு ஊட்டி விடுவான். இரவில்தான் அவர் மல ஜலம் கழிப்பார் என்பதால் இரவில் […]

பாவங்கள்…

This entry is part 6 of 12 in the series 12 மார்ச் 2017

நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்… ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் கொடுக்க கைகள் இல்லை அன்பென்பது வெறும் வார்த்தையாய்… உண்டு உறங்கி எழுந்து இருந்து மிச்ச சுழற்சியில்  சுழன்று சுழன்று ஓடாய் தேய்ந்தாலும் உயிர் இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டே… மதி கெட்ட மனது கையேந்தி கையேந்தி காயங்களைத் தழும்பாக்கிக் கொண்டது புறங்கணிப்பில் மானம் கெட்டு வாழ்வுதனில் சிறுமைப்பட்டு இருத்தலில் பாவங்களைக் கணக்கிட்டு ஆசைகளுக்கெல்லாம் தீயிட்டு வார்த்தைகளையெல்லாம் […]

தொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்

This entry is part 7 of 12 in the series 12 மார்ச் 2017

மருத்துவ பட்டதாரி ஆகிவிட்டேன். இனி முழு மருத்துவனாக ஓராண்டு பயிற்சி மருத்துவனாக பணிபுரிந்தாகவேண்டும். இதை மனை மருத்துவம் ( House – Surgeon ) என்றும் கூறுவர். இந்த ஓராண்டில்தான் நாங்கள் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவர்களின் நோய்களைத் தீர்த்து குணமாக்கவேண்டும். இதுவரை நூல்களில் படித்தும் அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வார்டுகளில் பரிசோதித்தும் தேர்வுக்காகப் பயின்றோம். இனிமேல் நாங்களே வெளிநோயாளிப் பிரிவிலும் வார்டிலும் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்  பழகிக்கொள்வோம். முன்பு நோய்களைப் பற்றிதான் […]

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18

This entry is part 9 of 12 in the series 12 மார்ச் 2017

வணக்கம்,   ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 –ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன. பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன் தமிழ்ப் பிரிவு, இந்திய மொழிகள் மையம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புது தில்லி – 110 067. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் – 355)  

கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்

This entry is part 10 of 12 in the series 12 மார்ச் 2017

                                           முருகபூபதி – அவுஸ்திரேலியா   ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார். எனினும்,  நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த […]

பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலையும் இலக்கியமும்): இடைக்காலம் (கி.பி 476- 1453)

This entry is part 11 of 12 in the series 12 மார்ச் 2017

    பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு: இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், […]