வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.18] முனிகள் காட்டிய பல வழிகளுள் அடிவயிற்று அக்கினியில் தூலமாய் நும்மைத் தொழுவர் சிலர். சூக்கும நோக்குடை ஆருணிகள் உயிர் நாடிகளின் பிறப்பிடமாம் நுண்ணிய இதயவெளியில் நும்மைத் தொழுவர். முடிவிலியே! அதிசூக்கும யோகிகள் சுழுமுனை நாடி வழி உயிரை மேலேற்றி பரமனுமது உன்னத இடமாம் பிரும்மரந்திரக் கபால வெளியில் கலப்பர். அங்ஙனம் அடைந்தோர் மீண்டும் வீழார் இப்பிறப்பிறப்பு சுழலில். [ஶ்ரீம.பா.10.87.19] பற்பல விசித்திர யோனிகள் பிறப்பித்து அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்து நீக்கமற ஸமமாய் நிறைந்து […]
உஷாதீபன் சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி. நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். . தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார். எழுத்தர் அவிநாசிக்கு அனுப்பிய கடிதம்தான அதன் ஜெராக்ஸ் இணைப்போடு திரும்பியிருந்தது. நாம அனுப்பிச்சதே திரும்பிடுச்சு? என்றவாறே அந்தக் […]
முருகபூபதி சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மலையகத்திலிருந்து எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, சிட்னியில் வதியும் மூத்த இசைக்கலைஞர் திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர முடியுமா..? எனக்கேட்டார். அவரது சில பாடல்களை அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஏற்கனவே இலங்கை வானொலிக்காக இசையமைத்து பாடியிருக்கிறார். அவற்றின் ஒலிநாடாக்கள் தொடர்பாக பேசுவதற்குத்தான் வடிவேலன் அருந்ததியின் தொடர்புகளைக் கேட்டிருந்தார். “நான் வசிப்பது மெல்பனில். அருந்ததி சிட்னியிலிருக்கிறார். எவ்வாறாயினும் முயற்சித்து அவரது தொடர்பிலக்கத்தை பெற்றுத் தருகின்றேன். “ […]
குரு அரவிந்தன் சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது உண்மையா, சந்திரனில் பிசாசு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டாம் வகுப்பில் என்னிடம் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலை நாட்டவருக்கும் இந்தப் பேய், […]
குரு அரவிந்தன் சென்ற தை மாதம் முழுவதும் கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாடப்பட்டது. பல்லின மக்களும் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இது உதவியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த பெப்ரவரி மாதம் பல்கலாச்சார நாடான கனடா முழுவதும் உள்ள மக்கள் கறுப்பின வரலாறு, அவர்களின் சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்புகளை மதிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர். ஒரு இனத்தின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை என்றால், அந்த இனத்தின் மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாமல் போய்விடும். […]