தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்

This entry is part 10 of 10 in the series 17 மார்ச் 2019

மென்பொருள் ரோபோக்கள் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு துறை, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள் மறைமுகமாக ஊதி வாசிப்பதை நியாய்படுத்திறார்கள். இதில் பொய்யான செய்திகளைப் பரப்புவது, மற்றும் நிறுவனங்களைப் பின்பற்ற வைப்பது போன்ற தில்லலாலங்கடி விஷயங்கள் அடங்கும்.இன்று உலகின் மிகப் பெரும் வலைத்தளங்கள் அரசாங்க கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற வாதம் மேலோங்கி வருகிறது. சமூக வலத்தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லமல் போய்விட்டது. தொலைக்காட்சி மற்றும் செய்த்தாள்களைப் போல எதிர்காலத்தில் இவை […]

தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

This entry is part 8 of 10 in the series 17 மார்ச் 2019

தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள் உருவாக்கும் செய்திகள் நான் வெகுகாலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் விமர்சகனாக இருந்திருக்கிறேன். அவ்வப்போது என் விமர்சனத்தை பதிவு செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஊடகங்களின் அடிப்படையே மாற்றப்பட்டு இன்று அவை கட்சிகளின் நீட்சிகளாக ஆகியிருப்பது மிகுந்த அவலமானது. இதில் வெகுகாலமாக பத்திரிக்கை அறத்தை போற்றிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்றவைகளும் இணைந்துகொண்டு வெகு கேவலமாக ஆகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் நீட்சியாக ஏற்கெனவே ஆகிவிட்ட தி […]

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்

This entry is part 7 of 10 in the series 17 மார்ச் 2019

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் செய்வதில் தமிழ்நாடு சளைத்ததில்லை என்பதினை அறிந்திருந்தாலும் சமிபகாலத்தில் கேள்விப்படும் செய்திகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. ஐம்பதாண்டுகால கலாச்சாரச் சீரழிவின் அடையாளம் இது. ஆபாச சினிமாக்களும், எப்படியும் வாழலாம் எனத் தூண்டுகின்ற தொலைக்காட்சி சீரியல்களும், அவற்றின் அர்த்தமற்ற பிதற்றல்களும், வகைதொகையின்றி இளம் வயதினருக்குக் காணக்கிடைக்கின்ற ஆபாசப் படங்களும், ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளும் இந்தச் சீரழிவைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. பெண்கள் கோவிலுக்கோ அல்லது கூட்டமான இடங்களுக்கோ போய் வருவதில் உள்ள சிரமங்களை நம்மைச் […]

புல்வாமா

This entry is part 6 of 10 in the series 17 மார்ச் 2019

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்த பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். வெளிப்புறம் பார்ப்பதற்கு அது சாதாரணமானதொரு செயலாகத் தெரிந்தாலும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிராக இப்படிச் செய்வது சாதாரணமான விஷயமில்லை. பாகிஸ்தானிய ராணுவம் கிறுக்கர்களால் ஆனது. இந்தியாவைப் போலல்லாமல் நினைத்த மாத்திரத்தில் பாகிஸ்தானிய ஜெனரல்களால் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல்களைத் தொடுக்க இயலும் என்பதால் இந்தியாவின் தாக்குதல் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்தான். மோடி எதற்காக இத்தனை பெரிய […]

”ரிஷி”யின் மூன்று கவிதைகள்

This entry is part 9 of 10 in the series 17 மார்ச் 2019

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,  என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது! கொள்ளை லாபம்தான்! வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல் அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு. ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத்  தெரிந்தவர்கள். இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து […]

காத்திருப்பு

This entry is part 5 of 10 in the series 17 மார்ச் 2019

உள்ளிருந்து கொண்டு என் கவிதை வெளிவர மறுக்கிறது. குழந்தைக்குத் சோறூட்டும் தாய் போலக் கெஞ்சிக் கூப்பிடுகிறேன். ஈக்களை விரட்டுவதுபோல மிரட்டியும் அழைக்கிறேன். வருவது போல வந்து  பெய்யாமல் போகும் மழைபோலக் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுகிறது. சொற்களெல்லாம் வந்துவிட்டுக் காத்துக்காத்து மேய்ப்பரில்லா ஆடுகள் போலத் தவிக்கின்றன. உவமைகளும் உள்ளுக்குள்ளேயே அழுகின்றன. பிளவுக்கு வெளியில் தலையைக் காட்டி உள்ளே இழுத்துக்கொள்ளும் நீர்ப்பாம்பாய் அது இன்னும் வந்தும் வராததுமாய் மறைந்து சிரிக்கிறது. பொறுமையாக நூலிழை எத்தனை முறை அறுந்தாலும் பின்னும் […]

அறுந்த செருப்பு

This entry is part 4 of 10 in the series 17 மார்ச் 2019

வளவ. துரையன் காதைக் குடைந்துவிட்டுத் தூக்கிப்போடும் குச்சியாய் என்னை வீசி எறியாதே. சுளையை உரித்துத் தின்ற பின் எறிந்து விடுகின்ற தோலென்றே என்னை நினைக்காதே. மை தீர்ந்தபின் இனி எழுதவே முடியாதென நினைத்து எறிகின்ற பேனாவன்று நான். கைப்பிடி  அறுந்த பையை மீண்டும் தைத்து வைத்துக் கொள்ளலாம் கண்ணே! அறுந்து போன செருப்பு கூட தைத்து வைத்துக் கொண்டால் தக்க காலத்தில் கை கொடுக்கும் அன்றோ? தைக்க ஊசி நூலை விட முதலில் மனம்தான் தேவை.

கேள்வி

This entry is part 3 of 10 in the series 17 மார்ச் 2019

இரும்படுப்பு அருவாமனை என்று கூவிப் போகிறாள் கைக்குழந்தையுடன் கூடை முறம் வேணுமா கேட்டுப் போகிறார் கிழவி ஒருவர் பால்காரரின் கணகண ஒலி இன்னும் பரிதாபமாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறது சாணை பிடிப்பவரின் வண்டிச் சக்கரம் சும்மா சுற்றுகிறது ஓலைக் கிலுகிலுப்பைக் கொடுத்து அரிசி வாங்குபவள் எங்கே போனாளோ? பூம்பூம் மாடு இல்லாமல் மேளச் சத்தம் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது எல்லாமே நவீனமானால் மரபெங்கே போகும் என்ற கேள்வி எழுகிறது.

தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)

This entry is part 2 of 10 in the series 17 மார்ச் 2019

( கோ. மன்றவாணன்       கடலூர் நகராட்சியில் புதுவண்டிப்பாளையம் என்ற பகுதி உள்ளது. அதைப் பண்டிதர் பாளையம் என்றும் புலவர் பாளையம் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். புலவர்களே நிறைந்த பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. என்னுடைய தமிழாசிரியர்கள் தண்டபாணி, சம்பந்தனார் ஆகியோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. அந்தப் பகுதியில்தான் அப்பர் கரையேறிய இடமும் உள்ளது. அத்தகைய தமிழ்மணந்த ஊரில் 13-07-1922 அன்று பிறந்து வளர்ந்தவர் சுந்தர. சண்முகனார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பேரறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் […]

2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்

This entry is part 1 of 10 in the series 17 மார்ச் 2019

osted on March 16, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/CPeN7GhTpz4 https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/ https://youtu.be/4YgmCu7dfS4 https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323 https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3 https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4 https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10 ++++++++++++++++++++++++ பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப் படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு […]