வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி

This entry is part 14 of 28 in the series 22 மார்ச் 2015

வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி Idhayaththudippu varamadal.  

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

This entry is part 15 of 28 in the series 22 மார்ச் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)

This entry is part 16 of 28 in the series 22 மார்ச் 2015

  குச்சிபுடி நடனத்தில் யாமினி கற்றுத்தேர்ந்திருந்தது குறுகிய, மரபுக்குட்பட்ட பாமா கலாபம், கிருஷ்ண சப்தம், க்ஷேத்ரக்ஞ பதங்கள் மேலும் குச்சிப்புடி நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத தரங்கம் போன்றவைதான்., அவரது பரதநாட்டியப் பயிற்சியில் அவர் கற்றுத் தேர்ந்திருந்தது போல் பலதரப்பட்டதும், வளமானதுமாய் அவரது குச்சிபுடி பாடாந்திரம் இருக்கவில்லை. வேறெந்த கலைஞரின் நடனக்கலைத் தேர்ச்சியும், பாலசரஸ்வதியினுடையது கூட, யாமினியின் பாடாந்திரம்  பலவகைப்பட்டதும், வளமுடையதாகவும் இருந்ததில்லை. பாலசரஸ்வதியின் பாடாந்திரத்துக்கு எண்ணிக்கையில் ஈடு இணை கிடையாதுதான். ஆனால் அதன் எண்ணிக்கைப் பெருக்கம் முழுவதுமே இரட்டை […]

ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை

This entry is part 17 of 28 in the series 22 மார்ச் 2015

  [A Man’s Requirements]   ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை இனிமை யாய் நேசி உன்னால் இயன்ற மட்டும்; உன் உணர்வில், உன் சிந்தனையில், ஒரு பார்வையில் நேசி. என்னுடல் எளிய உறுப்பை நேசி என் முழுத் தோற்றத்தை நேசி.   உன் திறந்த மனத்து இளமையில் நேசி பணிவுடன் வெளிப்படை யாய்; வாய் மூலம் வாக்களித்து, மௌனப் பரிவுடன் என்னை நேசி. […]

உளவும் தொழிலும்

This entry is part 18 of 28 in the series 22 மார்ச் 2015

ரட்டா  எனப்படும் சிறிய கைத்துப்பாக்கி அது. கறுப்பு சைத்தான். எளிதில் எங்கும் மறைத்து எடுத்துச் செல்லலாம். உளவாளிகளுக்கும், கட்டணக் கொலைகாரர்களுக்குமென பிரத்யேகமாக வெளிநாட்டவனால் தயாரிக்கப்பட்டது. ஆசீம் என்கிற அழகம்பெருமாள் பஞ்சக்கச்சம் கட்டியிருந்தான். இயல்பான சிகப்பு தோல்காரன். நெற்றியை அடைத்த திருமண் அவனை ஒரு வைணவ குருகுலவாசனாகவே காட்டியது. மதுரையில் தமிழகத்தின் ஜனத்தொகை யில் பத்து விழுக்காடாவது குவிந்திருக்கும் என்பது போன்ற கூட்டம். அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நாள். மதுரை மண்ணில் உதித்தவர்களும் மிதித்தவர்களும், வந்தவர்களும் வாழ்ந்தவர்களும் […]

பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )

This entry is part 4 of 28 in the series 22 மார்ச் 2015

சில சமயம் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பெரிய படங்களை எடுப்பவர்களுக்கு பாடமாகவும் அமைகின்றன. ‘மட்டில்டா’ தந்த இன்ப அதிர்ச்சியில் யூ ட்யூபில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் தலைப்பில் உள்ள படம். மேரி கேட் ஓல்ஸன், ஆஷ்லி ஓல்ஸன் என்கிற இரட்டையர் சகோதரிகள் பிரதான பாத்திரம் ஏற்று இந்தப் படத்தைத் தங்கள் சின்னத் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள். அம்மா ரோண்டா தாம்ஸனாக சிந்தியா கியரி ஒரு விவாகரத்தான இளம் தாயைக் கண்முன்னே கொண்டு வருகிறார். […]

வைரமணிக் கதைகள் -8 எதிரி

This entry is part 19 of 28 in the series 22 மார்ச் 2015

விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் எதற்கோ காத்திருப்பது போல் உட்கார்ந்திருந்த உறவினர் நண்பர்கள் மத்தியில் ஓடி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் முடிந்தது.   கூடத்தில் ஐம்பது பேர் உட்காரலாம். பெரிய கூடம். ஆனால் இருபது பேர்தான் உட்கார்ந்தி ருந்தனர். எல்லோரும் கூட்டமாக தியானம் செய்வது மாதிரி அங்கே ஒரு நிசப்தம் நிலவிற்று. இடையிடையே சிலர் எழுந்து போவது வேறு […]

சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி

This entry is part 20 of 28 in the series 22 மார்ச் 2015

நாங்கள் விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம், சீ’அன் நகரம் மற்ற நகரங்கள் போன்றே அடுக்கு மாடிக் கட்டடங்களை கொண்டதாகவே காணப்பட்டது.  ஆனால் விடுதிக்கு அருகே செல்லச் செல்ல, நகரம் தொன்மை வாய்ந்த பாரம்பரியச் செல்வங்கள் நிறைந்த நகரமாகத் தென்பட்டது. நாங்கள் தங்கிய விடுதி ரென்மின் சதுக்கம் என்று அழைக்கப்படும் கோட்டையுள் நகரமாக விளங்கிய இடத்தில் இருந்தது.  சதுரமான மதில் சூழந்த கோட்டையின் ஒரு வாயில் வழியே நுழைந்தோம்.  அங்கு கண்ட கட்டடங்கள் கீழே நவீன […]

ஒட்டுண்ணிகள்

This entry is part 21 of 28 in the series 22 மார்ச் 2015

    உன் உண்மை எது உண்மை என்னும் கேள்வி இரண்டும் பலிபீடம் ஏற என் உண்மை நிறுவப் படும்   அலைதல் திரிதலே தேடல் பிடிபட்டதே புரிதல் என்னும் விளக்கங்கள் இடம்பிடிக்கும் அகராதிகளில்   என் உண்மையின் அரசியலில் தனிமையின் உயிர்ப்பு தனித்துவத்தின் ஆற்றல் நீர்த்துப் போகும்   கரவொலிகள் ஒட்டுண்ணிகளாய்

தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

This entry is part 22 of 28 in the series 22 மார்ச் 2015

  சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல சுடுதண்ணி கொட்டிக்கிட்டாப்பா என்று கூற, என்னைப் பார்த்து, உனக்கேம்மா இந்த வேலை என்றார். நானே வேண்டும் என்று சுடுதண்ணீரை எடுத்து என் மேல் கொட்டிக்கொண்டதைப் போல.   அவ கொட்டிக்கலப்பா அவ பொண்ணு தவறிக் கொட்டிட்டா என்றாள் அம்மா.   அச்சோ […]