அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

This entry is part 23 of 29 in the series 24 மார்ச் 2013

ராஜேந்திரன்   இன்று இலங்கையில் மாட்டிக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் அல்லல்களுக்காக குரல் கொடுக்கப்படுவது மிகச்சரியே… உலகின் எந்தப் பகுதியெனினும், சாமான்ய மக்களுக்காக குரல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை தங்களது இயக்க நோக்கங்களுக்காக உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. இதில் பேராபத்தாக நான் நினைப்பது – அமெரிக்காவில் இருந்து வரும் அர்த்த ராத்திரி போன்கள். கண்ணைக் கசக்கி, Good evening… no no good morning sir.. – என்றால், ”என்னது ,வணக்கம் என்று சொல்லுங்கள். […]

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

This entry is part 20 of 29 in the series 24 மார்ச் 2013

  1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும். இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை […]

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

This entry is part 29 of 29 in the series 24 மார்ச் 2013

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தண்டாயுதபாணிக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.” இதுதான் கார்த்திகை மாத வேல் பூசையில் காரைக்குடி எங்கும் கேட்கும் கோஷம். கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதம். அரனுடைய நெற்றியில் அறுபொறிகளாக ஆங்காரமாக உதித்த முருகப்பெருமானின் வேலையும் தண்டாயுதத்தையும் பூசையிட்டு அன்னம் படைத்து ஊரோடு உணவிடும் திருவிழா இது. வெளிநாடுகளுக்குக் கொண்டுவிக்கச் சென்ற நகரத்தார் தம் வருவாயில் ஒரு பகுதியை கோயில் கட்டவும், குளங்கள் வெட்டவும்,  வேத பாடசாலைகள் […]

ஒரு தாயின் கீதா உபதேசம் ..!

This entry is part 28 of 29 in the series 24 மார்ச் 2013

  (இது உண்மை நிகழ்ச்சிகளைப் பின்புலமாகக் கொண்டது) சிறுகதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். வாசல்ல யாருன்னு சித்தப்  போய்ப்  பாரேன்டா ஆனந்த்… நிழலாடறது… ஊஞ்சலிலிருந்து  தனது கனத்த சரீரத்தை சிறிதும் அசங்காமல் தன்னுடைய கனத்த சாரீரத்தில் ஆணையிட்டாள் அலமேலு. இருங்கோ பெரீம்மா பார்த்துட்டு வரேன்….சொல்லிக் கொண்டே ஆனந்த் ரேழியைக் கடந்து செல்கிறான். யாரு…? என்றபடியே அந்த கனமான மரக் கதவை இன்னும் லேசாக திறக்கவும்.. நான் தான்டா ஆனந்து… முனுசாமி …! மெல்லிய குரலில் தனது கல்லூரித் […]

வெளுத்ததெல்லாம் பால்தான்!

This entry is part 27 of 29 in the series 24 மார்ச் 2013

  ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன் மீட்டிங்குல போய் சட்டம் பேசிண்டு, அழிச்சாட்டியம் பண்ணிண்டு இருக்கேளே.. இதுக்கு என்னண்ணா பன்றது? நீங்க கொடுத்த பெட்டிஷன் பெரிய புயலையேக் கிளப்பிடித்துன்னு எல்லோரும் புலம்பறாளே.. அந்த கலாட்டுவுல இப்ப பென்சனை நிறுத்தி வச்சிருக்காளே அவாளைப்போயி […]

முறுக்கு மீசை

This entry is part 26 of 29 in the series 24 மார்ச் 2013

டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது நான் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவன்.தமிழ் நாடு வேலூரில் கிறிஸ்துவ மருத்தவக் கல்லூரியில் பயின்ற காலம். 22 வயதுடைய இளைஞன் நான். வாட்டசாட்டமான உடல் வாகுடன் தலை நிறைய சுருள்சுருளான கேசத்துடன் இருந்த அருமையான பருவம் அது. வெள்ளை நிற ‘ கிளினிக்கல் கோட் ‘ அணிந்து, கழுத்தில் ஸ்டெத்தஸ்கொப் தொங்க உடன் பயிலும் தோழிகளுடன் வார்டுகளில் பெருமையுடன் பவனி வந்த நாட்கள் இன்றும் நினைத்தாலே இனிக்கும் அனுபவமே! எப்படியோ […]

பொதுவில் வைப்போம்

This entry is part 22 of 29 in the series 24 மார்ச் 2013

நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும் விட்டு வைக்கவில்லை நான் அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் திருமணகாலம் வந்தது என் மகள் பதக்கங்கள் வாங்கியவள் என்றார் […]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7

This entry is part 24 of 29 in the series 24 மார்ச் 2013

  செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட […]

பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​

This entry is part 21 of 29 in the series 24 மார்ச் 2013

  Dr. Vikram Sarabhai (1917 – 1971)   சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.   “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!” டாக்டர் […]

ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது

This entry is part 19 of 29 in the series 24 மார்ச் 2013

        சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     1.   http://www.youtube.com/watch?v=qczVLlfop_c&feature=player_embedded 2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2e3MHNWLCTs 3.   http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=Cgo1uObQ3Js [Earlier Cosmic Vision] பெரு வெடிப்பில் பிறந்த பேபி பிரபஞ்ச அடித்தளம்  கண்டார். பெரு வெடிப்புக்கு மூலமான கரு உருவான தெப்படி  முதலில் ? வெறுமையில் கரு வடிவாகி உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணுக்கரு வடிவில் அடர்த்தி யாய் இருந்ததா ? பெரு […]